சின்ன சின்ன ஆசை - நடிகை சுஜிதா| Dinamalar

சின்ன சின்ன ஆசை - நடிகை சுஜிதா

Added : பிப் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சின்ன சின்ன ஆசை - நடிகை சுஜிதா

சினிமா, சின்னத்திரையில் நகரங்களைச் சேர்ந்த நாயகிகள் கோலோச்சி வந்த நிலையில், கிராமங்களிலிருந்தும் வாய்ப்புகளை தேடிச்சென்று, நடிப்புலகில் திறமையை நிரூபித்து வருகின்றனர் நம்மூர் பெண்கள்.தென்னை மரங்களின் சொர்க்கமாக திகழும் பொள்ளாச்சியிலிருந்து, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு சென்று, சீரியல், சினிமாவில் குணசித்திர நடிகையாக நடித்து வருகிறார் சுஜிதா. விளம்பரங்களில் நடித்தவருக்கு சீரியல் வாய்ப்பு கதவை தட்டியதால் நடிப்புலகம் தன்னை நன்றாகவே நடிக்க வைத்துள்ளது, என்கிறார்.கேள்விகளுக்கு பட்பட்டென பதிலளிக்கிறார் சுஜிதா...* உங்கள் பயணம்'டிவி' சீரியலில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தேன். எனக்கு முதல் வாய்ப்பு சினிமாவில்.பூஜை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். தற்போது 'மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி', 'வெண்ணிலா கபடி குழு 2', பூபதிபாண்டியனின் 'மன்னர் வகையறா'வில் நடித்து வருகிறேன். பெயரிடப்படாத ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறேன்.* ஆசை?நல்ல குணசித்திர நடிகையாக வர வேண்டும். அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும்.* குணசித்திர நடிகைகள் காணாமல் போய் விடுகிறார்களே ?அப்படி எல்லாம் கிடையாது. கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, கொடுக்கிற கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தினால் நீண்ட நாட்கள் நடிப்புலகில் கால் பதிக்கலாம். திரிஷா போன்றோர் தங்கள் நடிப்பால் இன்னும் சினிமாவில் தடம் பதித்து வருகின்றனர்.* பிடித்த குணசித்திர நடிகை?சரண்யா. அம்மா ரோல் செய்தால், அதை ைஹலைட்டாக செய்பவர். நிறைய முகபாவனைகளை அவரிடம் கற்றுக்கொள்ளலாம்.* நாடகங்களில் ஆர்வம் உண்டா?மேடை நாடகம் பார்த்தது இல்லை. இதில் நடித்தவர்கள் பெரிய அளவில் சாதித்துள்ளனர். தற்போதும், நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும், என்று நினைப்பவர்கள் மேடை நாடகங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கூத்து பட்டறைகளில் பயிற்சி எடுக்கின்றனர். நாம் எதுமாதிரியான கேரக்டர் நடிக்க வேண்டுமோ, அதே போன்ற கேரக்டர் ஆக பயிற்சி அளிக்கின்றனர்.* பிடித்த நடிகர்அஜித். தனிப்பட்ட முறையிலும் நிறைய உதவி செய்பவர் அவர்.* துணை நடிகைகள் தொடர்ந்து நடிப்பதில்லையே?சிலர் குடும்ப சூழ்நிலையாலும், திருமணமானதாலும் நடிக்க வருவதை நிறுத்தி விடுகின்றனர். மற்றபடி நடிக்க மறுப்பது என்றெல்லாம் இல்லை. நான் திருமணத்துக்கு பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தேன்.* குடும்பத்தோடு செலவிடும் நேரம்?அதிகம் செலவிட முடிவதில்லை.* சினிமா, சீரியல்..?சினிமாவில் ஜாலியாக சிரித்துக்கொண்டே நடிக்கலாம். சீரியல் அப்படி கிடையாது. எமோஷனல், அழுகை இதுதான் நிறைய வரும்.* சீரியல்கள் ஜவ்வாக இழுக்கிறார்களே?கதை நன்றாக இருப்பதால் இவ்வளவு ஆண்டுகள் நீடிக்கிறது. சீரியல் என்பது 3 ஆண்டில் முடிய வேண்டும். சில சீரியல்கள் ஐந்து ஆண்டு வரை நீடிக்கிறது. சிறிய குழந்தையிலிருந்து, பெரியவர் ஆகும் வரை கதை நீள்கிறது. ரசிகர்களின் வரவேற்பால் நீள்கிறது.* சீரியல், சினிமா எதற்கு ரசிகர்கள் அதிகம்?சீரியலுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். பொதுவாக அனைவரும் விரும்புவது சினிமாவைத்தான்.* இத்துறையில் பெண்களின் வெற்றி எளிதானதா?பெண்கள் வெளியில் வந்து ஜெயிப்பது கஷ்டமான விஷயம். பெற்றோர் 'சப்போர்ட்' இருந்தால் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.இவரை பாராட்ட: sujithasujitha@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X