11ம் நூற்றாண்டு கேசவரம் கோவில் பாதுகாக்குமா தொல்லியல் துறை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

11ம் நூற்றாண்டு கேசவரம் கோவில் பாதுகாக்குமா தொல்லியல் துறை?

Added : பிப் 25, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  11ம் நூற்றாண்டு கேசவரம் கோவில் பாதுகாக்குமா தொல்லியல் துறை?


குலோத்துங்க சோழன் கட்டிய, கேசவரம் கைலாச ஈஸ்வரமுடையார் கோவில், அழியும் நிலையில் உள்ளது. வேலுார் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், தக்கோலம் என்ற திருவூறலில் இருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவில், கேசவரம் கைலாச ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது.
இது, கி.பி., 1,070 முதல், 1,120 வரை, சோழ நாட்டை ஆண்ட, முதலாம் குலோத்துங்க சோழன் கட்டியது. அங்கு, 'குலோத்துங்க சோழனும், அவன் மனைவி ஏழுலகம் உடையாளும், நேரில் வந்து வழிபட்டனர்' என, கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.
கோவில் முழுக்க, கருங்கற்களால், கட்டப்பட்டுள்ளது. இதன் விமானம்,கஜபிருஷ்ட வடிவில்உள்ளது.
இக்கோவிலில், பூஜைகள், திருவிழாக்கள் நடந்துள்ளன. பின், காலப்போக்கில், வழிபாடின்றி அழிய துவங்கியது. தற்போது, கோவிலின் வரலாறு சொல்லும், மூன்று கல்வெட்டுகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மேலும் ஆய்வு செய்தால், நிறைய வரலாற்றுத் தகவல்கள் வெளிவரக்கூடும். அதனால், இக்கோவிலை, இந்திய, தமிழக தொல்லியல் துறையினர் மற்றும் அறநிலையத்
துறையினர் ஆய்வு செய்து, பாதுகாக்க வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, கோவிலில், கள ஆய்வு செய்த தொல்லியல் ஆர்வலர், பிரியா பாஸ்கர் கூறியதாவது: தற்போது, கோவிலின் விமான கற்கள் சிதைந்து, கோஷ்டத்தில் உள்ள தெய்வ சிலைகள், நந்தி யின் மீது விழுந்து சிதைந் துள்ளன. உமாசகித மூர்த்தி யின் தலை காணவில்லை. துவார கணபதி சிலைகளும் சிதைந்துள்ளன.
சிதைந்த கோவிலை, சிவனடியார்கள், ஆர்வலர்கள் இணைந்து, விமானத்துக்கு பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர். பிரதோஷம் நடக்க மேடை, புதிய நந்தி, விநாயகர் மற்றும் போக சக்தி சிலைகள் செய்யப்பட்டுள்ளன. ஒருகால பூஜை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X