உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர்... யார்?: பதவியை பிடிக்க பா.ஜ.,வில் கடும் போட்டி | உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?: பதவியை பிடிக்க பா.ஜ.,வில் கடும் போட்டி Dinamalar
பதிவு செய்த நாள் :
யார்?
உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர்...
பதவியை பிடிக்க பா.ஜ.,வில் கடும் போட்டி

உ.பி., சட்டசபைத் தேர்தலில், சாதனை வெற்றியை பெற்றுள்ள பா.ஜ., புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவி ரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற, மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
@Image1@சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் முதல்வராக பதவி வகித்து வந்த, உ.பி.,யில், சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள, 403 இடங்களில், பா.ஜ., 312 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

லோக்சபாவுக்கு, 2019ல், தேர்தல் வரவுள்ள நிலையில், நாட்டிலேயே அதிக, எம்.பி.,க்களை உடைய மாநிலமாக திகழ்வதால், உ.பி.,யின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில், பா.ஜ., அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ராஜ்யசபா, பா.ஜ., - எம்.பி.,யும், பொதுச்செயலருமான, பூபேந்திர யாதவ் ஆகியோரை, கட்சி மேலிடம் ஈடுபடுத்தி உள்ளது.

இவர்கள் இருவரும், நாளை, லக்னோவில் நடக்கும், பா.ஜ., புதிய, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்கள், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து பேசி, புதிய முதல்வராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்த, அவர்களின் கருத்தை அறிந்து, கட்சி மேலிடத்துக்கு தகவல் தரவுள்ளனர். இதற்கிடையே, உ.பி., மாநில முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு, அம்மாநில, பா.ஜ., தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கு முன், கடைசியாக, 2002, மார்ச் வரை, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வராக பதவி வகித்துள்ளார். தற்போது, மத்திய அரசில், உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் பதவிக்கு முதல் வாய்ப்பாக, கட்சி

மேலிடத்தால் கருதப்படுகிறார்.ஆனால், பிரதமர் மோடி, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக, ராஜ்நாத் சிங் கருதப்பட வில்லை என்பது, அவருக்கு பலவீனமாக உள்ளது.
கடந்த, 1964 முதல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு டன் தொடர்புடைய ராஜ்நாத் சிங்கிற்கு, உ.பி., மாநில, பா.ஜ., அடிமட்டத் தொண்டர்கள் வரை, தொடர்பு உள்ளது.சமீபத்திய சட்டசபைத் தேர்தலில், உ.பி.,யில், 26 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தராஜ்நாத் சிங், 120 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள் ளார். 20 ஆயிரம் கி.மீ., பயணம் செய்துள்ளார்.
அடுத்ததாக, உ.பி., முதல்வர் பதவிக்கு, அந்த மாநில, பா.ஜ., தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவின் பெயர் அடிபடுகிறது.தொண்டர்களை அரவணைத்து செல்லும் திறன் பெற்றுள்ள மவுரியா, மோடி, அமித் ஷாவின் அன்பிற்கு பாத்திரமானவர். 1990ம் ஆண்டுகளில் நடந்த, ராமர் கோவில் போராட்டங் களில், நெருங்கிய தொடர்பு உடையவர், மவுரியா.

மூன்றாவதாக, முதல்வர் பதவிக்கு பேசப்படும் தலைவரான, தினேஷ் சர்மா, லக்னோ பல்கலை பேராசிரியராக பணியாற்றியவர். தற்போது, பா.ஜ., தேசிய துணைத் தலைவராக செயல்படும் இவர், பிராமணர் சமூகத்தின் முகமாக பார்க்கப்படுகிறார்.

தற்போது, லக்னோ நகர மேயராக, இவர் பதவி வகிக்கிறார்; இவர், அமித் ஷாவிற்கு நெருக்க மானவர். அடுத்ததாக, உ.பி.யில் செல்வாக்கு மிக்க, பா.ஜ., தலைவரான, யோகி ஆதித்ய நாத், உ.பி., முதல்வராகும் வாய்ப்பு உள்ளவராக கருதப்படுகி றார். பூர்வாஞ்சல் பகுதியில், செல்வாக்கு பெற்ற தலைவர், இவர்.மத்திய தொலைதொடர்புத் துறை யில் தனிப் பொறுப்புடன் கூடிய, இணையமைச்ச ராகவும், ரயில்வே இணையமைச்சராகவும் உள்ள, மனோஜ் சின்ஹாவின் பெயரும், முதல்வர் பதவிக்கு பேசப்பட்டு வருகிறது.

உ.பி., மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும், அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர், மனோஜ் சின்ஹா.உ.பி., மாநில முதல்வர் பதவிக்கு, மூத்த தலைவர் உமா பாரதியும் மோதி வருகிறார். மத்திய அமைச்சரான இவர், இதற்கு முன், ம.பி., முதல்வராக பதவி வகித்தவர்.

பிரபலமாகாத தலைவர்கள்


உ.பி., முதல்வர் பதவிக்கு, மகேஷ் சர்மா, சந்தோஷ் கங்வார், ஸ்ரீகாந்த் சர்மா, சதீஷ் மஹானா ஆகிய சிறிய தலைவர்களின் பெயர்களும் பேசப்பட்டு

Advertisement

வருகின்றன. இவர் களில், மகேஷ் சர்மா, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். நொய்டாவில், கைலாஷ் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.,சுடன் தொடர்புடைய இவரது செல்வாக்கு, நொய்டாவைத் தாண்டிச் செல்லவில்லை என்பது, பலவீனம்.

சந்தோஷ் கங்வார், மத்திய நிதித் துறை இணையமைச்சராக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், போட்டி வேட்பாளரை, 2.4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்ற பெருமைக்குரி யவர், சந்தோஷ். முதல்வர் பதவிக்கு பேசப் படும், சிறிய தலைவர்களில் ஒருவரான, ஸ்ரீகாந்த் சர்மாவுக்கு அரசியல் அனுபவம் குறைவு.
இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில், இவருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மற்றொரு பிரபலமில்லாத தலைவரான, சதீஷ் மஹாஜா, கான்பூர் சட்டசபைத் தொகுதியில், ஆறு முறை வென்றவர்; தேசிய அரசியலில் அதிகம் பேசப்படாதவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

முடிவு மோடியிடம்


உ.பி., முதல்வராக தகுதி வாய்ந்த தலைவர்கள் பற்றிய, விரிவான அறிக்கை, புலனாய்வு குழு வால் தயாரிக்கப்பட்டு, கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின் றன. இந்த தலைவர்கள், எந்த வகையிலும், களங்கம் அற்றவர்களாக உள்ளனரா என்பதை அறியவே, இத்தகைய அறிக்கை பெறப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.

இனி, 'உ.பி., முதல்வராக அனுபவம் மிக்கவரை தேர்ந்தெடுப்பதா, புதியவரை தேர்ந்தெடுப்பதா என்பதை, பிரதமர் மோடியே முடிவு செய்ய வேண்டும்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
15-மார்-201722:54:14 IST Report Abuse

K.Sugavanamமோடிக்கும் அமித் சாவுக்கும் பிடித்த ஒருவரே வர வாய்ப்புள்ளது.

Rate this:
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
15-மார்-201719:57:21 IST Report Abuse

raguraman venkatDinesh Sharma or Manoj Sinha will be the right choice, with Mourya controlling party - there will be good balance between Government and Party. I think Modi will go for Dinesh.

Rate this:
MAHENDRAN - virudhunagar,இந்தியா
15-மார்-201715:32:26 IST Report Abuse

MAHENDRANயார் வந்தாலும் மோடி தான் ஆட்சி செய்வார்

Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
15-மார்-201715:13:43 IST Report Abuse

Harinathan Krishnanandam3 அல்லது 6 மதத்திற்கு ஒருவர் என சுழற்சி முறை அமலுக்கு கொண்டு வந்து அனைவரின் விருப்பட்டதையும் நிறைவேற்றலாம்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-மார்-201712:47:58 IST Report Abuse

Pasupathi Subbianஇன்று காலை வெளிவந்த செய்திகளின் படி திரு ராஜ்நாத் சிங் அவர்கள் முதல்வர் பதவிக்கு முந்திக்கொண்டு இருப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
15-மார்-201711:53:38 IST Report Abuse

ganapati sbஒரே தொகுதியில் 6 முறை வெல்வது சாதாரண விஷயமில்லை சதிஷ் பேச்சாற்றலும் செயலாற்றல் உள்ளவராக இருந்தால் அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம் கட்சி தலைவர் மவுரியாவும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கும் கொடுக்கலாம் உள்துறை போன்ற உள்நாட்டு பாதுகாப்பில் முக்கியமான துறையை நிர்வகிக்கும் அளவுக்கு வேறு அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பாஜகவில் இல்லாததால் அதில் ராஜ்நாத் தொடர்வதே நல்லது

Rate this:
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மார்-201711:22:08 IST Report Abuse

SundarThe competent Rajnath Singh should not be disturbed. He is to be continued in Central Government.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-மார்-201711:11:55 IST Report Abuse

இந்தியன் kumarஇருப்பவர்களில் யார் பெஸ்ட் அவர்களை தேர்வு செய்யவேண்டும் . மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
15-மார்-201710:48:51 IST Report Abuse

பாரதி உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர்... பதவியை பிடிக்க பா.ஜ.,வில் கடும் போட்டி ஒரு கட்சியில் எவ்வளவு தகுதி உள்ள தலைவர்கள் முதல்வர் பதவிக்கு இருக்கிறார்கள். அப்படி தான் ஒரு கட்சி இருக்க வேண்டும். அது போல் காங்கிரசிலும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? ஒரு தலைவர் இறந்து விட்டால் அந்த கட்சி மட்டும் அல்ல அந்த மாநிலமே அனாதை ஆகி விடுகிறது . இது நமக்கு தேவையா? எனவே பிஜேபி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தேர்ந்து எடுப்போம்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-மார்-201710:27:54 IST Report Abuse

Malick Rajaவருவதும் போவதும் இயற்கை

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement