அதிமுகவிலிருந்து சசிகலா, இடைப்பாடியை நீக்கினார் மதுசூதனன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து சசிகலா, இடைப்பாடியை நீக்கினார் மதுசூதனன்

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சசிகலா, நீக்கினார் மதுசூதனன்

சென்னை: அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் மதுசூதனனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அதிமுக பொது செயலர் சசிகலா அறிவித்திருந்தார். இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.


சசிகலா நீக்கம்:

இந்நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் நீக்கப்படுகிறார். வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் தினகரனை அதிமுக துணை பொது செயலர் பதவியில் அவசர அவசரமாக நியமித்தார்.


அமைச்சர்கள் நீக்கம்:

தொடர்ந்து அதிமுகவிலிருந்து முதல்வர் இடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன, தளவாய் சுந்தரம், வளர்மதி, ஆர்.பி., உதயகுமார். சி.விசண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சசிதரப்பை சேர்ந்த வைகைசெல்வன், அதிகாரம் யாருக்கு உள்ளது என மதுசூதனன் தெரியாமல் உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201703:22:39 IST Report Abuse
John Shiva   U.K பொது செயலாளர் தேர்வு செய்தது பிழை என்றால் முதலில் பன்னீரையும் மசூதனையும் சிறைக்கு அனுப்பவேண்டும் .உங்கள் 10 பேரில் அண்ணா தி மு க வைகைப்பற்றி பிஜேபி கு மாற்ற உங்களிடம் உள்ள திட்டம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
18-பிப்-201701:43:25 IST Report Abuse
bairava சபாஷ் சரியான தீர்ப்பு ..இதை அப்பபோவே தடுத்திருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை அப்போ சித்திக்கு பயமா ?எல்லாம் நாசமாகி போன பின்புதான் உங்களுக்கு எல்லாம் தெரியுதா? அரசியல் அனுபவம் முதுமை ஒன்றும் தெரியவில்லை பட்டுத்தெறிந்த பிறகே புத்தி வர நீங்கள் எல்லாம் அரசியல் கத்துக்குட்டியா என்ன ? அம்மா உங்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கவில்லையா இல்லை நீங்கள் எல்லாம் சொத்து பாதுகாப்பதில் கவனமாக இருந்தீங்களோ ?
Rate this:
Share this comment
Cancel
chockkalingam - Toronto,கனடா
18-பிப்-201700:24:04 IST Report Abuse
chockkalingam Thiru Vaigai selvan avargaley, thogithi pakkam sellum ennam irukkira madhiriyae theriyalayae.. .. Koovathoor'a vittu veliya vaanga.. pora pokka paattha innum naalu varusham koovathoor'la poela camp. ennavoe ellam adagu vacchi oru pathavi.
Rate this:
Share this comment
Cancel
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
17-பிப்-201722:48:22 IST Report Abuse
Sivan Mainthan 124 பேர் பைத்தியம் பிடித்து கொலைவெறியோடு அலைகிறார்களாம். ஏன்? சசிகலா இல்லாட்டா என்ன ஒரு வேலைக்காரியையாவது கூவத்தூர் ரெஸாட்டுக்கு அனுப்புங்கள். மூன்று நாளாக ஒரு பெண் காலில்கூட விழமுடியவில்லையாம்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
17-பிப்-201719:22:50 IST Report Abuse
Paranthaman ஏனய்யா வைகை செல்வன் 124 பேர்களை ஒரிஜினல் அதிமுகவிலிருந்து பிரித்து கூவத்தூரில் கொண்டு போய் அமுக்கி வைத்து விட்டு நன்றாக நடந்த அதிமுக ஆட்சியை அந்த கிரிமினல் பொம்பளை பேச்சை கேட்டு ஆடுவதுடன் இப்பொழுது நீங்கள் தான் அசல் அதிமுகவினர் போல் பேசி வருகிறீர்கள். கேட்கிற மக்களை எல்லாம் கேனையன்கள் என்று எண்ணுகிறீர்களா. அதிமுகவில் எந்த கட்சி அசல் எது டூப்ளிகேட் என்பதை தேர்தலில் நிரூபணமாகும் சரியா. ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்று அன்று புரட்சி தலைவர் திமுகவுக்கு பாடினார்.. அந்த பாட்டை இப்பொழுது அவர் கட்சிக்கே பாடுகிறீர்கள் அப்படித்தானே.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
17-பிப்-201718:14:30 IST Report Abuse
Gnanam பொது செயலர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை.. ஆகவே சசிகலாவின் அதிகாரம் செல்லாது. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்தான் இந்த குழப்பத்தை தீர்க்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201718:13:59 IST Report Abuse
Kumar மன்னார்குடியை ஆதரிப்பவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சினைகளை எல்லாம் கொஞ்ச நாட்களில் அதிமுக மறந்து போகும். நமது பிரதமரின் நாட்டு நல திட்டங்களை கொஞ்ச நாட்கள் கூச்சல் போட்டுவிட்டு மக்கள் மறந்துவிட வில்லையா? ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு 'ஐஎஸ்ஐ' முத்திரை குத்திவிட்டதை மறக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
Rate this:
Share this comment
Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா
17-பிப்-201719:39:43 IST Report Abuse
Senthil Kumar Kandasamyசரியான கருத்து,....
Rate this:
Share this comment
Cancel
ravi - PARAMAKUDI,இந்தியா
17-பிப்-201717:55:11 IST Report Abuse
ravi வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Madhu - Bangalore,இந்தியா
17-பிப்-201717:54:27 IST Report Abuse
Madhu சின்னம்மா இல்லாவிட்டால் அதிமுக இல்லை. அப்படிப்பட்டவரை துரோகிகள் நீக்குவது என்பது சிரிப்பாக இருக்கிறது. சின்னம்மா இதுவரை உலகில் பிறந்த பெண்களிலேயே தலை சிறந்தவர். தமிழர்களே சின்னம்மாவுக்காக ரத்தம் சிந்த தயாராகுங்கள்.
Rate this:
Share this comment
Logesh - Chennai,இந்தியா
17-பிப்-201722:44:04 IST Report Abuse
Logeshமது நீங்க காமெடி தானே சொன்னிக...
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
17-பிப்-201717:04:35 IST Report Abuse
Bharathi தலைமை நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாங்க. பொதுச்செயலாளர் தேர்தல் வையுங்க. அப்ப இந்த மாபியா கும்பலுக்கு தெரியும் யாருக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்குன்னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை