மதுரை: ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்;
தற்போது விசாரணை நடைபெறவில்லை. கள ஆய்வு மட்டுமே நடைபெறுகிறது. சென்னை, சேலம், கோவையில் கள ஆய்வுநடைபெற்றது. மதுரையில் கள ஆய்வுக்கு வந்துள்ளேன். கலவரம் நடந்த பகுதிகளை மட்டும் ஆய்வு செய்து வருகிறேன். அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்டு கொண்டு செல்ல மாட்டேன். அதிகாரிகள் சொல்வது எனக்கு வேதவாக்கு அல்ல; கலவரம் எங்கு நடந்தது என தெரியும்.
அறிவிப்பு வரும்:
விசாரணை செய்ய வரும் போது, பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்து விட்டு வருவேன். அப்போது அவர்கள் ஆதாரங்களை என்னிடம் கொடுக்கலாம். இன்னும் 15 நாட்களுக்கு பின் விசாரணை நடைபெற வாய்ப்பு உள்ளது. கலவரத்தின் போது சேதமடைந்த பகுதிகளை நான் பார்க்கவில்லை. விசாரணை நடக்கும் போது தான் முக்கிய கட்டத்தை எட்டும். அப்போது இரு தரப்பினரையும் விசாரிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.