என் சைக்கிளுக்கு வயது 59| Dinamalar

என் சைக்கிளுக்கு வயது 59

Updated : மார் 09, 2017 | Added : மார் 09, 2017 | கருத்துகள் (16)
Advertisement


எனக்கு வயது 84,என் சைக்கிளுக்கு வயது 59


சென்னை விருகம்பாக்கம் நடேசன் பூங்காவிற்கு அதிகாலை வேளையில் போனால் ஒருவர் சைக்கிளில் பூங்காவை சுற்றி வருவதை பார்க்கலாம்.

கம்பீரமான தோற்றம்,உடையுடன் காணப்படும் அவரது பெயர் பா.நமசிவாயம்.

இப்போது 84 வயதாகும் நமசிவாயம் கடந்த 59 வருடங்களாக சைக்கிளைத்தவிர எந்த வாகனமும் ஒட்டாதவர்.

பி.காம் படித்த கையோடு பல்வேறு துறைகளில் பல்வேறு ஊர்களில் வேலை தேடிவந்த போதும் தன் தாயை அருகில் இருந்த பார்க்கவேண்டும் பராமரிக்கவேண்டும் என்பதற்காக மாற்றம்(டிரான்ஸ்பர்) இல்லாத வேலையான சென்னை துறைமுக வேலையை ஏற்றுக்கொண்டு 34 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வுபெற்றவர்.

படிக்கும் காலத்தில் இருந்தே நாடகம், நடிப்பு, வாத்தியங்கள் வாசிப்பு என்பதில் தீவிரமாக இருந்து நிறைய ரசிகர்கள் பெற்றிருந்தவர். தனது மனைவியின் மறைவிற்கு பிறகு அத்தனையையும் விட்டுவிட்டு மனைவியின் நினைவுகளை மட்டுமே சுமந்துகொண்டு இருப்பவர்.

இப்போது 84 வயதானாலும் இளமையான உணர்வுடனும் உடலுடனும் காணப்படுகிறார்.இதற்கு முக்கிய காரணமாக இவர் கருதுவது தனது சைக்கிளைத்தான்.

1958-ல் இவர் சம்பளம் 130 ரூபாயாக இருந்த போது ஒரு சைக்கிள் வாங்கினார்.பிஎஸ்ஏ.,அரிஸ்டோகிரேட் ஸ்போர்ட்ஸ் மாடல் என்ற அந்த சைக்கிளை 160ரூபாய் கொடுத்து வாங்கினார்.வாங்கிய நாள்முதல் இன்று வரை இந்த சைக்கிளை பிரியவில்லை.எங்கே போனாலும் சைக்கிள்தான் அதற்குபிறகு பொருளாதார ரீதியாக பன்மடங்கு உயர்ந்த போதும் சைக்கிளை மாற்றவில்லை.

ஒரு முறை சைக்கிளை மறதியாக பூட்டாமல் ஒரு தெருவில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் காலையில்தான் சைக்கிள் நினைவு வந்தது. உடனே போய் பார்த்தால் விட்ட இடத்தில் சைக்கிள் அப்படியே இருந்தது.அது முதல் சைக்கிளின் மீதான பிரியம் இன்னும் அதிகரித்துவிட்டது.இத்தனை வருடங்களில் டயர்,ட்யூப் மற்றும் சில உதிரிபாகங்களை மாற்றியிருக்கிறார் மற்றபடி சைக்கிள் 'ஜம்' என்று அப்படியே உள்ளது.இப்போதும் எங்கு போவதானாலும் சைக்கிள்தான்.

பேரக்குழந்தைகளுடன் இனிமையாக பொழுதை கழிக்கும் நமசிவாயம் கடந்த பல வருடங்களாக தினமலர் படிக்கும் வாசகர்.தினமலரில் உதவி கேட்டுவரும் கட்டுரைகளை படித்துவிட்டு, அவர்களுடன் பேசி தன் சக்திக்கு உள்பட்டு உதவுவதில் சந்தோஷம் கொள்பவர்.

'எதையும் முடிந்தவரை முயற்சிக்காதே,முடியும் வரை முயற்சி செய்' வெற்றி நிச்சயம் என்று எல்லோருக்கும் போதிக்கும் நமசிவாயம், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர். ஒரு முறை பேசிப்பாருங்களேன் எண்:044-23770225.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai Rm - nagapattinam,இந்தியா
04-மே-201712:11:47 IST Report Abuse
Pillai Rm அதான் இம்மாம் வருஷம் நல்லா கீறாரு ....இப்போ துட்டு மிஞ்சி போயி ஸ்கூல் கே ஒரு லெச்ச ரூவா பைக்குல போறானுவோ
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
22-ஏப்-201710:38:14 IST Report Abuse
Sathish மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இந்த வயதிலும் அவரின் நினைவுகளை சுமந்துகொண்டு இருக்கிறார் என்றால் அவர்களின் உறவு எவ்வளவு பாசமானது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஏப்-201722:34:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்னுடைய தந்தையாரின் நினைவாக அவருடைய சைக்கிளை (பிலிப்ஸ் இங்கிலாந்து) இன்னமும் ஓடும் வகையில் பராமரித்து வைத்துள்ளேன். அதன் வயது 75 வயதுக்கும் மேல்.. இன்றைய காலகட்ட சைக்கிள்களை விட 6 அங்குலம் உயர்வாக இருக்கும் ஃபிரேம்.. அவ்வப்பொழுது அதை ஓட்டியும் சுகம் காண்பேன். குரங்கு பெடல் போட்டு சைக்கிள் விட கற்றுக் கொண்டதே அந்த வண்டியில் தான்.. தந்தையாரின் நினைவின் முத்திரையாக இன்றும் என் வீட்டில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
sathye - Chennai,இந்தியா
27-மார்-201716:38:05 IST Report Abuse
sathye வாழ்க பல்லாண்டு .............
Rate this:
Share this comment
Cancel
sathye - Chennai,இந்தியா
27-மார்-201716:31:29 IST Report Abuse
sathye Every one may use Bicycle daily because it is much useful for health and pollution free Environment.
Rate this:
Share this comment
Cancel
Abdul Basith - deira dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மார்-201711:50:45 IST Report Abuse
Abdul Basith பெற்ற தாய்க்காக தன் எதிர் காலத்தை கணக்கில் கொள்ளாமல் தியாகம் செய்த தியாகி இவர்.
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
24-மார்-201717:21:45 IST Report Abuse
vidhura தங்களால் சமூகத்துக்கு முடிந்த அளவு நன்மை செய்துகொண்டு _ காற்றை மாசுபடுத்தும் வாகனங்களை , குளிர் சாதன பெட்டிகளை வீட்டில் உள்ளவர்களை விட அதிக எண்ணிக்கையில் வாங்கும் ( பொது இடத்தை ஆக்ரமித்தாவது) மனிதர்கள் மத்தியில் _ இவர் போலவும் சிலர் உள்ளார்கள் என்பதே ஒரு ஆறுதல். ஒன்று மட்டும் நிச்சயம் _ மனிதன் திருந்தாவிட்டால் , இயற்கைக்கு பாடம் புகட்ட தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-மார்-201715:12:58 IST Report Abuse
K.Sugavanam சைக்கிளும் 59 வருஷமா ஆட்டம் காட்டாம ஓடுதே,அத சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
16-மார்-201722:21:42 IST Report Abuse
X. Rosario Rajkumar Health is wealth. நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-மார்-201707:57:19 IST Report Abuse
Rajendra Bupathi இப்படியும் சில ஆத்துமாக்கள் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள்? இன்னும் ஆரோக்கியமாக நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை