சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு எப்படி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு எப்படி?

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக சட்டசபை, நம்பிக்கை ஓட்டெடுப்பு

சென்னை : தமிழக சட்டசபையில், 'எண்ணி கழித்தல்' என்ற முறையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.


நம்பிக்கை ஓட்டெடுப்பு முறை :


நம்பிக்கை ஓட்டெடுப்பு எவ்வாறு நடைபெறும் என, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூடியதும், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன் மீது, சட்டசபை கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு கேட்டால், வாய்ப்பு அளிக்கப்படும். பின், ஓட்டெடுப்பு துவங்கும்.
சபையில், ஆறு பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக் வாரியாக, ஓட்டெடுப்பு நடக்கும். அந்த பிளாக்கில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களில், தீர்மானத்தை ஆதரிப்போரை எழுந்து நிற்கும்படி, சபாநாயகர் உத்தரவிடுவார். அவ்வாறு எழுந்து நிற்கும், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின் எதிர்ப்பு தெரிவிக்கும்; நடுநிலை வகிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை கணக்கிடப்படும். இவ்வாறு, ஆறு பிளாக்கிலும், ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகர் தவிர, மீதமுள்ள, 232 எம்.எல்.ஏ.,க்களில், 117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். அந்த எண்ணிக்கைக்கு குறைந்தால், ஆட்சி கவிழும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-பிப்-201716:18:53 IST Report Abuse
Barathan ரகசிய பேலட் ஓட்டிங் முறையே சிறந்தது. இந்த முறைக்கு யாருக்கும் பயப்பட்டு ஒட்டு போட வேண்டிய அவசியமில்லை
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-பிப்-201716:14:04 IST Report Abuse
Barathan emv எனும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை பயன்படுத்தி 133 எம்ல்லேக்களுக்கு ஒட்டு போட தெரியாதா என்ன? ஒரு சில எம்ல்லேக்கள் இரவில் அடித்த சரக்கு போதையில் இருந்தால் இவர்களால் எழுந்து நிற்க முடியாது. எனவே சட்டசபைக்குள் அனைத்து எம்ல்லேக்களும் அரசு டாக்டர்களால் மெடிக்கல் செக் அப்புக்கு உட்படுத்த படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
17-பிப்-201716:02:25 IST Report Abuse
Arun Kumar மக்கள்களுக்கு ஓட்டளிக்கும் விதிமுறை ஒன்று இந்த குதிரைகளுக்கு ஒன்றா?
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
17-பிப்-201715:34:34 IST Report Abuse
Arasan ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் தான் ஜனநாயகம் வெளிப்படையாக நடக்கமுடியும். வெளிப்படையாக ஓட்டெடுப்பு நடந்தால், ஜனநாயகம் அஞ்சி வாழ வழிவகுத்துவிடும்... ஒரு முறை தயவு செய்து சபாநாயகர், இந்த முடிவை அறிவிக்க வேண்டும் தமிழக மக்கள் நலன் கருதி,,,,,,மண்ணின் செல்வம் காக்கப்படும் அது பன்னீர்செல்வம் தான் அடுத்த நான்காண்டுகளுக்கு காக்கவேண்டும்...சபாநாயகர் துணிவோடு அழுத்தம் இல்லாமல், தானாக தன பத்தி காலம் முழுவது செயல்படவும், யாருக்கும் கூனி குருபி புகழ்ப்பாடமால் இருந்து சுயமரியாதையுடன் கண்ணியமாக மக்களால் மதிக்கப்பட ஒரு அற்புதமான தருணம். ரகசிய வாக்கெடுப்பு..... தயவுசெய்து இதற்கு ஆதரவு தெரிவியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramachandran G - Coimbatore,இந்தியா
17-பிப்-201715:05:45 IST Report Abuse
Ramachandran G It is better to have a secret ballot to protect the interest of individual Legislators. They would also get an opportunity to their vote according to their conscience . To make them rise their hand or asking them to stand up and then count only would lead to chaos and rest assured there could be bloodshed because our legislators are capable of .
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
17-பிப்-201713:57:55 IST Report Abuse
Sami இங்கே கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் மனக்குமுறலை தீர்க்க வேண்டும் என்ற ஆதங்கம் தான் தீருமே ஒழிய, சட்டமன்ற வாக்கெடுப்பில் எ.ப.சா வெற்றி பெறுவது உறுதி. இதை அக்கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களின் உண்மை நிலையை உரைக்கிறேன். அவர்களுக்கு தெரியும் நான்கு ஆண்டுகள் இவ்வாட்சி இருக்கும். மீண்டும் தேர்தல் வந்தால் வெல்ல மாட்டோம் என்றும் கூட தெரியும். எனவே இருக்கும் பதவி காலத்தை அனுபவிக்க தவற அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு லட்சம் வாக்காளர்களை ஓட்டளிக்க வைத்து ஏமாற்றி வந்தவர்கள். அரசு தேவையில்லை என்று வெறுமனே இலவு காத்த கிளி போல கூவிக்கொண்டு திரியவேண்டியதுதான் பாக்கி. பதவியில் அமர்ந்து அனுபவித்து ஆள்வார்கள். இந்த கருத்து கந்தசாமிகளும் அவர்களின் குடையின் கீழ்தான் நான்கு ஆண்டுகள் காலம் தள்ள வேண்டும். உங்கள் கருத்துக்களின் வீரியம் வெறும் பாறையில் இட்ட விதை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201713:54:54 IST Report Abuse
Maddy ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே உண்மையான எதிர்ப்புகள் ஆதரவுகள் பதியப்படும் இல்லையென்றால் பதவிக்கு ஆசைப்படும் எம்.எல்.ஏக்கள் கட்சி தலைமைக்கு அடிபணிந்து வாக்களிக்க நேரிடும் இதனால் இடப்படிக்க ஒளி பிரகாசமாக எரிகிறது...
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
17-பிப்-201713:03:31 IST Report Abuse
Muthukumaran ரகசிய வாக்கெடுப்பு ஒன்றே சரியான தீர்வு. சசியின் குண்டர்களுக்கு பயந்து எந்த பெஞ்சு தட்டியும் (ச.ம. உ ) மனசாட்சி படி ஒட்டு போட மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
17-பிப்-201712:20:28 IST Report Abuse
Jaya Prakash என்னடா இது..... நான் உனக்கு வோட்டு போடும்போது மட்டும் மூணு பக்கமும் அட்டையை கட்டி........ சரி ஒங்கிட்ட பேசி என்ன பிரயோஜனம்...... எங்களுக்குத்தான் மூளையே இல்லியே..... மகிழ்ச்சி..... வாழ்க.....
Rate this:
Share this comment
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
17-பிப்-201712:08:40 IST Report Abuse
THANGARAJ நம்பிக்கை வாக்கு எடுப்பை ரகசிய வாக்கு எடுப்பாக இருக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஈமெயில் govtam@nic .in அனுப்பலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை