மாயையைக் கடந்து போவது எப்படி?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மாயையைக் கடந்து போவது எப்படி?

Added : மார் 06, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மாயையைக் கடந்து போவது எப்படி?

கேள்வி:ஒரு மனிதர் மாயையைக் கடந்து போவது எப்படி? ஒரு மனிதர் உண்மையானவராக நல்லபக்தராக இருக்கும்போது, எவ்வளவு முயற்சித்தாலும் அவரால் வாழ்க்கையில் தன்தரத்தை உயர்த்திக் கொள்ள முடிவதில்லை. இது மாயையின் காரணமாக நடப்பதா?
சத்குரு:நீங்கள் நல்லவராகஇருந்தால் மட்டும் போதாது. இந்த உலகில் வாழவேண்டுமேயானால், நீங்கள்புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையா? நீங்கள் எப்போதுமே உங்களைநல்ல மனிதர் என்று நினைக்கிறீர்கள். அப்படிப்பட்ட மாயையிலிருந்து நீங்கள்வெளிவர நேரம் வந்துவிட்டது. முதலில் நீங்கள் நல்லவர் என்று எப்படிமுடிவெடுக்கிறீர்கள்? இங்கே அமர்ந்துகொண்டு இந்தக் கூட்டத்திலேயே நான்மட்டும்தான் நல்லவன் என்ற முடிவிற்கு எப்படி வருகிறீர்கள்? உங்களைச்சுற்றியிருக்கிற பத்து பேரைப் பார்த்தபிறகுதான். ஏதோ ஒரு காரணத்தினால்அல்லது ஒப்பிட்டுப் பார்த்துதான் நீங்கள் நல்லவர் என்ற முடிவுக்குவருகிறீர்கள். அப்படித்தானே.
நீங்கள் மட்டும்தான்நல்லவரா? உலகிலேயே நீங்கள்தான் சிறப்பான மனிதர் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், உங்கள் மனதில் உங்களைத்தவிர உலகில் நல்லவர்களே யாரும் இல்லை என்றுஆகிவிடுகிறது. நீங்கள் மட்டுமே நல்லவர். இப்படியொரு முட்டாள்தனத்தில்நீங்கள் இருந்தால் உங்களுக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். நீங்கள்நல்லவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வாழ்க்கையில் உங்கள் உள்தன்மைஅமைதியாக, அன்புமயமாக, ஆனந்தமயமாக இருந்தாலே போதும். நல்லவராக இருப்பதற்குநீங்கள் முயற்சி செய்ய வேண்டாம். இந்த உலகில் இருக்கிற பிரச்சினைகளுக்குகாரணம் நல்லவர்கள்தான். இல்லையா? மோசமான மனிதர் என்று நீங்கள் நினைக்கிறவர்ஏதோ ஒரு குற்றத்தையோ, ஒரு கொலையையோ செய்கிறார். அத்தோடு முடிந்துவிட்டது.
எனவே, நீங்கள் நல்லவர்என்ற முடிவுக்கு, நீங்கள் வரவேண்டிய அவசியமேயில்லை. உங்கள் வாழ்க்கையைஅன்பாக, அமைதியாக, ஆனந்தமாக வாழ்ந்தீர்களா? என்று பார்த்தாலே போதும்.உண்மையாக நல்லவர்களால் சிரிப்பதுகூட முடியாது. தெரியுமா? இப்படித்தான்அவர்கள் ஆகிவிட்டார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் அவர்கள் மிகநல்லவர்கள். இந்த நல்ல குணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? ஒரு நல்லபக்தராகயிருப்பதற்கும், சமூகத்தில் நீங்கள் உயர்வதற்கும் எந்த சம்பந்தமும்கிடையாது. கடவுளே வந்து, உங்கள் தொழிலை நடத்தி, சமூக அந்தஸ்தை உயர்த்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பக்தியைசெலுத்துகிறீர்கள். இந்த பண்டமாற்று முறையை முதலில் நிறுத்துங்கள்.

கடவுள் என்றகணக்குபிள்ளை
ஒரு உயிரினம் உள்ளபடியே அழைப்பு விடுத்தால், அழைப்பு விடும்போது இயற்கைபதில் அளிக்கிறது. நீங்கள் கேட்டால் கடவுள் பதில் தருகிறார். ஆனால் யாரும்கடவுளை எட்டுவதில்லை, அணுகுவதில்லை. அனைவரும் கணக்குப்பிள்ளையாகிவிட்டார்கள். அவர்கள் எப்போதுமே பேலன்ஸ் ஷீட் அடிப்படையிலேயே வாழ்க்கையைபார்க்கிறார்கள். லாபம், நஷ்டம், எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று.அவர்கள் அழைப்பு கடவுளை நோக்கிப் போகவில்லை. காரண அறிவுடன் குரல் எழுப்பும்போது கடவுளின் பெயரை நீங்கள் உரக்க அழைக்கலாம். நீங்கள் விரும்புவதைநீங்கள் செய்யலாம். காரண அறிவிற்கு அவர் செவிடர். இதைத் தெரிந்துகொள்ளுங்கள். காரண அறிவின் குரலுக்குக் கடவுள் காது கொடுப்பதில்லை. அன்பின்அழைப்பிற்கு அவர் உடனே பதிலளிக்கிறார். சிலர் இருக்கிறார்கள். இவர்களின்ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பதில் கிடைக்கிறது. அவர்கள் மிக எளிமையானவர்களாகஇருக்கிறார்கள்.

நாமக்கல் ஆஞ்சனேய பக்தர்
நாமக்கல்லில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் ஒரு ஆஞ்சநேய பக்தர். அவருக்குஎல்லாமே ஆஞ்சநேயர்தான். அவர் எதைக் கேட்டாலும் ஆஞ்சநேயர் பதில்அளிக்கிறார். இந்த யோகா வகுப்பிற்கு வந்தாலும் அவருக்கு யோகா என்றால்தெரியாது. அதனால் அவர் ஆஞ்சநேயரிடம் போய், “நான் யோகா வகுப்புக்குப் போகவேண்டுமா?” என்றார். “போ நல்லது” என்று ஆஞ்சநேயர் சொன்னதாக அவர்உணர்ந்தார். எப்படியாவது அந்த பதில் அவருக்குக் கிடைக்கிறது. ஏதாவது பூவிழுந்து உணர்த்துகிறதோ என்னவோ, அது முக்கியமில்லை.

இவர் மிகஎளிமையானவராகவும், மிக உண்மையானவராகவும் இருப்பதால், அவருக்கு இதுநடக்கிறது. யாராவது அவரிடம் 'அனுமான்' என்று சொன்னால் அவர் கண்களிலிருந்துகண்ணீர் பெருகும். இப்படி வாழ்வது ஒரு மனிதனுக்கு அற்புதமானதொரு நிலை. நான்அவரை அணைத்துக் கொண்டால் உடனடியாக பரவச நிலைக்குப் போய்விடுவார்.ஏனென்றால் அந்த விளிம்பில் தான் அவர் இருக்கிறார். நான் கோயில்களை கேலிசெய்வேன். ஆஞ்சநேயர் ஒரு கடவுள் அல்ல, ஒரு குரங்குதான் என்று கேலிசெய்வேன். அவர் முன்பு நான் என்ன சொன்னாலும் அவருக்கு அதைப் பற்றிக்கவலையில்லை. ஏனென்றால் அவர் சத்குருவையும் ஆஞ்சநேயராகத்தான் பார்க்கிறார்.அவருக்கு சத்குருவும் ஆஞ்சநேயரின் இன்னொரு வடிவம். அதே அதிர்வுகளை அவர்இங்கேயும் உணர்கிறார். ஆஞ்சநேயரைப் பற்றி என்ன மோசமாகப் பேசினாலும், மகிழ்ச்சியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு அதைப்பற்றிக்கவலையில்லை. வகுப்பு முடிந்ததும் நேராக ஆஞ்சநேயர் கோவிலுக்குத்தான் போவார்.இப்படி வாழுகிற மனநிலை மனிதனுக்கு மிக அற்புதமானது. மிக எளியவர்களுக்குஇது சுலபமாக நிகழும்.

எது பக்தி?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது ஆஞ்சநேயர் அல்ல. இது அவருடைய விழிப்புணர்வின் நிலை.நீங்கள் உங்களை எப்படி வைத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதுதான் எல்லாமே. “நீங்கள்” என்று எதைக் கருதுகிறீர்களோ அதுதான் கடவுள். நீங்கள் உள்ளபடியேஉண்மையாக இருந்தால், தர்க்க அறிவைத் தாண்டி, இந்த கேள்வியை அன்பின்அடிப்படையில் கேட்டால் கடவுள் இங்கேயே இருக்கிறார். கடவுளை நேராகப்பார்க்கமுடியாததால், அவர் ஆஞ்சநேயர் வடிவத்தில் பார்க்கிறார். அது ஒரு நல்லகருவி. அதனால் பயனும் இருக்கிறது. ஆஞ்சநேயர் வழிபாடு என்று வெறுமனே போய்வடை மாலை போடுவது, ஜிலேபி மாலை போடுவது என்றிருந்தால், அங்கே பண்டமாற்றுமுறை தொடங்குகிறது. அங்கே நீங்கள் முட்டாளாகிறீர்கள். உங்களைப்போன்றவர்களுக்காக கோவில்கள் சிதைக்கப்படவேண்டும். ஆனால் அந்த ஆஞ்சநேயபக்தர் போன்றவர்களுக்காவே கோவில்கள் திறக்கப்படவேண்டும். அது தேவை. இந்தமனநிலையில் மனிதன் இருக்கமுடியுமென்றால் கோயில் ஒரு அற்புதமான கருவி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201720:20:59 IST Report Abuse
Paranthaman ஸ்ரீகிருஷண் பகவான் மாயைகளின் பிறப்பிடம். அவரை சதா காலமும் தியானித்தால் மாயையை கடக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201720:18:31 IST Report Abuse
Paranthaman மனித சிந்தனைக்கு எட்டாதவை மாயை.அதை எவராலும் கடக்க இயலாது.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201720:16:22 IST Report Abuse
Paranthaman பிரபஞ்சத்தின் சர்வ ரட்சகரே மாயைதான். நாளை நடப்பதை யாரறிவார்.அது தான் மாயை.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201720:13:38 IST Report Abuse
Paranthaman மாயை ஒரு மைல் கல்லல்ல.கடப்பதற்கு. மாயையின் தோற்றத்தை காண்பதரிது.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201720:11:56 IST Report Abuse
Paranthaman மனிதனிடம் முதலில் எழுவது ஆசை.அது பேராசையாகிறத். அப்பேராசையே பல வித கற்பனைகளை உறுவாக்குகிறது, கற்பனைகளின் தொகுப்பே மாயை. உலகே மாயம் வாழ்வே மாயம்.மன் கண்ணில் எழுவது மாயை. அதை கட் புலன்களால் காணமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
Sivakumar - Bangalore,இந்தியா
17-ஏப்-201706:03:39 IST Report Abuse
Sivakumar எல்லாமே மாயை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் "மாயைக் கடந்து போவது எப்படி" என்பதும் மாயைதானே?? சும்மா இருந்தாலே போதும்.
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
13-ஏப்-201713:01:15 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN இவர்கள் எதோ இந்து மதத்தை காப்பற்றுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் ஒரு மாயை தான். இந்து தர்மத்தின்படி, இயற்கையை அழித்து எதுவும் செய்ய சொல்லவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இன்றைய தேவைக்கேற்ப, நாட்டை ஆண்ட மன்னர்கள் எண்ணிலடங்கா அற்புதமான கோவில்களை கட்டி சென்றுவிட்டனர். மேற்கு மலை தொடர்ச்சியில், யானைகள் வாழும் பகுதியில், எந்த ஆர்ப்பாட்டம் தேவை தானா. எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு தான் இந்த பூமி. ஒன்றை அழித்து, ஒன்றை வாழவைப்பது என்பது சாஸ்திர விருத்தம். ஈஸ்வரோ ரக்ஷது. கலியின் கோலமாகவும் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
prema - madurai,இந்தியா
06-ஏப்-201721:35:07 IST Report Abuse
prema என்னோட லைப் ல சதகுரு மாதிரி அட்புதமானவரா சாத்தியமா பாத்ததில்லை.
Rate this:
Share this comment
Cancel
prema - madurai,இந்தியா
06-ஏப்-201721:33:24 IST Report Abuse
prema I want to read more messages from sadhguru. comment solravanga ethavathu therinju pesanum yaro solranga nu solakudathu.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
02-ஏப்-201706:29:06 IST Report Abuse
krishnan இது ஒரு மோசமான மன நோய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை