பறையிசைக் கலைஞர் விஜயலட்சுமி | Dinamalar

பறையிசைக் கலைஞர் விஜயலட்சுமி

Updated : மார் 06, 2017 | Added : மார் 06, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


'பிடித்தால் பழகு இல்லாவிட்டால் விலகு'
பறையிசைக் கலைஞர் விஜயலட்சுமி

சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையை கடந்து செல்லவேண்டிய ஒரு மாலைப்பொழுதில் அந்த சுற்றுவட்டாரத்தையே அதிரவைத்துக்கொண்டிருந்தது புத்தர் கலைக்குழுவின் பறையிசை.

சாவு மேளம் என்று சாதாரணமாகச் சொல்லி மக்களால் தள்ளிவைத்தே பார்க்கப்பட்டு வரும் இந்த இசையை அன்றைய தினம் மேடையில் இருந்தவர்கள் உயர்த்தி பிடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒரே மாதிரியான சீருடையில், மலர்ந்த முகத்துடன் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து அதிரவைத்த அந்த இசையில், நடனத்தில் அனைவருமே மனதை பறிகொடுத்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பார்யைாளர்கள் எழுப்பிய பாராட்டு கரவொலி பறையிசையையும் வெல்லுமளவிற்கு பலமாக இருந்தது.

குழுவில் கல்லாரி மாணவியரும் இடம் பெற்றிருந்தனர், அவர்களில் ஒருவர்தான் இந்த கட்டுரை நாயகி விஜயலட்சுமி.சென்னை தன்ராஜ் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.விளையாட்டு வீராங்கனை. கபடி போன்ற குழு விளையாட்டுகளின் கேப்டன்.

இவருக்கு கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வரை பறை என்றால் என்ன என்றே தெரியாது ஆனால் புத்தர் கலைக்குழுவோடு அறிமுகமானபிறகு இப்போது பறையிசையை ஒலிக்கவிடாத நாளே கிடையாது என்றளவிற்கு இந்த இசையோடு ஒன்றிப்போயுள்ளார்.

இந்த இசை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.பறை இசைக்கருவி தமிழர்களின் பராம்பரிய இசைக் கருவி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப் பட்டுவரும் தமிழிசைக்கருவி.எல்லா தோல் இசைக்கருவிகளுக்கும் தாய்க் கருவி.சுமார் ஒன்றரை கிலோமீட்டர் துாரத்தில் இருப்பவர்களைக் கூட தன்வசப்படுத்தி கேட்கவைக்கக்கூடிய திறனை கொண்ட இசை இதன் இசையாகும்.இதன் இசை முழக்கம் வெற்றியை பறைசாற்றுவது உள்ளீட்ட 35வகையான நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

காலப்போக்கில் சில சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாகச் சுருங்கிப்போனது.இப்போது விடுதலைபெற்று தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக உலகமெங்கும் இசைக்கப்படுகிறது.கைதட்டத்தெரிந்த அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய அரியதொரு இசையான பறையிசையை யாரும் பழகலாம் வாருங்கள் என்கிறார்.
பிடித்திருந்தால் பழகு இல்லாவிட்டால் விலகு என்பது இவரது ஒற்றை வார்த்தையாகும். வெளியே இருந்து பார்த்தால் ஏளனமாகத்தான் தோன்றும் உள்ளே வந்து பாருங்கள் இதன் உன்னதம் புரியும் என்கிறார் சூடாக.


நாட்டுப்புற பாடல்களுடன் ஒரு நாள் முழுவதும் கூட இந்த இசையை வழங்கமுடியும், மெரினாவில் மாணவர்களை இரவு முழுவதும் சோர்வடையாமல் வைத்திருந்த இசை இந்த பறையிசையே.இந்த இசையை நேசித்து கேட்டவர்களும் சோர்வடையவில்லை வாசித்த நாங்களும் சோர்வடையவில்லை என்றால் இந்த இசையின் மகத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்.
படிப்பை முடித்து விரைவில் போலீஸ் அதிகாரியாவதே எனது லட்சியம் ஆனால் இப்போதும் சரி அப்போதும் சரி இந்த பறையிசை என் வாழ்வின் ஒரு அங்கமாகத்தான் இருக்கும், ஒலிக்கும் என்றார்.மகத்தான லட்சியம் கொண்ட விஜயலட்சுமிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே கூறி வாழ்த்தினேன்.


நீங்களும் வாழ்த்த விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:8754424002.(கல்லுாரி நேரத்திலும்,கலையில் ஈடுபட்டிருககும் நேரத்திலும் போனை எடுக்கமாட்டார்,மாலை நேரத்தில் மட்டும் பேசிப்பாருங்கள், எடுத்தால் சந்தோஷப்படுங்கள் எடுக்காவிட்டால் வருத்தப்படாதீர்கள்).

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasubramanian - Tuticorin,இந்தியா
17-ஏப்-201714:08:00 IST Report Abuse
ramasubramanian கலக்குங்க சிஸ்டர் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thulasiraman Ramanujam - Bangalore,இந்தியா
12-ஏப்-201703:28:49 IST Report Abuse
Thulasiraman Ramanujam அதுசரி இதை தப்பாட்டம் என்று ஏன் சொல்கிறோம். அப்படியென்றால் எது சரியான ஆட்டம் .
Rate this:
Share this comment
Narayanasami Thirumeni - Mannargudi,இந்தியா
01-மே-201708:16:18 IST Report Abuse
Narayanasami Thirumeniஅவர் கையில் வைத்து இருக்கும் கருவியின் பெயர் "பறை... தப்பு " என்று இரு பெயர் கொண்டது தப்பு என்ற கருவியை வைத்து ஆடுவதால் அது" தப்பு ஆட்டம்"...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-மார்-201709:51:02 IST Report Abuse
Lion Drsekar மிக மிக அருமை, இந்த கட்டுரையைப் படிக்கும்போது நம் காதுகளில் அந்த தாக்கு கருவியின் ஒலி காதில் ஒலிப்பதுபோன்ற ஒரு உணர்வு. மிக அருமையான கட்டுரை, தினமலர் மற்றும் திரு முருகராஜ் அவர்களுக்கு நன்றி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Muthu Porchezhian - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மார்-201701:41:23 IST Report Abuse
Muthu Porchezhian வாழ்த்துக்கள் சகோதரி உங்களது முயற்சி மென்மெலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
17-மார்-201718:07:58 IST Report Abuse
A. Sivakumar. சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Tamizhnadu,இந்தியா
14-மார்-201717:05:12 IST Report Abuse
Thamizhan உன்னோட இந்த கெத்து ரொம்ப அழகுடா உனக்கு ,உங்களது துணிச்சலான முயற்சிக்கு வெற்றி மேலும் பல கிடைக்கவேண்டும் .சாதனைப்பெண்ணாக நீங்கள் வலம்வர வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
D.GUNAVATHI - Tiruchirappalli,இந்தியா
08-மார்-201712:30:15 IST Report Abuse
D.GUNAVATHI மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்தி வணங்குகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
08-மார்-201709:55:21 IST Report Abuse
Pannadai Pandian நமது கலாச்சாரத்தை, பாரம்பரிய கலையை விடக்கூடாது. அதில் புதுமையை புகுத்தி (இசைக்கருவிகள், டியூன், பயன்பாடு) கலையை செழிப்புரை செய்ய வேண்டும். நான் சிறுவனாய் இருக்கும் பொது....ஆஹா...அது ஒரு சொர்க்கம்......வெளியில் நிலவு சுட்டெரிக்க, அரை தூக்கத்தில் எங்கோ இருந்து காதில் விழும் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி அந்த நிசப்தமான இரவில் தெள்ள தெளிவாக இன்னமும் என் காதில் ரீங்காரமிடுகிறது......கோடையில் இந்த வித தெருக்கூத்துக்களை ஒவ்வொரு ஊரிலும் நாம் காணலாம். தற்போதும் யூ டியூபில் இந்த கலை நிகழ்ச்சிகளை ரசிக்கிறேன் ஆனால் பெரிய மாற்றம் தெரிகிறது. குளிர்காலங்களில் 8 இல் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேப்பஞ்சேரி, சின்னங்குடி, தரங்கம்பாடி கடற்கரையில் மோதும் கடல் அலையின் சப்தமும் தெள்ள தெளிவாக காதில் விழும். அது இயற்கையோடு ஒட்டிய வாழ்வு மனிதன் குடும்பத்தையும் தன்னையும் வளப்படுத்திக்கொள்ள பலத்தை இழக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-மார்-201707:26:05 IST Report Abuse
Rajendra Bupathi வாழ்த்துக்கள் சகோதரி?
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
08-மார்-201710:21:59 IST Report Abuse
Pannadai Pandianசகோதரியோ கொள்ளு பேத்தியா ??? ரொம்ப யூத்துன்னு நினைப்பு...சாரி.....இளமையாகவே இருப்பதாக என்னுங்க....அது நோய் நொடியில்லாத நாள் வாழ்வை தரும்....
Rate this:
Share this comment
SALEEM - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-மார்-201711:40:18 IST Report Abuse
SALEEMநீங்கள் சொல்வதெல்லாம் மனிதனிக்குதான் பொருந்தும், உன்னை போன்ற கொரில்லாவுக்கு அல்ல,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை