சேவல் சின்னம் கேட்கிறார் தீபா | ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., எம்.ஜி.ஆர்., உறவினர்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும்
ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர்.

சேவல் சின்னம் கேட்கிறார் தீபா

சேவல் சின்னம் கேட்கிறார் தீபாஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,

ஜெ., அண்ணன் மகள் தீபா, போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சசிகலா தரப்பினரும், பன்னீர் அணியினரும், இரட்டை இலை சின்னத்திற்காக,தேர்தல் கமிஷனில் மோதுகின்றனர்.
இந்நிலையில், தீபா சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதில், சேவல் சின்னத்தைப் பெற விரும்புகிறார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கட்சி உடைந்த நேரத்தில், ஜெ., அணிக்கு, சேவல் சின்னம் தான் தரப்பட்டது. அதனால், அந்த சின்னத்தை எதிர்பார்க்கிறார்.
அது கிடைக்காதபட்சத்தில், மீன், தராசு, உழைக்கும் கை ஆகியவற்றில் ஒன்றை கேட்க, தீபா முடிவு செய்துள்ளார் என, அவரது பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர்.உறவினர்விருப்பம்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் போட்டியிட, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா விஜயன் விருப்பம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., வேட்பாளரைத் தேர்வு செய்ய, நாளை அ.தி.மு.க.,

Advertisement

ஆட்சிமன்றக்குழு கூட்டம், சென்னையில் கூடுகிறது. துணைப் பொதுச் செயலர் தினகரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரில் ஒருவரே போட்டியிடுவார் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா போட்டியிட விரும்பும் தகவலை, தினகரனிடம் தெரிவித்துள்ளார். 2016 பொதுத்தேர்தலில், ஆலந்துார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சுதா விஜயன் விருப்ப மனு அளித்தார். எம்.ஏ., - எம்.எட்., பட்டம் பெற்றுள்ள சுதா, 51, அ.தி.மு.க.,வில், 1990 முதல் உறுப்பினராக உள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-மார்-201710:14:35 IST Report Abuse

Barathanசேவல் கூவினாத்தானே பொழுது விடியும்.

Rate this:
GenX Man - Syeney,ஆஸ்திரேலியா
16-மார்-201704:49:38 IST Report Abuse

GenX Manஏன் இரட்டை இலை யை கேட்டிருக்கலாமே. அதுதானே இப்போ குடும்ப சொத்து

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-மார்-201720:58:35 IST Report Abuse

Manianசேவல் கொத்துமடி,சேர்த்ததும் போகுமடி,அகப்பட்டதை அமுக்கு அடி,இல்லாட்டி விழும் பொத்தையடி -புலவர் ஏசுமகனார்,மன்னா்குடிக்கு அடுத்த ஊர் மாமனார்குடி

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
14-மார்-201723:07:38 IST Report Abuse

Rajasekarநல்லா பிரியாணி துன்னோமா தூங்குனோமோ இருந்த சரி. அரசியல் நமக்கெல்லாம் சரிவராது பாப்பா .

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
14-மார்-201722:10:12 IST Report Abuse

Rajasekarசும்மா கிடந்த சங்க ஊதி கெடுந்தான் ஆண்டி ... ஹீ ஹீ

Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
14-மார்-201719:30:51 IST Report Abuse

Sambasivam Chinnakkannuஅரசியலில் வாரிசு ,,வாரிசுக்கு சொந்தம் ,பினாமி சொந்தம் ,,இப்படி எதாவது உறவை சொல்லி ,,அந்த தகுதிமட்டும் போதும் என நினைத்து விட்டார்கள் ,,,,,,இதை தவிர காசு ,பணம் ,துட்டு ,,,,கூழை கும்பிடு அவசியம் ,,,,,,,,,

Rate this:
apn shanmugam - trichy,இந்தியா
14-மார்-201716:04:44 IST Report Abuse

apn shanmugamசசிகலா அதிமுகா வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது தீபா ops வீட்டிற்கு செல்லட்டும்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-மார்-201715:17:23 IST Report Abuse

Pugazh Vசசி குமபலை ஒழிக்கணுமாம், தீபாவை வீடாக கூடாதாம். கிழிச்சீங்க.. ரெட்டை இலையில் கருணாஸ் நின்னாக் கூட ஓட்டுப் போடற சென்னை வாசிகள் மீது நம்பிக்கை கிடையாது. ரெட்டை இலையில் போட்டியிடும் ஆள் யாராக இருந்தாலும் தான் ஜெயிப்பார்.

Rate this:
Raj - bangalore,இந்தியா
14-மார்-201719:21:19 IST Report Abuse

Rajமக்கள் ரெட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஓட்டுப்போட காரணம் , அவர்கள் தொகுதிக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ, அடியாள் வைத்து மிரட்ட மாட்டார்கள், சொத்துக்களை பறிக்க மாட்டார்கள், ஏழைகளுக்கு சமத்திற்கு உதுவுவார்கள் திருடுவார்கள் ஆனால் கோடி கோடியாய் கொள்ளையடிக்க மாட்டார்கள் அந்த நம்பிக்கையில் தான் ஓட்டுபோட்டார்கள் அவர்களையும் மக்கள் 1996 இல் தோற்க்கடித்தார்கள் , அவர்கள் திருந்தியதால் மன்னித்து அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் திருட்டு கூட்டம் திமுக வரமால் பார்த்துக்கொள்வார்கள்...

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
14-மார்-201714:44:59 IST Report Abuse

மு. தணிகாசலம் இங்க கொஞ்சம் கவனிங்க தீபா மேம். பன்னீர், இரத்தக்காட்டேரி கும்பலில் சிக்கி தவிச்சுக்கிட்டு வெளியில வரமுடியாத இருந்த சூழ்நிலையில, நாங்களெல்லாம் ஒரு நல்ல தலைமையை தேடி அலைந்தது உண்மை உண்மையிலும் உண்மை. அந்த நேரத்துல நீங்க எங்களுக்கெல்லாம் ஒரு வடிகால் மாதிரி எங்களிடம் வந்து சிக்குண்டதும் உண்மை உண்மையிலும் உண்மை.செம்மேரி ஆட்டுக்கூட்டமாகிய நாங்கள் உங்களை அந்த நேரத்துல செம்மையாக பயன்படுத்தி கொண்டதும் உண்மை உண்மையிலும் உண்மை. இப்போ பன்னீர் அந்த இரத்தக்காட்டேரி கும்பலிடம் இருந்து என்னென்னவோ வேலையெல்லாம் செய்து தப்பித்து கழன்றுகொண்டு எங்களிடம் வந்து சேர்ந்தவிட்டார். ஆகவே செம்மேரி ஆட்டுக்கூட்டமாகிய நாங்களும் பன்னீரும் ஐக்கியமாகிவிட்டோம். எனவே, நீங்களும் பன்னீருடன் ஐக்கியமாகி உங்கள் தகுதிக்கு ஏற்ற ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதே சிறந்த அறிவுடைமை என்பதை என் பணிவான விண்ணப்பமாக ஏற்றுக்கொள்வீர்களா?

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மார்-201714:37:08 IST Report Abuse

இந்தியன் kumarமக்கள் மனதில் என்ன இருக்கு என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும் ஆனாலும் மன்னார்குடி மாபியா வெற்றிபெற முடியாது என்பது மட்டும் உறுதி. வைப்பு தொகை வாங்கினால் அது பெரும் சாதனை.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement