பெங்களூருலிருந்து ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாதீர்கள் : முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெங்களூருலிருந்து ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாதீர்கள் : முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (20)
Advertisement
ஸ்டாலின், ரிமோட் கன்ட்ரோல், எடப்பாடி பழனிச்சாமி

சென்னை : புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாமல் இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.


ஸ்டாலின் அறிக்கை :


2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான “ஹேட்ரிக்” சாதனை செய்திருக்கிறது. அப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற கட்சி தலைவரை பதவியேற்றுக் கொள்ள இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் அழைத்திருக்கிறார்.தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே நோக்கமாக இருந்தது. பதவிக்காக அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளோ, உள்கட்சி குழப்பங்களோ, அதிகாரப் போட்டியின் விளைவான கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்களோ, க்ரீம்ஸ் சாலை பட்டாசு வெடிக்கும் காட்சிகளோ, மாநிலத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் ஆபத்தாக முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை காட்டியது.


அவசர கோலம் :


பதினைந்து தினங்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அளித்திருக்கும் காலக்கெடு குதிரை பேரத்திற்கு வித்திடும் என்பது ஒரு புறமிருக்க, அவசர அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பது தமிழக நலனுக்கு உகந்ததாகவோ, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் வகையிலோ எவ்விதத்திலும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்றுக் கொள்கிறார் என்றும், அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது என்றும், நான் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக சேலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் எனது உதவியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆகவே அவசர கோலத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படாதீர்கள் :


புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், “பெங்களூர் ஜெயிலுக்கு” சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற “ஆட்டுவித்தலுக்கு” ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201717:30:32 IST Report Abuse
Thamizhan இதை தடுக்க செயல் தலைவர் செயலில் இறங்க வேண்டாமா ? EPS க்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டு இப்படி பேசிக்கொண்டு இருக்கிறாரே ? என்ன மனிதர்களோ ?
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
17-பிப்-201715:59:40 IST Report Abuse
நரி நல்ல கோளாறு சொல்லி இருக்கிறீர்கள். எல்லோருமாக சேர்ந்து மக்கள் நலனுக்கு உழையுங்கள். 1 வருடத்திற்குள்ளாக அடுத்த தேர்தல் வந்து மக்கள் வரிப்பணம் வீண் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201714:01:13 IST Report Abuse
Maddy திமுக தலைவரை எப்படி நீங்கள் உங்கள் தூண்டிலில் சிக்கிய கனிமொழி என்ற மீனை வைத்து ஆட்டி படைத்தீர்களோ அதே போல் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சுறாமீன் தான் ஈ,பி.எஸ்... எப்படியோ ஓ.பி.எஸ் ஐ உங்கள் சிரிப்பாள் ஒழித்துவிட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
17-பிப்-201713:13:33 IST Report Abuse
A. Sivakumar. செயல் தலைவர் அவர்களே. அப்போல்லோவுக்கு அடுத்த பேஷன்ட்டை அனுப்பத் திட்டமா?
Rate this:
Share this comment
Cancel
tamilarasan k - madurai,இந்தியா
17-பிப்-201713:01:03 IST Report Abuse
tamilarasan k மன்னார்குடி மாஃபியா ஆட்சிதான் நடக்க போகிறது..அதில் என்ன சந்தேகம்..அதை தடுக்க இவர் வராவிட்டால் இவரும் அந்த கூட்டத்திற்கு துணைபோனவரே...
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201716:14:53 IST Report Abuse
Thamizhanஸ்டாலின் அவர்களே, ஒரு குற்றவாளியின் இந்த பினாமி அரசை செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் அணுகி தடை வாங்குங்கள். அது தான்ஒரு பொறுப்பான கட்சி நாட்டு மக்களுக்கு செய்யக்கூடிய பேருதவி. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??...
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-பிப்-201712:47:26 IST Report Abuse
Panneerselvam Chinnasamy தி மு க வேண்டுகோளில் உள்ள ஒரு தெளிவான அரசியல் சட்டத்தின்படி ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தை பாராட்டுகிறேன்... மக்கள் போட்ட ஓட்டுக்கு மரியாதை கொடுத்து மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக ஆட்சி புரிய வேண்டியது அ தி மு க கடமை... இதை தான் ஒவ்வொரு தமிழரும் எதிர் பார்க்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201712:08:49 IST Report Abuse
Ram,Mylapore. பொம்மை சாவி
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
17-பிப்-201711:43:26 IST Report Abuse
Sivagiri இவருக்கு திமுகவில் ரூட் க்ளியர் ஆகிடுச்சுன்னு மமதையில் பேசுறாரு . . .
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
17-பிப்-201711:40:31 IST Report Abuse
S.Ganesan திரு.ஸ்டாலின் அவர்களே நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் , சிறையிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் ஆட்சிதான் நடக்கும். இது ஊரறிந்த உண்மை. இதேதான் முன்பு ஜெயலலிதா சிறையில் இருந்த போதும் நடந்தது. அதைத்தான் இப்போது இவர்கள் அம்மாவின் ஆட்சிதான் நடக்கும் என்று சூசகமாக குறிப்பிடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201711:11:00 IST Report Abuse
Chandramoulli எல்லா அரசியல் கட்சிகளும் ரிமோட் முறையில் தான் ஆட்சி செய்கின்றன . அரசியல் இன்று பணம் செய்யும் தொழிலாக மாறி விட்டது .சேவை என்பது பெயருக்கு தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை