மேடையில் காட்சி மட்டும் கொடுத்த பிரியங்கா| Dinamalar

மேடையில் காட்சி மட்டும் கொடுத்த பிரியங்கா

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காட்சி மட்டும் கொடுத்த பிரியங்கா

ரேபரேலி: சோனியாவின் மகள் பிரியங்கா உ.பி.,யில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் ஏதும் செய்யாமல் கையை மட்டும் அசைத்தபடி, மேடையில் நின்றபடி காட்சி கொடுத்தபடி சென்று விட்டார். ராகுல் மட்டுமே பேசினார்.
நாடு முழுவதும் காங்., கூட்டத்தில் பங்கேற்பதோ, பேசுவதோ, பிரியங்காவுக்கு வழக்கம் இல்லை. அதே நேரத்தில் தனது தாயாரின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நடக்கும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்பார். இன்று ரேபரேலியில் நடந்த கூட்டத்தில் பிரியங்காவும், துணைத்தலைவர் ராகுலும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ராகுல் மட்டும் பேசினார். மேடையில் இருந்த பிரியங்கா, தொண்டர்களை நோக்கி கையசைத்ததுடன், சிரித்தவாறு இருந்தார். ஆனால் அவர் பேசாமல் கிளம்பி சென்று விட்டார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.


வெற்று வாக்குறுதி:

முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில் மின்சார கட்டணம் பாதியாக குறைக்க வேண்டும். விவசாய கடன்தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு உரியவிலை கிடைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மோடி நினைத்தால், 15 நிமிடத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய அவர் மறுப்பது ஏன்? மோடி வெற்று வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கிறார். ஆனால் எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பீஹாருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என மோடி கூறினார். ஆனால் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு மோடி எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை