ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்! | ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்!

Updated : மார் 11, 2017 | Added : மார் 11, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரூபாய் நோட்டு வாபஸ், நடவடிக்கை, குறைந்தது பணப்புழக்கம்!

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


குறைவு:

இதுகுறித்து நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் தெரிவித்ததாவது: 2014, மார்ச் 31ம் தேதி ரூ12.82 லட்சம் கோடியாகவும், 2015, மார்ச் 31ம் தேதி ரூ.14.28 லட்சம் கோடியாகவும் இருந்த நாட்டின் பணப்புழக்கம், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி(31-03-2016) வரை, 16.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இதனையடுத்து கடந்த நவ.,8ம் தேதி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் காரணமாக, தற்போது (2017 மார்ச்,3 வரை) நாட்டின் பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


புழக்கத்தில்..

2017, பிப்ரவரி மாதம் வரை, 1.9 பில்லியன் மதிப்பிலான 5 ரூபாய் நாணயங்களும், 1.3 பில்லியன் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. மேலும் 2.6 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளும், 3.6 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
11-மார்-201714:35:25 IST Report Abuse
Balaji பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..... ஆனால் மதிப்பிழம்பிற்கு பிறகு பல சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்...... இதனால் பலருக்கு வேலையும் பறிபோயுள்ளது....... புதிய பணம் மாற்றப்பட்டதிலும் பல முறைகேடுகள் நடந்து பணமுதலைகள் தான் தப்பித்துக்கொண்டார்கள்........
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-மார்-201711:53:54 IST Report Abuse
Pasupathi Subbian பண புழக்கம் குறைந்ததால் வியாபாரம் குறைந்துவிட்டது என்று அர்த்தம். மக்களிடம் உள்ள பணத்தை அரசாங்கம் முடக்கிவிட்டதால் , வாங்கும் சக்தி குறைந்துவிட்டது, இதனால் பாதிக்கப்படுவது சிறு மற்றும் குறு வியாபாரிகள் தான். பெரும் வணிக வளாகங்களில் இந்த பிரச்சனை இருக்காது, அதில் இ மணி என்னும் கார்ட்டு தேய்ப்பது குறையாது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மார்-201710:36:48 IST Report Abuse
Nallavan Nallavan வீட்டுக்கடன் வட்டி இன்னமும் குறைக்கப்படுவதே நியாயம் .....
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
11-மார்-201711:40:24 IST Report Abuse
N.Purushothamanஏற்கனவே குறைக்கப்பட்டு இருக்கிறது... இன்னமும் குறையும் என நம்புவோம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X