நஞ்சை உண்ணும் பிஞ்சுகளை காப்போம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நஞ்சை உண்ணும் பிஞ்சுகளை காப்போம்!

Added : மார் 05, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நஞ்சை உண்ணும் பிஞ்சுகளை காப்போம்!

டல் தாண்டி பிழைக்கச் சென்ற ஒரு மனிதரை, வேலை செய்யவிடாமல், கைப்பேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அழைப்பை ஏற்றுப் பேசியவர், உடனே நாடு திரும்புகிறார்.
அங்கே, ஓடியாடி விளையாட வேண்டிய, தன், 8 வயது மகள் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி, அவசரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்
பட்டிருக்கும் நிலை கண்டு, கண்ணீர் வடித்து நிற்கிறார்.
மற்றொரு பக்கம், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், 'டைப் - 1 நீரிழிவு நோயால்
பாதிப்புக்குள்ளாகிய, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வின் நடுவே, சர்க்கரை, மாத்திரை, பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் உட்கொள்ளலாம்' என, அறிவிப்பு
வெளியிட்டு இருக்கிறது.
இவை, என்னை மிகவும்
பாதிப்புக்குள்ளாக்கின.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தியுடைய,
நம், நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் சத்து மிகுந்த பாலின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம்.
அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத, வெளிநாட்டு, 'ஜெர்சி' பசுக்கள் மூலம் கிடைக்கும் பாலைப் பருகினால், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள், ஏற்படும் என்றும் தெரிந்து கொண்டோம்.
விளம்பரம் செய்யுறாங்க
அறிந்து கொண்டதோடு மட்டும் நிற்காமல், நாமும், நாட்டு மாட்டின் பாலைப் பருக ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என, பாரபட்சமின்றி சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படுவதற்கு, ஜெர்சி பசுக்களின் பால் மட்டும் தான்,
காரணமா என, யோசித்தால், இல்லை என்றே தோன்றுகிறது.
ஏனென்றால், ஜெர்சி பசுக்களின் மூலம் கிடைக்கும் பாலோடு, பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் என, ஏதாவது ஒரு சத்துப் பொடியை கலந்து குடிக்கிறோம். 'இதை கலந்து குடித்தால் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்; உயரம் அதிகமாகும்; சக்தி கிடைக்கும்' என, விளம்பரம் செய்கின்றனர்.
அதை நம்பி, நாமும் உபயோகப்படுத்துகிறோம். ஆனால், ஒன்றை, யோசிக்கத் தவறிவிட்டோம்.
அது என்னவென்றால், இதை
பருகிய மாணவர்கள் எல்லாரும் முதல் மதிப்பெண் வாங்கி
இருக்கின்றனரா... உயரமாக வளர்ந்து விட்டனரா... சக்திமான்களாக மாறிவிட்டனரா என்பதை யோசிப்பதே இல்லை.
இதில் இன்னொரு அபத்தம் என்னவென்றால், விளையாட்டு வீரர்களை வைத்து, இது போன்ற சத்து மாவுகளுக்கு விளம்பரம் செய்கின்றனர். இதை குடித்தால், நாம் குழந்தைகளும் சிறந்த
விளையாட்டு வீரர் ஆகிவிடுவர் என்ற எண்ணத்தில், அந்தப்
பொடிகளை கலக்கி, லிட்டர் கணக்கில் குடிக்க கொடுக்கின்றனர். உடல் குண்டானது தான் மிச்சம்.
விளையாட்டில் பூஜ்யம் தான். விளம்பரப்படி பார்த்தால், நம் குழந்தைகள் சாப்பிட்ட, அன்னிய, பன்னாட்டு நிறுவனங்களின் சத்து மாவு பொடிகளால், ஒலிம்பிக்கில் நாம், 100 தங்கப் பதக்கங்களாவது வாங்கியிருக்க வேண்டும். நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில், இரட்டை இலக்கத்தில் கூட,
பதக்கங்களை பெறவில்லையே!
இப்படி சத்து மாவுகளை கலந்து குடித்ததால், குறைந்தபட்சம்,
குழந்தைகள் நல மருத்துவரிடம் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை
யாவது குறைந்திருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. சத்து மாவு கூழும், ராகி கூழும் தராத பலத்தையா, இந்த சத்துப் பொடிகள் தரப்போகின்றன என, எண்ண வைக்கிறது.
சிலர், பாலோடு சேர்த்து, பிஸ்கட் சாப்பிடுகின்றனர். சர்க்கரை நோயின் எதிரியான மைதாவையும், அஸ்காவையும் மூலப்பொருட்களாக
வைத்து தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள்,
புறக்கணிக்கப்பட வேண்டிய உணவு பண்டங்களில் முதலிடத்தில் உள்ளன.
'காலையில் எழுந்ததும்,
சாப்பிடுகிற முதல் நொறுக்குத் தீனி, பிஸ்கட் தான்' என, நம்மில் பலர்
பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். எத்தனை பேருக்கு தெரியும்... தேவையற்ற கொழுப்பை உடலில் சேர்ந்து, உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அந்த பிஸ்கட் என்பது!
உடல் எடையை பற்றி பேசும் போது தான், உடல் எடையை
அதிகரிப்பதை தவிர, வேறு எந்த நல்லதையும் செய்யாத, பன்னாட்டு இறக்குமதி மற்றும் உள்நாட்டு
தயாரிப்பு, 'சிப்ஸ்' வகைகள்
ஞாபகத்திற்கு வருகின்றன.
நச்சுக்காற்று
அந்த சிப்ஸ் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும் காற்றையும் அல்லவா, நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். உள்ளே இருக்கும் சிப்ஸ் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக, ஒரு வித நச்சுக் காற்றை உள்ளே செலுத்துவர்.
குழந்தைகள், அந்த சிப்ஸ் வகைகளை வாங்கிச் சாப்பிடுவதை
பெருமையாக கருதுகின்றன; அதன் ருசிக்கு அடிமையாக உள்ளன. அந்த சிப்ஸ் வகைகளில் சிலவற்றை, மெழுகுவர்த்தியில் பிடித்தால்,
தீப்பற்றி விடும். எந்த ஊரில்,
தீப்பற்றினால் எரியும் உருளைக் கிழங்கு விளைகிறது என, தெரியவில்லை.
உடல் நலத்தில் அக்கறை
கொண்டவர்கள் நாம் எனக் கருதி, எண்ணெயில் பொரித்தெடுத்த, எந்த பலகாரமும் வேண்டாம் என, முறுக்கு, அதிரசம், தட்டை, உளுந்து வடை என, இன்னும்
எத்தனையோ பலகாரங்களை ஒதுக்கி வைக்கிறோம். அந்த சிப்ஸ் வகைகளை விடவா, இந்த பலகாரங்கள் கெடுதல் விளைவிக்கின்றன?
காலையில், சாண்ட்விச், பர்கர்; இரவில் பீட்சா என, வெந்தும், வேகாமல் இருக்கும் அவற்றை உணவாக உட்கொள்கிறோம். ஆனால், வீட்டில் பார்த்து பார்த்து சமைக்கிற உணவு வகைகளை
புறக்கணிக்கிறோம்.
இதையெல்லாம் விட, 'கோழி தான்; ஆனால், கோழி இல்லை...' என, எதையோ, பக்கெட் பக்கெட்டாக விற்கின்றனர். அந்த கடைகளுக்கு கர்ப்பிணி பெண்கள் சென்றால், 'இதை, நீங்கள் சாப்பிட வேண்டாம்' என, அந்த கடைகளில் வேலை பார்க்கும், நல்லெண்ணம் கொண்ட ஊழியர்கள் சிலர்
சொல்கின்றனர்.
சாக்லெட்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல் மருத்துவரிடம் செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்தே, சாக்லெட் எவ்வளவு தீங்கானது
என்பதை அறிந்து கொள்ளலாம்.
இனிப்பை அதிகமாக விரும்பும் குழந்தைகளுக்கு, கரும்பு சர்க்கரை
அல்லது பனை வெல்லத்தை
உபயோகித்து செய்யப்படும் நெய் வாழை, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற சத்து மிகுந்த இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாமே!
தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், இலந்த வடை என, இவை எல்லாம், இக்காலத்து குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விட்டதே. இவற்றை
குழந்தைகளுக்கு மீண்டும்
அறிமுகப்படுத்தலாமே!
உடலுக்கு தீங்கு விளைவிக்கக்
கூடிய பிஸ்கட் வகைகள்,
சிப்ஸ் வகைகள் மற்றும் இதர
தயாரிப்புகளில் பெரும்பாலானவை அன்னிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். அதனால்
ஏற்படக்கூடிய நோய்களை
கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிப்பவர்களும் அவர்களாகவே இருக்கின்றனர்.
அது மட்டுமல்ல, ஆரோக்கிய
மான சருமத்திற்கும், அடர்த்தியான
கூந்தலை பெறுவதற்கும், நம் உணவு முறை தான் காரணம் என்பதை மறந்து விட்டோம்.
இதை இங்கே ஏன் குறிப்பிடு
கிறேன் என்றால், நொறுக்கு தீனியில் மறைமுகமாக பயனடையக் கூடிய மற்றொரு துறை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்புத்
துறை. அவற்றிலும் பெரும்பாலானவை, அன்னிய நாட்டு
நிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே
உள்ளன. அவை, இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக
கருதுகின்றன.
நாமும் அதற்கேற்றாற்போல, முகத்தில் ஒரு சின்ன பரு
தோன்றினால் கூட, வீட்டிலிருக்கும் வேப்பங் கொழுந்தை அரைத்து பூசாமல், வேப்பந்தழையை அரைத்து, 'டியூப்'பில் அடைத்து விற்பதை தானே வாங்குகிறோம்!
பொடுகு தொல்லையை போக்கும், 'ஷாம்பு' என,
விளம்பரம் செய்கின்றனர். பொடுகு போகிறதோ, இல்லையோ... முடி மட்டும் நிறையவே போகிறது.
முகத்திற்கு பயத்த மாவு மற்றும் மஞ்சள்; முடிக்கு அரப்பு மற்றும் சீயக்காய் என, உபயோகப்படுத்திய போது, தோல் மருத்துவரிடம்
இவ்வளவு கூட்டம் இருந்ததில்லையே!
புறக்கணியுங்க
எவ்வளவு விஷயங்களில், நம்மால் ஒன்றும் செய்யாத நிலையில், 'அரசு இப்படி
செய்திருக்கலாம்; அப்படி செய்துஇருக்கலாம்' என்கிறோம். ஆனால், நம் கையிலும் ஆயுதம் இருப்பதை மறந்துவிடுகிறோம்.
எதை ஆயுதமாக பயன்படுத்தி, அரசியல்வாதிகள் தேர்தலில் ஜெயிக்கின்றனரோ... பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை, நமக்கே தெரியாமல் ஆளுகின்றனவோ... அது தான், அந்த ஆயுதம்.
நாம் கடினமாக உழைத்து
சம்பாதிக்கும் பணமே, அந்த ஆயுதம். நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என, நாம் தானே தீர்மானிக்க வேண்டும்.
அன்னிய நாட்டுத் தயாரிப்புகளை
புறக்கணித்து, நம் தாத்தா, பாட்டி
காலத்து உணவுமுறையை
மீட்டெடுத்து விட்டால், நம் பாதங்கள், 'காதி' கடைகளையும், சித்த மருத்துவத்தையும் நோக்கி பயணிக்க ஆரம்பித்தால், அன்னிய
நாட்டு நிறுவனங்களின் பாதச்
சுவடுகள், காணாமல் போய் விடுமே.
வருங்கால இளம் தலைமுறையினர்,
நோயற்ற வாழ்வு வாழ,
வழி வகுப்போம்.
பா.சரண்யா பிரபா

சமூக ஆர்வலர், tamizhachi16@gmail.com
...

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravind - Vellore,இந்தியா
19-ஏப்-201712:44:33 IST Report Abuse
Aravind மக்கள் நலன் மிக்க தகவல். கண்டிப்பாக அனைவருக்கும் நான், நாங்கள் கட்டாயம் பகிறுவாேம். தகவலுக்கு நன்றி. தமிழன் என்கிற திமிர் தமிழன் அனைவருக்கும் உண்டு.......
Rate this:
Share this comment
Cancel
Sri Ram - chenai,இந்தியா
07-ஏப்-201709:05:05 IST Report Abuse
Sri Ram அருமை
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
22-மார்-201711:18:15 IST Report Abuse
bairava மிக மிக அவசியமான அருமையான பதிவு மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய ஒன்று வெளிநாட்டு நச்சு பொருட்களை புறக்கணிக்க தெரிந்த நாம் அதோடு வெளிநாட்டு மாடுகளையும் புறக்கணித்து நாட்டுமாடுகளை வளர்த்து வரும் சந்ததியினர் நலமடைய வழிவகை செய்யவேண்டும் இன்றைய சூழலில் குழந்தைங்களுக்கு தேவையான உணவு முறை நவதானிய சத்து மாவும் ,,நாட்டு பசும்பால் மட்டுமே இவை கொடுத்தாலே போதும் மீண்டும் ஒரு தமிழினம் எழுச்சிபெற்று வளரும் வாழும் என்பது உண்மையே
Rate this:
Share this comment
Cancel
poongothaikannammal - chennai 61,இந்தியா
17-மார்-201717:56:14 IST Report Abuse
poongothaikannammal மிக மிக அருமையான கருத்துக்கள். எண்பதாம் ஆண்டுகளுக்குப் பின் வந்த தலைமுறை நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் முட்டாள் தனமாகவும் மூர்க்கத்தனமாவும் மறுத்ததின் விளைவுதான் இன்று அவர்களின் வாரிசுகள் படும் இத்தனை வேதனைகளுக்கும் ஒரே காரணம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன். அவர்கள் தங்களின் மூத்தோரையும் அவர்களின் அறிவுரையையும் அவமானப் படுத்தியத்தின் பலன் தான் இது. இனியாவது அவர்களின் அறிவுரையைக் கேட்டு அதன் படி நடந்தால் தங்களின் பரம்பரையை காப்பாற்றிக்கொள்ளலாம்..
Rate this:
Share this comment
Cancel
Vengat Ganesh - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
13-மார்-201720:32:31 IST Report Abuse
Vengat Ganesh இயற்கையை அளித்து செயற்கையை உருவாக்குதல் ,, இது தான் இந்திய வளர்கிற லச்சனம்,,, மனிதர்களாகிய நம் கொங்சம் யோசிக்கணும் ஒரு சிறிய உதாரணம் :- முகத்திற்கு அழகு ,, கருப்பா இருக்கிற முகம் சிகப்பு ஆகும் னு சொல்றன்னே ,, இதை ஆப்பிரிக்கா காரன் பயன்படுத்தி இருந்தால் அவன் நாட்டு மக்கள் சும்மா MGR & அரவிந்த் சாமி மாதிரி தாக தாக னும் மின்னுவாங்களே ,, ஏன் மின்னலெ ???? யோசிச்சு பார்ப்போம் ,, தயவு செய்து
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
13-மார்-201707:41:50 IST Report Abuse
kandhan. இந்தியாவில் பீட்டா அமைப்பை கொண்டுவந்தது யார்??
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
07-மார்-201717:36:54 IST Report Abuse
A. Sivakumar. சூப்பர் கருத்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
06-மார்-201714:21:07 IST Report Abuse
Rangiem N Annamalai அருமையான கட்டுரை .நன்றி ஆசிரியர் அவர்களே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை