மன்னிச்சிருடா மகனே...| Dinamalar

மன்னிச்சிருடா மகனே...

Updated : மார் 13, 2017 | Added : மார் 13, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


'மன்னிச்சுக்குடா மகனே,உன்னை என்னால படிக்கவைக்க முடியல'
இயக்குனர் பாண்டிராஜ்ன் உருக்கமான பேச்சு.


'மன்னிச்சுக்குடா மகனே, உன்னை என்னால படிக்கவைக்க முடியல'என்று கையெடுத்து கும்பிட்ட என் அப்பாவிடம், நான் படிக்கலைன்னாலும் இப்ப நல்ல நிலையில இருக்கேன் என்று பதினாறு வருடம் கழிச்சு சொல்லவந்த போது என் அப்பா அதை கேட்கும் மனநிலையில் இல்லை என்று கண்கலங்க சொன்னார் இயக்குனர் பாண்டிராஜ்.

12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு நுாறு சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற தன்னம்பிக்கை திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 'பசங்க' படத்தின் மூலம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ்ம் ஒருவர்.

இந்த கல்வித்திருவிழா மேடையில் இவர் பேசியது பலரது மனதையும் உருக்கிவிட்டது.

நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் இப்பவும் நான் என்னை சினிமாக்காரன் என்று சொல்லிக்கொள்வதைவிட விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை அடைகிறேன்.


நான் சினிமாவிற்கு வந்தது கூட விருது வாங்கணும் என்பதற்காக அல்ல நிறைய சம்பாதித்து ஊர்ல நிறைய நிலம்வாங்கி விவசாயம் பண்ணவேண்டும் என்பதற்காகத்தான்.
அந்த அளவிற்கு விவசாயத்தை நான் நேசித்தேன் ஆனால் விவசாயத்தில் ஏற்பட்ட வறட்சி வாழ்க்கையிலும் நீடித்தது.பிளஸ் டூ படித்து முடித்து கல்லுாரியில் படித்து ஒரு ஆசிரியராக வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது.புதுக்கோட்டை கல்லுாரியில் படிக்க அப்போது விண்ணப்பமே நாற்பது ரூபாய்தான்.


அந்த நாற்பது ரூபாயை என்னால் புரட்ட முடியல இதை எல்லாம் பார்த்த என் அப்பா மன்னிச்சுக்குடா மகனே என்னை உன்னால் படிக்கவைக்கமுடியாதுடா என்று கண்கலங்க கையெடுத்து கும்பிட்டு சொன்னார்.நான் ஆசிரியராகும் ஆசை அன்றோடு முடிந்தது.
அதன்பிறகு எனக்குள் இருந்த சினிமா ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.இந்த சூழ்நிலையில் என் அம்மா என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோசியரிடம் காண்பித்தார்.அவர் பையனுக்கு இரும்பு வியாபாரத்தில்தான் விருத்தி இருக்கு என்று சொல்லிவிட்டார்.


அப்போது என் மாமா சைக்கிள் கடை வைத்திருந்தார் இதுதான் இரும்பு சம்பந்தபட்ட உத்தியோகம் ஓழுங்க மாமா கடையில் சேர்ந்து உருப்படுவதற்கான வழியை பாரு என்று என் அம்மா அனத்த ஆரம்பித்தார்.
சரி இனி நாம இங்கு இருந்த நம்மள ஒரேடியா அமுக்கிடுவாங்கன்னு நினைச்சு வீட்டு உண்டியல்ல இருந்த 650 ரூபாயை எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டேன்.


'டே என்னடா பண்றே' என்று அப்பா அப்பப்பா கேட்பார், சினிமா கம்பெனியிலதான் இருக்கேன் என்று பதில் சொல்லிட்டு இருந்தேன் ஆனால் உண்மையில் நான் ஏவிஎம் ஸ்டூடியோவின் வாசலில் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.
ஊர்ல இருந்து வந்த ஒரு ஆளு என்னை கேட் வாசல்ல பார்த்துட்டு அப்பாகிட்ட உன் மகன் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கிட்டு இருக்கான் என்று போட்டுக்கொடுத்துவிட்டார். அதன்பிற்கு அங்கே இருக்கக்கூடாது என்று முடிவு செய்து பாக்யா பத்திரிகை அலுவலகத்தில் ஆபிஸ் உதவியளரா வேலை பார்த்தேன்.


அங்கு இருந்து தொடர்புகள வளர்த்துக்கிட்டு உதவி இயக்குனரா மாறினேன். ஜெயிக்கணும்னு ஆளுக்கொரு கதையோட சுற்றிக்கிட்டு இருக்கும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான உதவிஇயக்குனர்களில் ஒருவனாத்தான் நானும் சுற்றிக்கிட்டு இருந்தேன் அதில் இருந்து படிப்படியா முன்னேறி பசங்க படம் எடுத்து நானும் நாலு பேர் பாராட்டுற இயக்குனரா மாறியிருந்தப்பா 16 வருஷம் முடிஞ்சு போயிருந்துச்சு.
கையில காசு பணத்தோட உங்க மகன் சினிமாவில் ஜெயிச்சுட்டேம்பா என்று சொல்வதற்காக ஊருக்கு போயிருந்த போது அதிர்ச்சி காத்திருந்தது? என்னை யார் என்று கேட்குமளவிற்கு அப்பா மனநிலை பிறழ்ந்து இருந்தார். எவ்வளவு காசு பணம் செலவழித்தும் எவ்வித பிரயோசனமும் இல்லை அப்பா அப்படியேதான் கடைசிவரை இருந்தார்.


ஆனந்தம் மாதிரி ஒரு அமைப்பு அப்போது எனக்கு உதவியிருந்தால் நான் என் அப்பாவை அருகில் இருந்துகொண்டே பார்த்திருப்பேன்,பாதுகாத்திருப்பேன், படித்திருப்பேன் ஆனால் உதவ யாருமே இல்லை.
ஆகவே நாம் நம்மிடம் இருக்கும் காசு பணத்தைக் கொண்டு முடிந்தவரை கல்விக்கு உதவுவது என்று முடிவுசெய்தேன்.நான் படித்த புதுக்கோட்டை அரசு பள்ளியின் மதிப்பையும் மாணவர்களின் தரத்தையும் உயர்த்த முடிவு செய்தேன்.


அதனடிப்படையில் இப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் போல தரமான சீருடை,டை,ஷூ என்று வலம்வருகின்றனர்.
எனக்கு தேசிய விருது கிடைத்த போது கிடைத்த மகிழ்ச்சியைவிட அந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.


அந்த ஆனந்தத்தை அனுபவித்தால்தான் தெரியும், அதே ஆனந்தத்தை இந்த 'ஆனந்தம்' மூலம் அனுபவிப்பவர்களுக்கும் புரியும்...
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ
12-மே-201703:21:41 IST Report Abuse
venkatasubramani நான் +2 முடித்தவுடனும் என் தாயார் இதையேதான் சொன்னார். காரணம் எங்களுக்கு சொந்தமாக வீடு இருந்ததே தவிர மாத வருமானம் 375 தான். பிறகு நானே மாலை கல்லூரியில் சேர்ந்து, பகலில் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைக்கு சென்றேன். அங்கிருந்து பிகாம் முடித்து, பிறகு தட்டு தடுமாறி சி.ஏ முடித்து, பின் வக்கீலுக்கான படிப்பும் முடித்து விட்டேன். திரு. பாண்டி ராஜ் அளவிற்கு வளரவில்லை. ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. முயற்சியை மட்டும் கைவிடுவதாக இல்லை.
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
08-மே-201719:30:50 IST Report Abuse
K.Palanivelu கல்லூரி விண்ணப்ப கட்டணம் நாற்பது ரூபாய் இல்லை என்று சொல்பவர் வீட்டில் உண்டியில் மட்டும் அறுநூற்று ஐம்பது ரூபாய் எப்படி இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201705:06:15 IST Report Abuse
SUDARSAN "":::புதுக்கோட்டை கல்லுாரியில் படிக்க அப்போது விண்ணப்பமே நாற்பது ரூபாய்தான்.இங்கு இருந்த நம்மள ஒரேடியா அமுக்கிடுவாங்கன்னு நினைச்சு வீட்டு உண்டியல்ல இருந்த 650 ரூபாயை எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டேன்.::::"" சென்னைக்கு போவதற்கு பதில் 40 ரூபாய் கொடுத்து விண்ணப்பம் வாங்கி படித்து உங்கள் தந்தையின் கனவை நனவாக்கியிருக்கலாம் . உங்களுக்கு இருந்த சினிமா மோகத்தினால் உண்டியலை உடைத்து 650 ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னை வந்ததாக உண்மையை கூறியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Deva.Ramanathan - Puducherry,இந்தியா
31-மார்-201708:39:54 IST Report Abuse
Deva.Ramanathan அன்றொரு நாள் அந்த உண்டியலில் நாற்பது ரூபாய் இல்லாமல் இருந்ததா சினிமா ஆசையில் தகப்பனை தொலைத்து விட்டார் ஓர் முக்கியமான விஷயம் மிஸ்ஸிங் எவ்ளவு நிலம் வாங்கியிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
23-மார்-201710:44:08 IST Report Abuse
Baalu பாண்டியராஜன், வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
21-மார்-201710:24:37 IST Report Abuse
தாமரை சபாஷ் பாண்டியராஜன். இறைவனை வேண்டி உண்மையான மனதோடு உங்களை வாழ்த்துகிறேன். இன்னும் இன்னும் புகழ்பெற்று மேலும் மேலும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். இதற்குமேல் உங்களை எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
19-மார்-201719:59:22 IST Report Abuse
seenivasan அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்படும் பாண்டியராஜ் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Zacharias Rosario - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
19-மார்-201711:26:25 IST Report Abuse
Zacharias Rosario எல்லா பிள்ளைகளும் செய்யற அதே தப்புதான். காசு பணம் அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்தாது. இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே.....
Rate this:
Share this comment
Cancel
Chinniah Alagappan - pudukkottai,இந்தியா
18-மார்-201718:30:44 IST Report Abuse
Chinniah Alagappan நண்பா உன் அருகில் அமர்ந்து படித்ததிற்க்கு பெருமை படுகிறேன் . அழகப்பன் மேலப்பனையூர் . ( முடிந்தால் ஈமெயில் செய்யவும் melavasan@gmail.com
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-மார்-201706:11:33 IST Report Abuse
K,kittu.MA. இன்று சென்னையில் வசிக்கு பலர் இப்படி ஏதோ ஒரு மனா வேதனை உடன் தான் வந்ததும் இன்று நல்ல இருக்கோம்..வந்தாரை வாழவைக்க சென்னைல பல வேலை இருக்கு. அவர் அவர் திறமையை காட்ட நல்ல வழி இருக்கு...பிழைப்பு அவ்வளவு சுலபம் இல்லை என்பது பலருக்கு தெரில..விவசாயம் பார்க்க வழி இல்லாமல் ஓடி வரும் பலர் இன்று வியாபாரம் செய்கிறார்கள் பலரும் வாழ விடுங்க. நண்பர்களே..கை தூக்கி விடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை