இடைப்பாடிக்கு எதிராக ஓட்டளிக்க தி.மு.க., முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடிக்கு எதிராக ஓட்டளிக்க தி.மு.க., முடிவு

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இடைப்பாடிக்கு எதிராக ஓட்டளிக்க தி.மு.க., - காங்., முடிவு

சென்னை: சட்டசபையில் நாளை(பிப்.,18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.

இடைப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவர் 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மை ஆதரவை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார். இதையடுத்து, சட்டசபையில் நாளை(பிப்.,18) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.


இடைப்பாடிக்கு எதிராக ஓட்டு


இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று(பிப்.,17) மாலை நடந்தது. இதில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 89 பேரும் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டது.காங்., மெளனம்

இதற்கிடையே தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், "இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிப்பார்கள் என வெளியான தகவல் பொய்யானது. எனக்கு டுவிட்டர் பயன்படுத்த தெரியாது. எனது பெயரில் வேறு யாரோ டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். காங்., எம்.எல்.ஏ.,க்கள் நாளை (பிப்.,18) சட்டசபையில் ஓட்டளிக்கும் போது எங்கள் முடிவை தெரிந்து கொள்ளுங்கள். சட்டசபையில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. காங்., தலைமை எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்படுவார்கள்" என்றார்.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டத்திலும் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டது. அக்கட்சியில் உள்ள ஒரே ஒரு எம்.எல்.ஏ., எதிராக ஓட்டளிக்க உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
18-பிப்-201707:48:29 IST Report Abuse
mindum vasantham ரெட்டை இலையை அளிக்க முடியாதுல பன்னீர் செல்வம் மூலமா மீண்டு வரும்
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201723:43:44 IST Report Abuse
Kumar ஸ்டாலின் சார், டிஎம்கே மற்றும் ஏடிஎம்கே பலமாக இருப்பதனால்தான் .......தீய சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தவிக்கின்றன. ஓன்று பலவீனப்பட்டாலும் காரியம் கெட்டுவிடும். கவனமுடன் செயல்படுங்கள். சீமை கருவேல மர வித்துகளை விதைத்து விடாதீர்கள். வளர்ந்துவிட்டால் அழிப்பது கடினம்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-பிப்-201723:05:13 IST Report Abuse
adalarasan நேற்றறு ஒரு முடிவு? நான் என்ன லூசா "பன்னீர்செல்வத்தை ஆதரிக்க " என்று பேச்சு? நாளை என்ன வருமோ? விவஸ்தையே இல்லை இங்கு யாருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
govin - ny,யூ.எஸ்.ஏ
17-பிப்-201721:47:31 IST Report Abuse
govin மக்கள் தங்களுடைய MLA களுக்கு பழனிசாமிக்கு எதிராக ஓட்டளிக்கும்படி SMS அனுப்ப வேண்டும். அந்த SMS களின் எண்ணிக்கை அவர்கள் பெற்ற ஓட்டுக்களை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இனி அரசியல் எதிர்காலம் இருக்காது என்பது தெரியும் செய்வீர்களா
Rate this:
Share this comment
TAMIL KING - CHENNAI,இந்தியா
17-பிப்-201722:56:13 IST Report Abuse
TAMIL KINGSent SMS, WhatsApp and e-mail message to the MLA of my constituency to "VOTE AGAINST" tomorrow. Please Google and send SMS and WhatsApp message to your MLA too. Please do it. It is your duty....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
17-பிப்-201721:14:42 IST Report Abuse
Gnanam நல்ல முடிவு. ஒவ்வொரு நாளும் முடிவை மாற்றாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
paul - chennai  ( Posted via: Dinamalar Windows App )
17-பிப்-201721:08:12 IST Report Abuse
paul Thirunavukarar is sasikala's sombu.....
Rate this:
Share this comment
SombuNarayan - vengayam,பெலாரஸ்
18-பிப்-201709:19:52 IST Report Abuse
SombuNarayanபன்னீர் மஸ்தானின் சொம்பு.. ஏன் நிறைய எம் எல் எ க்கள் எதிக்கிறார்கள் தெரியுதா?...
Rate this:
Share this comment
Cancel
Arunachalam,Devakottai - Devakottai - 630302,இந்தியா
17-பிப்-201719:38:49 IST Report Abuse
Arunachalam,Devakottai காங்கிரஸ் மேலிடத்துக்கு மொத்த தமிழக மக்களின் எண்ணம் கட்டாயம் தெரிந்திருந்தும் , இப்படி த.நா காங்கிரஸ் மதில்மேல் பூனையாக இருக்கிறார்களே . தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ்க்கு தமிழகத்தில் எதிர்காலமே இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
17-பிப்-201719:37:40 IST Report Abuse
Ramesh Kumar கருணா மட்டும் இன்று தெம்புடன் இருந்திருந்தால் அதிமுக எம் எல் ஏக்கள் சிதறிஇருப்பார்.....என்ன இருந்தாலும் தந்தையின் சாமர்த்தியம் தமயனுக்கு வராது....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-பிப்-201719:32:51 IST Report Abuse
S.Baliah Seer ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியுறும். எம்.எல்.ஏக்களை அடைத்து வைப்பது ,விப் என்ற பெயரில் பயமுறுத்துவது, யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறீர்கள் என்று வெளிப்படையாக கேட்பது ஜனநாயகமல்ல. அடிமை நாயகம். இன்னும் கொஞ்ச நாள் போனால் மக்களுக்கு பணம் கொடுத்து விட்டோம் அவர்களும் ஒருவருக்குப்பின் ஒருவராக வந்து பூத்தில் நேரிடையாக யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று மக்களை கேட்கும் நிலை வரும். இந்திய அரசியல் சட்டத்தில் நிறைய மாற்றம் தேவைப் படுகிறது. தற்போதைய சூழ் நிலையில் தமிழ் நட்டு மக்களில் நூற்றுக்கு 90 -சதவிகிதம் மக்களுக்கு மேல் தேர்தலை விரும்புகிறார்கள். கவர்னர் அழுத்தம் காரணமாக உண்மை நிலை அறியாமல் ஒரு பிரிவினருக்கு சலுகை கொடுத்தது தவறு. ஆதலின் தி.மு.க முடிவு சரியானது.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-பிப்-201719:32:43 IST Report Abuse
vnatarajan ADMK சசிகலாவின் சார்பில் 124 MLA க்களில் மேலும் 9 MLA க்கள் எதிர் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்து ஓட்டுப்போட்டால் பழனிச்சாமி அரசு கவிழ்ந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை