பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டு போடுங்கள்: ஓ.பி.எஸ்., வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டு போடுங்கள்: ஓ.பி.எஸ்., வேண்டுகோள்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டு போடுங்கள்: ஓ.பி.எஸ்., வேண்டுகோள்


சென்னை: ‛நம்பிக்கை ஓட்டெடுப்பில் இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் குடும்ப ஆட்சி வர கூடாது என செயல்பட்டவர் ஜெயலலிதா. அவர் குடும்ப ஆட்சியை கடுமையாக எதிர்த்தவர். ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட குடும்பம் தற்போது அ.தி.மு.க.,வை கைக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த குடும்பத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செயல்படுவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். எம்.எல்.ஏ.,க்கள் எவ்வித ஆசை வார்த்தைக்கும் மயங்க கூடாது.
சட்டசபையில் நாளை (பிப்.,18) நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar - Bangalore,இந்தியா
18-பிப்-201708:31:09 IST Report Abuse
Prem Kumar இன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமுன் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் எதிர்காலத்திற்கு தாக்க ஒரு நிலைப்பாட்டை தருகின்ற அரசாக பழனிசாமி அரசு இருக்குமா என எண்ணி பின் முடிவெடுக்க வேண்டும். இன்று ஒரு தவறு செய்து விட்டால், நான்கு ஆண்டுகளுக்கு அதை சரி செய்ய வாய்ப்பு குறைவு என்பது மட்டுமல்ல - பல்வேறு புது பிரச்சனைகள் உருவாக இது வழி வகுத்து- தமிழ் நாடு குடும்ப அரசியலில் சிக்கி மென்மேமேலும் ஊழல் பெறுக வாய்ப்பை உருவாக்கிவிடும்.. இதுபன்னீர்செல்வத்திற்கும்-பழனிசாமிக்கும் நடைபெறும் போட்டியல்ல. ஒவ்வொரு தமிழனின் வரும் நான்காண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விஷயம். தெளிவான சிந்தனையோடு செயல்படுவீர். தயவு செய்து தமிழக மக்களின் எதிர்காலத்தை மனதில் நினைத்து வாக்களிக்க வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-201707:06:29 IST Report Abuse
Kasimani Baskaran எடப்பாடி சசியின் பினாமி என்று எல்லோருக்கும் தெரியும்... ஆகவே அவரை ஆதரிப்பது மக்களுக்கு விரோதமானது... எடப்பாடியை ஆதரித்தவர்கள் தொகுதிப்பக்கம் போனால் கண்டிப்பாக ஆபத்து...
Rate this:
Share this comment
Cancel
KIm - seoul,தென் கொரியா
18-பிப்-201706:29:18 IST Report Abuse
KIm திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் நல்ல அரசியல் வாதியாக முயலுகின்றீர்கள் I am sorry to say that உங்கள் தகப்பனாருக்கு உள்ள சாணக்கியத்தனம் இன்னும் உங்களுக்கு பத்தாது இன்னேரம் முக ஆரோக்கியத்துடன் வெளியில் இருந்து இருந்தால் EPS OPS அணி குறைந்தது 5 ஆக உடைத்திருப்பார் You must learn from your father தலைமைக்கு சாணக்யத்தனம் மிகவும் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-பிப்-201723:36:57 IST Report Abuse
Vijay D.Ratnam அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மாடல் அதிமுக 2016டன் எக்ஸ்பைரி ஆகிவிட்டது. 2017 ல் நியூவெர்ஷன் வந்துவிட்டது. இனிமேல் சசிகலா, திவாகரன், தினகரன்தான் அதிமுக. எப்படி பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி கோபாலபுர மாஃபியா குடும்ப சொத்தானதோ அதுமாதிரி எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று மன்னார்குடி மாஃபியா குடும்ப சொத்தாகிவிட்டது. குடும்ப ஆட்சியை ஒழிக்கவேண்டுமென்றால் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, போன்ற கட்சிகளை ஒழிக்கவேண்டும். ஜாதி, மதம் வைத்து பொழப்பு நடத்துற கட்சிகளை ஒழிக்கவேண்டுமென்றால் விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லீம் லீக், போன்ற கட்சிகளை ஒழிக்கவேன்டும். என்ன செய்யலாம்? மாட்டுக்காக வெகுண்டு எழுந்த இளைஞர்களும், மாணவர்களும், மீனவர்களும், வணிகர்களும், விவசாயிகளும், நெசவாளர்களுக்கு, தொழிலாளர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும், பெண்களும், பொதுமக்களும்,வேலைவாய்ப்பு இல்லாதவர்களும் நாட்டுக்காக வெகுண்டு எழும் காலம் கணித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வாட்ஸ் அப், ஒரு எஸ்எம்எஸ் போதும், ச்சும்மா அதிரும்ல.
Rate this:
Share this comment
Cancel
RAJ - chennai,இந்தியா
17-பிப்-201723:33:24 IST Report Abuse
RAJ Now Mr.Pandiyarajan, Ex-Minister d that the new whip for AIADMK party has not been appointed. Hence, disqualification of MLA post not been valid.
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
17-பிப்-201723:30:47 IST Report Abuse
appaavi கஷ்டம்தான்னு தோணுது, பார்ப்போம் இந்த மன்னார்குடி அடிமைகள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்று...தினகரன் போன்றவனெல்லாம் முதல்வர் ஆவதை சகிக்கவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201723:26:20 IST Report Abuse
Siraj,UnitedArabEmirates OPS sir, please continue your fight against the Mannakudi Mafia, public will be supporting you always...Amma Vaazhga....
Rate this:
Share this comment
Cancel
john - chennai,இந்தியா
17-பிப்-201723:14:36 IST Report Abuse
john Ops is not fit to be cm of tamilnadu. ஜெ.வை மருத்துவமனையில் பார்க்க வந்த அருண்ஜெட்லி, அவரது சென்னை நண்பர்களைத் தொடர்புகொண்டு "ஜெ.வின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைவராக யார் வருவார்? ஓ.பி.எஸ்.ஸுக்கும் சசிகலாவிற்கும் உள்ள உறவு எப்படி? அதில் விரிசல் வந்தால் அ.தி.மு.க. யார் பக்கம் நிற்கும் ஆகிய கேள்விகளை எழுப்பினார். தற்பொழுது ஓ.பி.எஸ்.சுடன் இணைந்திருக்கும் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.யுமான மைத்ரேயன் அருண்ஜெட்லியின் நெருங்கிய நண்பர். இந்நிலையில், சேகர்ரெட்டி விவகாரம் கையில் சிக்கியவுடன் அதை ஓ.பி.எஸ். லிங்க் வரை கொண்டுசென்றார் அருண்ஜெட்லி. இதையடுத்து ஓ.பி.எஸ்., அருண்ஜெட்லியை தொடர்பு கொண்டார். அப்போது அருண் ஜெட்லி அவருடன் தமிழக அரசியல் நிலவரங்களைப் பற்றி விவாதித்தார். இந்த விவாதங்களுக்கு மைத்ரேயன் உதவியாக செயல்பட்டார். ஓ.பி.எஸ். மீதும் நத்தம் விசுவ நாதன் மீதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை நிறுத்தப்பட்டது
Rate this:
Share this comment
Anvardeen - chennai,இந்தியா
18-பிப்-201706:41:26 IST Report Abuse
Anvardeenசோ வாட்? இப்போ பிரச்னை இதுவல்ல...
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Al Khor,கத்தார்
17-பிப்-201723:07:26 IST Report Abuse
Janarthanan ஹெலோ MLAs , சற்று யோசிங்க மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்தது ஜெயலலிதாவை நம்பிதான், அவங்க மாபியா கிட்ட விடாம வச்சிருப்பாங்க என்று நம்பிதான் ,நம்ம ராசி என்னோவோ அவங்கள் இறந்து விட்டாங்க. மக்களின் எண்ணம் உணுர்ந்தும் ஒண்ணுமே தெரியாத மாதிரி உங்களோதய தற்போது செயல்கள் உள்ளன மறுபடியும் சுயமா யோசித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம், இல்லையென்றால் உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு மக்கள் விரைவில் மூடு விழா நடத்தி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201722:59:14 IST Report Abuse
TamilReader கூவத்தூர் சிறையில் இருக்கும் MLA - களுக்கு ஒரு வேண்டுகோள் நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை