கூவத்தூரில் தென்மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்: ஐகோர்ட் கிளையில் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கூவத்தூரில் தென்மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்: ஐகோர்ட் கிளையில் மனு

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனி மகன் ஆணழகன் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தென்மாவட்டங்களை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதியில் பணியாற்றாததால், அங்கு தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. சொகுசு விடுதியில் தங்கியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை மக்கள் பணியாற்ற செல்ல வேண்டும் என தலைமை செயலாளர்,உள்துறை செயலாளர், டிஜிபி,காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக்கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், கலையரசன் கொண்ட பெஞ்ச், விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், முறையான எதிர்மனுதாரர்களை சேர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.,வை ஆஜர்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதிகள் சுப்பையா, நிஷா பானு ஆகியோர் கொண்ட பெஞ்ச் ஒத்திவைத்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை