உ.பி.,க்கு தத்து பிள்ளைகள் வேண்டாம்: பிரியங்கா| Dinamalar

உ.பி.,க்கு தத்து பிள்ளைகள் வேண்டாம்: பிரியங்கா

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தத்து பிள்ளைகள் வேண்டாம், பிரியங்கா

ரேபரேலி: உ.பி.,க்கு சொந்த மகன்கள் உள்ள நிலையில் தத்தெடுத்த பிள்ளைகள் வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா கூறினார்

ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்னை மகனாக உ.பி., தத்தெடுத்து கொண்டதாக மோடி கூறுகிறார். ஆனால், வளர்ச்சிக்காக உ.பி.,யை யாராவது தத்தெடுக்க வேண்டுமா? உ.பி.,க்கு சொந்த மகன்கள் (ராகுல், அகிலேஷ்) உள்ள போது, தத்தெடுத்த மகன்கள் தேவையா? உங்களுக்காக உழைப்பவர்களுக்காக ஓட்டு போடுங்கள். தவறான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு வேண்டாம். வளர்ச்சி பற்றி அமேதி மக்களிடம் கேட்க வேண்டும். உ.பி., இளைஞர்கள் தலைவராகவும், அமைச்சர்களாகவும், மாநில வளர்ச்சிக்காகவும் உழைக்கும் திறன் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


வெற்று வாக்குறுதி:

முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: உ.பி.,யில் மின்சார கட்டணம் பாதியாக குறைக்க வேண்டும். விவசாய கடன்தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு உரியவிலை கிடைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மோடி நினைத்தால், 15 நிமிடத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய அவர் மறுப்பது ஏன்? மோடி வெற்று வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கிறார். ஆனால் எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பீஹாருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என மோடி கூறினார். ஆனால் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு மோடி எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Chennai,இந்தியா
18-பிப்-201712:26:30 IST Report Abuse
Tamilan பித்து பிள்ளையை விட தத்து பிள்ளை மேல் என்று மக்கள் நினைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ravi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201708:05:47 IST Report Abuse
Ravi உங்க அம்மா இந்த ஊரா? நீங்களே உங்க வாயால் கெடுகிறீர்களே?
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-பிப்-201707:48:06 IST Report Abuse
தேச நேசன் இதனை சொல்வது இந்தியாவில் பிறந்த இத்தாலிய தத்துப்பிள்ளை
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-பிப்-201707:46:41 IST Report Abuse
தேச நேசன் தத்து பிள்ளைகள் வேண்டாம் போபோர்ஸ் திருடன் ராஜீவின் தத்திப் பிள்ளை போதுமோ ?
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
18-பிப்-201705:31:52 IST Report Abuse
Ambika. K இருக்கும் தத்தி பிள்ளைகள் போதும் புதிதாக தத்து பிள்ளை வேண்டாம் என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dindigul,இந்தியா
18-பிப்-201703:58:13 IST Report Abuse
Krishna நீ பொத்து புள்ள...
Rate this:
Share this comment
Cancel
Krish -  ( Posted via: Dinamalar Android App )
18-பிப்-201700:10:44 IST Report Abuse
Krish Not even 1% she looks like an Indian Women. let the ball bounce!? Her hair cut resembles suitable for Sun Bath to heal her wishes but not for solving the problem of common Indians! the poor people of Indias paid for her cut and appearance!?.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-பிப்-201722:57:59 IST Report Abuse
bal இவர் இந்திரா காந்தி போல் தோற்றம் அளிப்பதால் சத்தியமாக மக்கள் இவரை தேர்வு செய்ய மாட்டார்கள். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-பிப்-201722:53:12 IST Report Abuse
adalarasan உங்க அம்மா வாழ்த்தி, அப்பவழி முன்னேர்கள் எல்லாம் எந்த ஊர் அம்மா?ஸோனியாஜி, பெரோஸ் காந்தி?
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
17-பிப்-201722:00:47 IST Report Abuse
rajarajan Integral Coach Factory இருப்பது தமிழ்நாட்டில் ஆனால் அதற்கான யூனிவர்சிட்டியை குஜராத்தில் ஆரம்பிக்கிறார், அந்த யுனிவர்சிட்டியில் படித்தவன் எல்லாம் இங்கே வேலைக்கு வரப்போகிறான், அதிவேக இரயிலை குஜராத்தில் ஆரம்பிக்கிறார், உலக முதலீட்டார்களின் மாநாட்டை குஜராத்தில் நடத்துகிறார், இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். தன்னை இன்னும் குஜராத்தின் முதலமைச்சராக நினைத்துக் கொண்டிருக்கும் இவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காமல் கண்ணைத்திறந்துகொண்டு பாருங்கள். இவரை குறை கூறினாலே தேசத்துரோகம் செய்துவிட்டது போல் இங்கே எழுத ஆரம்பித்து விடுவார்கள்
Rate this:
Share this comment
ganesh - chennai,இந்தியா
18-பிப்-201704:52:54 IST Report Abuse
ganesh1) Vibrant Gujarat is a biennial state event happening for last years . Being a BJP ruled state where PM hailed, state head invited PM. 2) Bullet train is also proposed between Chennai and Bengaluru. It is under study....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை