சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று (பிப்.17 ம் தேதி ) போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நிலையில் மெரினாவில் சிலர் போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனையடுத்து அங்கு 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையிலும் இது போன்ற தகவல் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.