முதல்வரை கண்டுகொள்ளவில்லை!| Dinamalar

முதல்வரை கண்டுகொள்ளவில்லை!

Added : மார் 04, 2017 | கருத்துகள் (9)
Advertisement
முதல்வரை கண்டுகொள்ளவில்லை!

தமிழக முதல்வர் பழனிசாமி பதவியேற்ற பின், முதன்முறையாக டில்லி வந்திருந்தார். பிரதமரைச் சந்தித்து, மனு அளித்தார்.இதன்பின், பல மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, தமிழக நலத் திட்டங்கள் குறித்து பேசினார். முதல்வர் பழனிசாமிக்கு எதிர்பார்த்த வரவேற்பு, பிரதமரிடமிருந்து கிடைக்கவில்லை என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பன்னீர்செல்வம் முதல்வராக டில்லி வந்து, பிரதமரைச் சந்தித்துவிட்டு, தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பி, என்ன நடந்தது என சொல்லும் முன்பே, 'அவர் என்ன பேசினார்; அதற்கு பிரதமரின் பதில் என்ன' என்பதை, விலாவாரியாக, தன் டுவிட்டரில் தெரிவித்து விட்டார் பிரதமர் மோடி.
ஆனால், பழனிசாமி - பிரதமர் சந்திப்பு குறித்து, மோடி, டுவிட்டரில் எதையும் தெரிவிக்கவில்லை; இதிலிருந்தே, பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தெரிய வரும் என்கின்றனர், சீனியர் அதிகாரிகள்.அதே போல, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், பழனிசாமியை கண்டு கொள்ளவில்லையாம். ஜெ.,க்கு எதிராக வந்த தீர்ப்பால், அவரது சொத்துகள் என்னாகும் என்பது குறித்தும், பிரசாத்துடன் பேசினாராம் முதல்வர். இவரை சந்தித்துவிட்டு, முதல்வர் சென்ற பின், 'என்ன முதல்வர் இவர்; சைகையிலேயே பேசுகிறாரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கிண்டலடித்தார் ரவிசங்கர் பிரசாத்.
சசிகலாவின் பதவிக்கு ஆபத்து
அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர்.இதற்கு, சசிகலா சார்பில், தினகரன் பதிலளித்ததை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை. இது குறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் சொல்வதை பார்த்தால், விரைவில், சசிகலாவின் பதவி பறிக்கப்படும் என, தெரிகிறது.இது குறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியிலிருந்து சசிகலா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, பின் சேர்த்துக் கொள்ளப்பட்டு உள்ளார். சசிகலா தரப்பு அளித்த பதிலில், 'சஸ்பெண்ட், வாபஸ் பெறப்பட்டதால், தொடர்ந்து கட்சியில் இருந்துள்ளார்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதை ஏற்க முடியாது என்கின்றனர் அதிகாரிகள். மேலும், இந்த விவகாரத்தில், சசிகலாவிடம் இருந்து பதில் வந்ததும், விரைவில் தேர்தல் கமிஷன் தரப்பில் முடிவு எடுக்கப்படும்.மார்ச் இறுதியில், சசிகலாவுக்கு, கட்சியில் ஐந்தாண்டு முடிவடைகிறது. இதனால், தேர்தல் கமிஷன், சசிகலாவின் பதவி செல்லாது என அறிவித்தாலும், மீண்டும் அவரே தேர்வு செய்யப்படலாம்.ஆனால், இங்கும் ஒரு பிரச்னை உள்ளது. 'ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர், ஒரு கட்சியின் தலைமை பதவியில் அமர முடியுமா' என, கேள்வி எழுப்பி, யாராவது கோர்ட்டை அணுக வாய்ப்புள்ளது. இதனால், சசிகலா, கட்சியின் தலைமை பதவியில் தொடர்வது சிரமமே.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தங்கமோ தங்கம்!
'எம்.எல்.ஏ.,க்களை நன்றாக கவனித்தனர்; அவர்கள் கேட்டது கொடுக்கப்பட்டது' என, தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பேசப்பட்டது.'இது உண்மையா அல்லது வழக்கம் போல, 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வரும் வதந்தியா' என, பலர் சந்தேகப்பட்டனர். சமீபத்தில், இது தொடர்பாக, மத்திய அரசின் உளவுத் துறை, அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. அதில், பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.ஒரே இடத்தில், எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததால், அவர்களது குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அத்துடன், எம்.எல்.ஏ.,க்கள், மக்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் ஓட்டளிப்பதும், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை; இதை சமாளிக்க, எம்.எல்.ஏ.,க்களின் மனைவியர் அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், 'குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனரோ, அதற்கேற்ப, தங்கம் தருவோம்; வாங்கிக் கொள்ளுங்கள்; பிரச்னை எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் குடும்ப நலனே முக்கியம்' என, கூறப்பட்டது.அதன்படி, ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அந்த குடும்பத்திற்கு, மூன்று கிலோ தங்கம் வரை தரப்பட்டதாம். இதை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்றனராம், குடும்பத்
தலைவிகள்.பிரபல வட மாநில தங்க வியாபாரி தான், இவ்வளவு தங்கத்தையும் கொடுத்தாராம்; இதற்கு, இன்னும் இவருக்கு பணம் தரப்படவில்லை.இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையும், உளவுத் துறையும், தங்க வியாபாரியை விசாரித்த போது, அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விட்டார்.'என்னை காப்பாற்றுங்கள்; மொத்த விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்' என, அவர் கூறியதுடன், 'கோடிக் கணக்கில் என் பணம் சிக்கியுள்ளது' என்றும் புலம்பித் தள்ளிவிட்டாராம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
08-மார்-201723:11:52 IST Report Abuse
Mayilkumar அதுதான் இவர் எப்பொழுது பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடித்து போல் முகத்தை வைத்துக்கொள்ளுகிறாரா? எதோ சில நாட்கள் முதல்வராக உள்ளவரை டெல்லியில் போய் பாராளுமன்றம், செங்கோட்டை, இந்திய கேட், குதுபுமினார் போன்றவற்றை பார்த்துவிட்டுத்தான் வரட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-மார்-201707:22:30 IST Report Abuse
Rajendra Bupathi புள்ளை குட்டிங்க இல்ல? வரிசு எதுவும் இல்ல? அப்புறம் யாருக்காக? எதுக்காக இப்படி அலைஞ்சி வேதனை பட்டு சாகனும்?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-மார்-201707:20:58 IST Report Abuse
Rajendra Bupathi அவ்வளவுதான் பணமா? இனிமே சங்குதான்?சுதாகரன் கல்யாணத்துக்கு செட்டி கடையில அப்படிதான் சங்கு ஊதுனாங்க?பாவம் மனுக்ஷன் அந்த க்ஷாக்குல செத்தே போயிட்டாரு?
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
11-மார்-201716:36:09 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>யா பாவம்...
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
06-மார்-201712:56:49 IST Report Abuse
murali காமராஜர் நாட்டு நலன் ஒன்றே குறிக்கோள். சசி கூட்டத்துக்கு கொள்ளை அடிப்பதே குறிக்கோள்.
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
05-மார்-201722:13:36 IST Report Abuse
நரி ஊழல் வாதிகளுக்கு ஊழல் வாதிகளைத்தான் பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
05-மார்-201722:13:12 IST Report Abuse
Panneerselvam Chinnasamy காமராஜர் படிக்கத்தவர்தான்... ஆனால் அவரை கண்டால் டெல்லிக்காரன் சல்யூட் அடித்தான்...கலைஞரும் படிக்காதவர்தான்... ஆனால் அவரை கண்டால் சோனியா காந்தி இருக்கையை விட்டு எழுந்திருப்பார்... அப்படிப்பட்டவர்கள் வகித்த பதவி இப்போ சிரிப்பா சிரிக்குது..
Rate this:
Share this comment
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
08-மார்-201720:19:40 IST Report Abuse
Chidambaranathan Ramaiahசோனியா எதுக்குன்னே எந்திரிச்சாங்க?...
Rate this:
Share this comment
Patriot - Chennai,இந்தியா
24-ஏப்-201711:51:05 IST Report Abuse
Patriotகாமராஜரையும் கருணாநிதியையும் ஒன்று சேர்ப்பது பசுவையும் ...யையும் ஒன்றுசேர்ப்பது போன்றது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை