பா.ஜ., வேட்பாளர் ஜனாதிபதியாவது உறுதி...! தேர்தல் வெற்றியால் பலம் அதிகரிப்பு | பா.ஜ., வேட்பாளர் ஜனாதிபதியாவது உறுதி...! தேர்தல் வெற்றியால் பலம் அதிகரிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
உறுதி...!
பா.ஜ., வேட்பாளர் ஜனாதிபதியாவது
தேர்தல் வெற்றியால் பலம் அதிகரிப்பு

புதுடில்லி,:உ.பி., - உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றியால், ஜூலையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால், பா.ஜ., மேலிட தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பா.ஜ., வேட்பாளர் ஜனாதிபதியாவது  உறுதி...!  தேர்தல் வெற்றியால் பலம் அதிகரிப்புஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலையுடன் முடிவடைகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு, தேர்தல் நடக்கவுள்ளது.
உ.பி., சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, 325 தொகுதிகள் கிடைத்துள்ளன. உத்தரகண்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 57 பேரும், மணிப்பூரில், 21 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி, நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், தங்களுக்கு சாதகமான வேட்பாளரை நிறுத்த, பா.ஜ.,வுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, பார்லிமென்டின் இரு சபைகளைச் சேர்ந்த, 776 எம்.பி.,க்கள், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த, 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுகளை பதிவு செய்வர். எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, அவர்கள் சார்ந்த, மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப மாறுபடும்.

ஓட்டு மதிப்பு அதிகமாக இருக்கும்


உ.பி., போன்ற, மக்கள் தொகை அதிகமான மாநிலங்களைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, 10 லட்சத்து, 98 ஆயிரத்து, 882 ஓட்டுகள் கணக்கில் எடுக்கப்படுகின்றன. ஐந்து லட்சத்து, 49 ஆயிரத்து, 442 ஓட்டுகளுக்கு

கூடுதலாக பெறும் வேட்பாளர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, தற்போது தேர்தல் முடிந்த, உ.பி., - உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு, ஒரு லட்சத்து, மூன்று ஆயிரத்து, 756
ஓட்டுகள். உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடப்பதற்கு முந்தைய நிலவரப்படி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ.,வுக்கு, 70ஆயிரம் முதல், 75 ஆயிரம் ஓட்டுகள் வரை, கூடுதலாக தேவைப்பட்டது.இதில், தற்போது, உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு கிடைத்த, எம்.எல்.ஏ.,க்கள் மூலம் மட்டுமே, 67 ஆயிரத்து, 600 ஓட்டுகள் கிடைக்க உள்ளன.

உத்தரகண்டில், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள, எம்.எல்.ஏ.,க்கள் மூலம், 3,648 ஓட்டுகள் கிடைக்கும். இவற்றின் மூலம், ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தேவையான கூடுதல் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டில், ராஜ்யசபாவில், பா.ஜ., உறுப்பினர்களின்
எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.அடுத்தாண்டு ஆகஸ்டில், ராஜ்யசபாவைச் சேர்ந்த, 58 எம்.பி.,க்கள் ஓய்வு பெறுவர். அந்த இடங்களில் பாதிக்கும் மேலானவை, பா.ஜ.,வை சேர்ந்தோரால் நிரப்பப்படும்.

யாருக்கு வாய்ப்பு?


ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதால், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
முரளி மனோகர் ஜோஷி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட சில தலைவர்கள், பா.ஜ., சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, பிரதமர் மோடியைவிமர்சிப்பதால், அவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisementமக்கள் தொகைப்படிமாறும் ஓட்டு மதிப்பு


ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், ஒவ்வொரு, எம்.பி.,யின் ஓட்டு, 708 ஓட்டுகளுக்கு சமம். அதே சமயம், எம்.எல்.ஏ.,வின் ஓட்டு, அவர் சார்ந்த மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அமையும்.
நாட்டிலேயே, அதிக மக்கள் தொகை உடைய மாநிலமான, உ.பி.,யைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வின் ஒரு ஓட்டு, 208 ஓட்டுகளுக்கு ஈடானது. சிக்கிம் மாநில, எம்.எல்.ஏ.,வின் ஓட்டு, நாட்டிலேயே மிகக் குறைவானதாக, வெறும், எட்டு ஓட்டுக்கு சமமாக உள்ளது.
உத்தரகண்ட் மாநில, எம்.எல்.ஏ., 64, பஞ்சாப், எம்.எல்.ஏ., 116, கோவா, எம்.எல்.ஏ., 20, மணிப்பூர், எம்.எல்.ஏ., 18 ஓட்டுகள் மதிப்பு உடையவர். லோக்சபாவில், பா.ஜ.,வுக்கு, 282 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 56 எம்.பி.,க்களும் உள்ளனர். சமீபத்திய தேர்தலுக்கு முன், நாடு முழுவதும், 1,126 எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., பெற்றிருந்தது.
ஐந்து மாநில தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை, தேர்ந்தெடுக்கும் வகையில், போதிய, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., பெற்றுவிட்ட போதும், கூட்டணி கட்சிகளின் ஒருமித்த ஆதரவை பெற்ற நபரையே, பா.ஜ., தேர்வு செய்யும் என, அக்கட்சி
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2012 தேர்தலில் நடந்தது என்ன?கடந்த, 2012ல் நடந்த, ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், பிரணாப் முகர்ஜி, 7 லட்சத்து, 13 ஆயிரத்து, 763 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்த ஓட்டுகளில், இது, 70 சதவீதம். அந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பாக, முன்னாள் சபாநாயகர், பி.ஏ.சங்மா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kvRavikumar - tiruchengode  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-201723:44:31 IST Report Abuse

kvRavikumarநம்ம பகுத்தறிவு பகலவன் கலைஞர் தான்்

Rate this:
MOGANDOSS RAO - New Delhi,இந்தியா
14-மார்-201722:44:18 IST Report Abuse

MOGANDOSS RAOஸ்மிரிதி இரானி தான் பொருத்தமானவர் . நம்பிக்கையானவர் மோடிக்கு

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
14-மார்-201722:04:16 IST Report Abuse

தாமரை ஜனாதிபதி பதவிக்கு அத்வானி அவர்கள்தான் சரியான தேர்வாக இருக்கும். அதுபோலவே துணை ஜனாதிபதிக்கு ஜோஷி அவர்கள் மிகப் பொருத்தமானவர். இந்த இருவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.நமது தேசம் நேர்மையாளர்கள் நிறைந்த தேசம். சந்தேகமேயில்லை.ஆனால் எல்லா நேரத்திலும் நேர்மையைக் கடைப் பிடிப்பதில் தேசத்துக்கு மிகப் பெரிய பாதிப்புகளை கொண்டுவந்து விடும். இதற்க்கு கடந்த கால வரலாறே சாட்சி. அரபு நட்டு மூர்க்கர் எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாமல் paarathaththin மீது படை எடுத்து தாக்கியபோது நமது ஹிந்து மன்னர்கள் நேர்மையான முறையில் போரில் ஈடுபட்டனர் இவர்கள் சாணக்கிய நீதியை மறந்து நேர்மையைக் காட்டி அந்நிய எதிரிகளை பூண்டோடு அழிக்காமல் உயிர் பிழைத்துப் போக அனுமதித்தனர். அதன் காரணமாகவே அந்நிய சக்திகள் மீண்டும் வந்து குறுக்கு வழியில் சூழ்ச்சியில் தேசத்தைக் கைப்பற்றினர்.இதனால் தேசத்தின் இறையாண்மையே பாதிக்கப்பட்டு கடும் அவலத்தில் தள்ளப்பட்டோம்.இனியும் இந்த நிலை வரக்கூடாது.நேர்மை வேண்டும்தான்.ஆனால் அதுவே தேசத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் பட்சத்தில் மாற்றி சிந்திப்பதில் தவறில்லை. இதை இந்த இரு பெரும் தலைவர்களும் உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பதாக இருந்தால் மட்டுமே ஜனாதிபதி, துணைஜனாதிபதி ஆகிய பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கலாம். திரு மோடிஜியும் அமித்ஷாவும் இணைந்து மக்களின் மனநிலையை உணர்ந்து சரியான திட்டமிடலின் மூலமும் மிகக் கடினமான உழைப்பின் பயனாகவும் பா ஜ க வை உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.இதை அனைவரும் உணர வேண்டும்.குறிப்பாக அத்வானிஜி அவர்கள் உணர வேண்டும். மோடிஜியுடன் மனம் விட்டு விவாதிக்க வேண்டும்.தேச நன்மைக்கு இந்தத் தலைவர்கள் அனைவரும் இணைந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். பாரத அன்னை வெல்க.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-மார்-201721:58:26 IST Report Abuse

K.Sugavanamஇந்த முறை ஒரு கிறிஸ்துவரை ஜனாதிபதியாக பிஜேபி கொண்டுவரவேண்டும்..

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-மார்-201723:24:13 IST Report Abuse

பலராமன்ஒரே ஒரு உண்மையான ஒரு தமிழர்..... அவருக்கு மட்டும்தான் தகுதி இருந்தது...

Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
14-மார்-201721:48:32 IST Report Abuse

Cheranஇந்த தேர்தல் வெற்றியால் பிஜேபி - அடுத்து என்ன பண்ண போறீங்க? பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க போறீங்களா? மறுபடியும் விலையை ஏத்துவீங்க. 2000 மற்றும் 100 ரூபாய் பண மதிப்பிழப்பு செய்வீர்கள். மறுபடியும் அடுத்த வருடம் GDP யை திருத்தி நீங்களே ஒரு நம்பரை போட்டு ஊடக உதவியால் நம்ப வைப்பீர்கள். ஆனால் கீழ் நிலையில் மக்கள் அணைத்து கஷ்டங்களையும் அனுபவிப்பான். கார்பொரேட் காரன் enjoy பண்ணுவான். வரி மேல் வரி போடுவீர்கள். வங்கிகளும் அவர்கள் பங்குக்கு மறைமுகமாக எங்கள் பணத்தை கொள்ளை அடிப்பான். இதுதான் பிஜேபி ஆட்சி.

Rate this:
Ramudu - Chennai,இந்தியா
14-மார்-201718:20:10 IST Report Abuse

RamuduRemembering Cho. Ramaswamy... Great strategist...இன்று இருந்திருந்தால், அவர் இந்த பதவிக்கு பொருத்தமாக இருந்திருப்பார்...

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
14-மார்-201717:49:12 IST Report Abuse

siriyaarAdvani should be given that post,if modi did the same hr will be respected by all people india.

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
14-மார்-201716:28:56 IST Report Abuse

Arasanதிரு அத்வானி. அவருக்கு இதை விட சிறந்த மரியாதையை அளிக்க முடியாது. பாஜக திரு மோடி அவர்கள், இதை செய்ய வேண்டும்.

Rate this:
Kirubagaran Krishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மார்-201714:43:44 IST Report Abuse

Kirubagaran Krishnanவெங்கையா நாயுடு

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-மார்-201714:25:01 IST Report Abuse

Nallavan Nallavanபாஜக -வின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு வல்லரசாகும் ..... சுபிட்சம் அடையும் ....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-மார்-201721:50:05 IST Report Abuse

K.Sugavanamஅசீமானந்தா வா இல்ல சாக்ஷி மஹாராஜா?...

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement