தேர்தலை விரும்பும் மக்கள்: ஆனந்த்ராஜ் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை விரும்பும் மக்கள்: ஆனந்த்ராஜ்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (38)
Advertisement
தேர்தலை விரும்பும் மக்கள், ஆனந்த்ராஜ் தகவல்

சென்னை: தமிழக மக்கள் தேர்தலை விரும்புவதாகவும், ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றும் பிரபல நடிகரான ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில்அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என முன்னர் நான் கூறியதற்கு தற்போது அனைவரிடமும் ஆதரவு கிடைத்து வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்கும் முன்னர் முதலில் மனசாட்சியிடம் கருத்து கேட்க வேண்டும். அடுத்து உறவினர்களிடமும் பின்னர் தொகுதி மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். ஜெயலலிதா தான் வேட்பாளர் என்ற கருதிஓட்டு போடுங்கள் என நான் கூறினேன். நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.


ஆதரவு கிடைக்காது:

நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக இருந்துவிட்டு போய்விட வேண்டுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுத்தால், இந்த காலத்தை கடந்தால், மக்களின் ஆதரவு கிடைக்காது. எங்களுக்கு பதவி கிடைத்தால், இரண்டு நல்ல காரியத்தை செய்து விட்டு தப்பித்துவிடுவோம் மக்கள் மறந்துவிடுவார்கள் என எம்.எல்.ஏ.,க்கள் கருதுகிறார்கள். ஆனால் முன்னர் போல் மக்கள் கிடையாது. இளைஞர்கள் வீறு கொண்டு நடக்கிறார்கள். சமூக வலை தளத்தில் அனைத்து செய்திகளும் பரவுகினறன. இன்று உள்ள கொதிப்பு அனைவருக்கும் தெரிகிறது. செய்யக்கூடாத வற்றை அதிமு.க எம்.எல்.ஏ.,க்கள் செய்கிறார்கள்

உண்மையான அதிமுக யார் என மக்கள் தான் கூற வேண்டும். அதிக பெண்களுக்கு ஜெ., வாய்ப்பு கொடுத்தார்கள். அமைச்சர் வளர்மதி தைரியம் இருந்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் சந்திக்க தயாரா? அவரை எதிர்த்து நானும் நிற்கிறேன். அவர் வெற்றி பெற்றால், பதவியில் நீடிக்கட்டும். நானும் ஓட்டளித்தவன் என்ற முறையில், உங்களை ஒரு தினம் சிந்தித்து உங்கள் மனசாட்சிக்கு கேட்டு பொது மக்களைவாக்களித்த மக்களை கேட்டு வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கோருகிறேன் . நீங்கள் நல்ல அரசியல்வாதி என மக்கள் முடிவெடுக்கும் வகையில், நீங்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்.


ஜனாதிபதி ஆட்சி:

இன்று அதிகாரத்தை யார் அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையை கலைத்துவிட வேண்டும். சட்டம் ஒழுங்கு கெடும் சூழ்நிலை வந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கு அமைதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaraman Madhavan - Chennai,இந்தியா
18-பிப்-201705:44:54 IST Report Abuse
Balaraman Madhavan நானும் பொதுத் தேர்தலைதான் விரும்புகிறேன்,
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
18-பிப்-201704:34:02 IST Report Abuse
Suman தைரியமாக உண்மையை பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Paramuk - kumari,இந்தியா
18-பிப்-201704:22:08 IST Report Abuse
Paramuk தமிழ் நாட்டுக்கு தற்போது, சாதி / மதம் / பணக்காரன் / ஏழை / ஆண் / பெண் வித்தியாசம் கருதாமல் ஆளும் திறன் கொண்ட தைரியமான தலை தேவை. பணம் செலவானாலும், தேர்தல் தான் மக்கள் ஆட்சி வர ஒரே வழி தேர்தல் பண செலவை காட்டிலும், இந்த ஆட்சி நான்கரை வருடத்தில் அதை விட அதிகமாகவே சுருட்டுவார்கள். அதுதான் ஒரே கவலையாக இருக்கிறது சசி ஒரு அட்டை, எடுப்படியும், மற்ற சில தலைகளும், இந்த அட்டைக்கு துணை போகிறவர்கள் தான். இந்த அட்டை தமிழ் நாட்டின் ரத்தத்தை உறிஞ்சு குடிக்க தொடங்கி விட்டது. முழுவதும் குடிக்கும் வரை விடாது. தீ கொழுத்தி அழித்தால் தான் இந்த அட்டை சேது விழும். தமிழ் மக்களே, ஒருவேளை இந்த இந்த அட்டை கூட்டம் நாளைக்கு பொறுப்புக்கு வந்தால், நான்கரை வருடத்திற்கு பிறகு தமிழ் மக்கள் மறந்து விடும் அளவிற்கு இந்த அட்டை மக்களின் மூளையையும் உறிஞ்சி விடும். என்ன செய்வது ஓட்டுக்கு பணம் வாங்கும் போதே யோசிக்கணும் அதனால் தான் இந்த MLA க்கள் இந்த ஆட்டம் ஆடுகின்றனர். அடுத்த தேர்தலில் கவனித்து மறக்காமல் கவனித்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
18-பிப்-201703:31:14 IST Report Abuse
Sithu Muruganandam எப்போது நடிகர்கள் ஆட்சிக்கு வரத்தொடங்கினார்களோ அப்போதே தியாகம், மக்களுக்காக உழைக்கும் தொண்டு, பொதுநலம் போன்றவையெல்லாம் மறைந்துபோய்விட்ட்ன. மக்களுக்காகவே தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த எத்தனையோ தியாகிகள் காணாமல் போய்விட்ட்னர். ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் வேஷம் போட்டு நடித்தால் போதும் என்பது ஒரு கொள்கையாகவே வந்துவிட்ட்து. முதலில் இந்த மினுமினுக்கும் பித்தளைகள் நாங்கள் சொக்கத்தங்கம் என்று சொல்வதை விட்டு விட வேண்டும். மக்கள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று இந்த வேஷதாரிகள் கருத்துவேறு சொல்ல ஆரம்பித்துவிடடார்கள். தலையெழுத்து. இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தினாலே போதும், நாடு நிம்மதிப்பெருமூச்சுவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Modify India - Calgary,கனடா
18-பிப்-201700:41:25 IST Report Abuse
Modify India Super observation If ADMK MLAs want to temporarily enjoy power, let them vote for EPS and enjoy power for couple of more days. But forget politics forever If they think they will loot now with Sasikala and join OPS camp in next election, we know who you are If you just look at EPS' porfolio, you will clearly understand what happens if EPS is elected - this guy will be dummy and Sasi & Co will loot TN left, right and center
Rate this:
Share this comment
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
18-பிப்-201700:21:59 IST Report Abuse
ngopalsami வாக்கெடுப்பு நடந்த மறுநாளே, இந்த உறுப்பினர்கள் தங்களின் சொந்த தொகுதிக்கு போக வேண்டும். அப்பொழுதான் இந்த சதிகாரர்களை இருக்கு மாயாக்களின் எதிர்ப்பு. ஆனந்தராஜ் கூறுவதுபோல் மாரு தேர்தல்தான் நல்ல முடிவு. எவ்வளவோ வேண்டாத குழப்பத்தை தவிர்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
17-பிப்-201723:36:20 IST Report Abuse
Cheran DMK is the only proven party which can bring development to Tamilnadu whether it is Agriculture(Free power to all the farmers for irrigation, Farmers market), Industry(lot of Industries like Hyundai, BMW, Ford, many many many more industries), IT industry (second biggest IT City after Bangalore), Textile and Film industry. Also DMK brought lot of pro poor schemes like Medical insurance for every one, 69% reservation for backward class and many more. Though there are some over hyped alleagations like 2G and Srilankan issues, DMK is the only party can Save Tamilnadu with Self respect. This is the truth as a common man.
Rate this:
Share this comment
Cancel
Paramuk - kumari,இந்தியா
17-பிப்-201723:20:15 IST Report Abuse
Paramuk Honourable Governor of Tamil Nadu Current happenings in Tamil Nadu politics proves that Sasikala's group is a leech. Besides, Most of the senior political leaders have been severely infected by this leech family. Jayalalitha also had stabbed on people's back by helping this leech family. Moreover, by digging most of other party leaders legacy, surely, there are obvious corruption pending cases. Every time, all these leaders assure that their party would be the best as former CM, late Mr. Kamarajar. Right now, Tamil Nadu need a leader who can rule with no favouritism based on e/religion/rich/poor/male/female. My humble request is, please allow the people once again to elect their leader by a re-election even though this will cost vast expense. Thanking you
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201722:22:51 IST Report Abuse
யுவராஐ் ஆனந்த் ராஐ் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் சசி கலா குடும்பத்திற்கு பயப்படும் போது நீங்கள் தைரியமாக உங்கள் கருத்தை சொல்கிரீர்கள்.உங்களை தலை வணங்குகிரேன்.உங்களை போன்றவர்கள் தான் அரசியலில் வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-பிப்-201722:09:48 IST Report Abuse
balakrishnan பெரும்பாலான மக்கள் மறு தேர்தலை தான் விரும்புகிறார்கள், அது தான் சரியாக இருக்கும், மக்களும் தங்கள் விருப்பம் எதுவோ அதை தேர்ந்தெடுக்க்க நல்ல வாய்ப்பு, சசி கூட்டத்தை விரட்டவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை