நீரை சுத்தமாக்க சூரிய சக்தி| Dinamalar

நீரை சுத்தமாக்க சூரிய சக்தி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
நீரை சுத்தமாக்க சூரிய சக்தி

சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, அதிக செலவில்லாமல், கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.அமெரிக்காவிலுள்ள, பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே, அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர்.தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும், பாலிஸ்டைரின் கட்டை மீது, கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி, அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் காகிதம், கீழிருந்து நீரை உறிஞ்சுகிறது. அதன் கரிய நிறத்தில், சூரிய வெப்பம் படும் போது, காகிதத்தில் உள்ள நீர் சூடாகி, ஆவியாகி மேலே வருகிறது. இதை ஒரு கண்ணாடி கூண்டு தடுத்து குளிர்விக்க, சுத்தமான நீர் கிடைக்கிறது. ஆவியாகும் நீரில் கிருமிகள், கசடுகள் எதுவும் இருக்காது.ஒரு சதுர அடிக்கு, இந்த சாதனத்திற்கு ஆகும் செலவு, வெறும், 132 ரூபாய் மட்டுமே. இதை, பலமுறை பயன்படுத்தலாம். வறட்சியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களுக்கும், இந்த சூரிய வெப்ப நீர் வடிகட்டி உதவும் என, இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-பிப்-201723:08:56 IST Report Abuse
வாழ்க​ பாரதம் இதைக்கண்டுபிடிப்பதில் பெரும்பங்கு ஆற்றியது ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது உண்மையா?
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
25-பிப்-201713:01:28 IST Report Abuse
Raja மிகவும் உபயோகமான கணடுபிடிப்பு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-பிப்-201701:12:13 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல முயற்சி. நீர்மட்டுமா ஆவியாகும், அதனுடன் அதில் உள்ள ரசாயன கலப்பு, கழிவுகள் இவைகளும் ஆவியாகுமே ?
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
01-மார்-201710:26:48 IST Report Abuse
kundalakesiமுதலில் நீரும், பின்னரே திடக் கழிவுகளும் ஆவியாகும். ஆல்கஹால் இருந்தால் அது நீருக்கு முன்னரே ஆவியாகும். (நம் சாராயம் காய்ச்சுவோருக்கு இது நன்கு தெரியும்), ஆனால் சாதா நீரில் அதன் திடமானத்திற்கு குறைந்த திரவங்கள் இருக்க வாய்ப்பில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்