நுண்ணுயிரிகளின் கூடாரமான மொபைல்: ஆய்வில் அதிர்ச்சி | நுண்ணுயிரிகளின் கூடாரமான மொபைல்: ஆய்வில் அதிர்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நுண்ணுயிரிகளின் கூடாரமான மொபைல்: ஆய்வில் அதிர்ச்சி

Added : மார் 06, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
discover 3 new microbes, mobile screens,  மொபைல்

புனே: பொபைல் போன்களில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் மெபைலில் 3 புதிய நுண்ணுயிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


3 புதிய நுண்ணுயிரிகள்:

இதுகுறித்து புனே தேசிய நுண்ணுயிர் அறிவியல் மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாவது: ஆய்வுக்காக எடுக்கப்பட்ட 27 மொபைல் போன்களில், 515 வகை பாக்டீரியாக்களும், 28 வகை பூஞ்சைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 3 புதிய நுண்ணுயிரி இனங்களும்( 2 பாக்டீரியாக்கள் மற்றும் ஒரு பூஞ்சை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலனவை மொபைல் ஸ்கிரீனில் தான் இருந்தன.


ஆறுதல்:

ஆய்வில் கண்டறியப்பட்ட நுண்ணியிரிகளில், நோய் ஏற்படுத்தும் கிருமிகள் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். கழிவறைகளில் கூட 3 வகை பாக்டீரியாக்கள் மட்டுமே வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மார்-201717:05:59 IST Report Abuse
Endrum Indian ஸ்மார்ட் போன் ஒரு போதை தரும் எல்.எஸ்.டி,அபின், கஞ்சா போல. அதில் உள்ளே தீவிரமாக நுழைந்து விட்டால் அது இல்லையேல் கை கால் ஆட்டம் கண்டுவிடும். பிறகு அதை தடவி தடவி அதில் நம் மூலமாகவே நமக்கே பரவும் கிருமி நுண்ணுயிர்கள். மனம் பேதலித்து, குணம் பிறழ்ந்து, உடல் நாசமாகி இது தான் ஸ்மார்ட் போன் நமக்கு கொடுப்பது. ஆல்கஹால் நல்லது தான் யாருக்கு? குளிர் பிரதேசத்தில் (0 பக்கத்தில் இருக்கும் போது) அளவாக குடிக்கும் போது? அது போல ஸ்மார்ட் போன். பேசினோம், கால் ரிஸீவ் செய்தோமா? அப்போ அப்போ இன்டர்நெட் பார்த்தோமா. ஓ.கே. இன்று வாட்சப்பில் எனக்கு வந்து வீடியோ - என்ன ஆகவேண்டும் என்று குழதைகளை மிஸ் கேட்கின்றார், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒன்று சொல்ல ஒரு குழந்தை மட்டும் நான் ஸ்மார்ட் போன் ஆக வேண்டும் என்று சொல்ல ஏன் என்றால் அம்மா எப்பவும் கையில் போன் தடவிக்கொண்டே இருக்கின்றார், என்னை தன கையில் எடுத்துக்கொள்ளாமல்? அப்பா அதை தடவி விளையாடுகிறார், என்னை யாரும் தன கையில் எடுத்துக்கொள்வதில்லை என்று ? அந்த அளவுக்கு மூடனாக போய் விட்டனர் இந்த இளைய சமுதாயம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
06-மார்-201712:21:51 IST Report Abuse
K.Sugavanam கம்பியூட்டர் கீ-போர்டும்,அந்தக்கால போன் ரிஸீவரும் இதே போன்றுதான் சொல்லப் பட்டன..நமது digestive tem ,மற்றும் தோலில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை சொன்னால் மயக்கம் தான் வரும்..
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
06-மார்-201711:06:19 IST Report Abuse
தேச நேசன் பேஸ்புக் வாட்சாப் மூலமா அனுப்பப்பபடும் அபத்தமான அறிவியலுக்கொவ்வாத விஷயங்களைவிட இந்த வைரஸ்கள் மோசமானதில்லை தினம் வாட்சப்பைத் திறந்தாலே மேக்ரோவேவ் அடுப்பு வெடித்து கோடிப்பேர் சாவு டயபடீஸ் BPகேன்சரேலாம் வியாதியே அல்ல. பேய் பூதங்கள் ஆவிகள் உண்மை பெட்ரோல் எடுக்கும் இடங்களில் பலபேர் கதிர்வீச்சு சாவு மூலிகை மூலம் ஒரே நிமிடத்தில் சுகர் கண்ட்ரோல் மூச்சுப்பயிற்சி மூலம் பறக்கலாம் என்பதுபோன்ற அபத்தங்களுக்குக் குறைவே இலலை இதெல்லாம் வைரசை விட கொடுமையானவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X