சிறை உணவை சாப்பிட மறுத்த சசிகலா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறை உணவை சாப்பிட மறுத்த சசிகலா

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சசிகலா, இளவரசி, பெங்களூரு சிறை, சிறை உணவு

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 15) அடைக்கப்பட்டார். இவருக்கு முதல் வகுப்பு சிறை பெற்றுத்தர சசிகலாவின் குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து, தமிழக சிறைக்கு மாற்ற தமிழக அரசு சார்பிலும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 15ம் தேதி சிறைக்குள் சென்றது சசிகலாவிற்கு சிறை உடையாக 3 வெள்ளை புடவைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை நாளை அணிந்து கொள்வதாக சசிகலா கூறியதாக சிறை தகவல் தெரிவிக்கின்றன. இளவரசி மட்டும் சிறை உடையை அணிந்து கொண்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு சிறை உணவை சாப்பிட சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தரையில் படுத்து தூங்க முடியாததால், அன்று இரவு முழுவதும் சசிகலா தூக்கமின்றி இருந்ததாக சிறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா மற்றும் இளவரசி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில், அவர்களுடன் மேலும் 2 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடன் சசிகலாவோ, இளவரசியோ பேசவில்லை. தங்களுக்குள்ளாக மட்டுமே பேசிக் கொண்டுள்ளனர். பிப்ரவரி 16 ம் தேதி (நேற்று) காலையில் சிறை உணவை சாப்பிட சசிகலா மறுத்துள்ளார். ஆனால் இளவரசி கட்டாயப்படுத்தியதன் பேரில் சாப்பிட்டுள்ளார். நேற்று தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிகழ்ச்சியை, சிறையில் டிவி மூலம் சசிகலா பார்த்ததாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை