'மக்களை பற்றிய கவலை பினாமி அரசுக்கு இல்லை!' | 'மக்களை பற்றிய கவலை பினாமி அரசுக்கு இல்லை!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மக்களை பற்றிய கவலை பினாமி அரசுக்கு இல்லை!'

சென்னை,:'ஏழை மக்களை பற்றி, சிறிதும் கவலைப்படாத அரசாக, பினாமி தமிழக அரசு உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:

'மக்களை பற்றிய கவலை பினாமி அரசுக்கு இல்லை!'

சமீப காலமாக, ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நிலைமையை கண்டு, மிகவும் வேதனை அடைகிறேன்.

பினாமி அரசு


ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதாக நம்பியிருக்கும், ரேஷன் கடைகள் சரியாக

இயங்கவில்லை; அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள்புகார் கூறி வருகின்றனர். ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதில், தற்போதுள்ள, பினாமி அரசு காலதாமதத்தை ஏற்படுத்தி, கடும் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது.
பருப்பு, பாமாயில் எண்ணெய் போன்ற, அத்தியாவசியப் பொருட்கள், ரேஷன் கடைகளில் அறவே கிடைக்கவில்லை. பொதுமக்கள், நீண்ட நேரம் கடைகளின் முன் காத்து கிடந்து, ஏமாற்றத்துடன்திரும்புகின்றனர்.

மெத்தனப்போக்கு


எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சி காலங்களில், ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்றைக்குமே இருந்தது இல்லை.

Advertisement

அதற்கு நேர்மாறாக, தற்போதைய பினாமி அரசு, ஏழை மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பொது வினியோகத் துறையை பலவீனப்படுத்துவதை அறிய முடிகிறது.மக்கள் துயரை தீர்க்கும் வகையில், அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-மார்-201712:56:05 IST Report Abuse

SIVA. THIYAGARAJANமுன்னாள் பினாமி முதல்வர் போல்தான்>>>>> இந்நாள் பினாமி முதல்வர்>>>.நாட்டில் எல்லாமே பினாமி தான்.ஒருவர் ஒருவரை சார்ந்து தானே வாழவேண்டி உள்ளது. உள்ளிருந்தால் ஒரு பேச்சு வெளியேறினால் ஒரு பேச்சா எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். தான் தன்பசியை போக்கா விட்டாலும் எதரி பசியை போக்க நினைப்பவன்தான் மனிதாப முடையவனாவான். அமாவாசை சோறு அன்னாடம் கிடைக்காது>>>>

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
14-மார்-201722:53:21 IST Report Abuse

மு. தணிகாசலம் இந்த கடைசி 30 ஆண்டுகளில், பொதுமக்கள் யாரொருவராவது ஒரு கி.கி. அரிசியை 2 ரூபாய்க்கு வழங்குங்கள் என்று கேட்காமலே வழங்கப்பட்டது. ஒரு கி.கி. அரிசியை ஒரே ஒரு ரூபாய்க்கு வழங்குங்கள் என யாரும் கேட்காமலேயே வழங்கப்பட்டது. மாதந்தோறும் விலை இல்லாமல் 20 கி.கி.அரிசி வழங்குங்கள் என்று யாரும் கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஜீவனம் செய்ய தேவையான அளவு சம்பளத்தை வாய்விட்டு கேட்கும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு மட்டும் ஏன் உரிய சம்பளம் மறுக்கப்படுகிறது அல்லது கால தாமதம் செய்யப்படுகிறது?

Rate this:
A RAJ - CHENNAI,இந்தியா
14-மார்-201721:01:05 IST Report Abuse

A RAJWhy you kept mum for along these years? The reason is you want to remain in post? You are betrayer and traitor.I insists ,ADMK govt should initiate the inquiry in this guy amassed wealth in TN and other states. He misbehaved with some MLAs also. So, the current ADMK govt should do all inquiries about this guy and punish him.

Rate this:
rmr - chennai,இந்தியா
14-மார்-201720:29:20 IST Report Abuse

rmrமக்களை பற்றிய கவலை திராவிட கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை . தேவை ஒரு மாற்றம் முன்னேற்றம் .

Rate this:
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
14-மார்-201718:02:34 IST Report Abuse

Mayilkumarஇதேபோல்தான் ஜெயா சிறையிலிருந்த போதும், அப்போலோவிலிருந்த போதும் எதிர்க்கட்சிகள் உம்மை விமர்சனம் செய்தார்கள். சசி என்ற மின்சார வலையிலிருந்து வெளியே வந்ததால் உங்களுக்கும் தைரியம் வந்துவிட்டது. உங்கள் காலத்திலும் விசுவாசம் என்று சொல்லி அரசு இயந்திரம் முடங்கியதும் உண்மைதான். பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது என்பது அவருக்கும் தெரியும் மேலும் மக்களுக்கும் தெரியும். கூவத்தூரில் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு புலி வால் பிடித்த கதையாக விடவும் முடியாமல் ஓடவும் முடியாமல் இருத்தலை கொல்லி எறும்பாக தவிக்கிறார்.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-மார்-201717:49:39 IST Report Abuse

SIVA. THIYAGARAJANகனம் திரு பன்னீர் அவர்களே நீங்கள் நடத்தியதும் பினாமி அரசுதானே மறந்து விட்டீரோ. நீங்கள் கூறுவதை எல்லாம் எல்லா மக்களும் ஏற்றுகொள்வார்கள் என போசாதீர். பதவி வேண்டுமெனில் இதெல்லாம்_______

Rate this:
Balaji - Khaithan,குவைத்
14-மார்-201715:29:03 IST Report Abuse

Balajiரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதற்கு சதிகாரியின் குடும்பத்தினர் தான் காரணம்...... ஒப்பந்த புள்ளிகளில் தங்களுக்கு வேண்டிய ஆட்களை தேர்வுசெய்வதற்காகத்தான் இதுவரை இறுதி செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்...... சுயநலனுக்காக இப்படி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதையே நிறுத்திவைத்த இவர்கள் முழுமையாக ஆட்சி செய்தால் என்னவெல்லாம் செய்வார்களோ தெரியவில்லை.......

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
14-மார்-201714:41:58 IST Report Abuse

Indianஇந்த டயர் நக்கி பன்னீருக்கு முதல்வர் பதவியை பிடுங்கிய பின்புதான் ஞானம் பிறந்தது.. அதுவரை பினாமியாகவோ அடிமை ஆகவோ பணத்தை சுருட்டிக்கொண்டிருந்தார்

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
14-மார்-201714:40:27 IST Report Abuse

Indianமோடியை நம்பி சின்னாபின்னமாகி நடுத்தெருவில் நிற்கிறார் ஓபிஎஸ்

Rate this:
BHAVANI - Chennai,இந்தியா
14-மார்-201713:39:41 IST Report Abuse

BHAVANIஓ பி எஸ் தெளிந்து தான் முதல் அமைச்சர் பதவியில் முழு வேகத்துடன் செயல்பட்டார் என்பது மக்கள் அறிந்த ஒன்று. இவரு மாதிரி நம்ம எல்லோரும் வேலை செய்ய மக்கள் நம்மை எதிர்பார்ப்பார்கள் என்று தான் பயந்து அவரை கீழே தள்ளிவிட்டார்கள்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement