மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை : ராகுல் 'பகீர்' குற்றச்சாட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை :
ராகுல் 'பகீர்' குற்றச்சாட்டு

புதுடில்லி: கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில், மக்கள் அளித்த தீர்ப்பை, பா.ஜ., திருடி விட்டதாகவும், ஜனநாயக மாண்பை சீர்குலைத்து விட்டதாகவும், காங்., துணை தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்கள் தீர்ப்பை, மதிக்கவில்லை,ராகுல் 'பகீர்'

கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு, சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தல்களில், எந்த கட்சிக் கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த மாநிலங்களில், காங்., தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பிற உதிரிக் கட்சி களின் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது.
இதுகுறித்து, டில்லியில், காங்., துணைதலைவர்

ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: கோவா, மணிப் பூர் மாநிலங் களில், காங்., தனிப் பெருங் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும்வகையில், பா.ஜ., ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில், கோவா மாநில கவர்னர், பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளார். ஆட்சி அமைப்பதற்காக, கவர்னர் மாளிகையை தவறாக பயன்படுத்துவது தவறில்லை என்ற ரீதியில், பா.ஜ., நடந்து கொள்கிறது.

பணபலம், அதிகார பலத்தை முறைகேடாக பயன் படுத்தி, இரு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைக் கிறது. தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை, தனக்கு சாதகமாக, பா.ஜ., திருடிக் கொண்டுஉள்ளது. பா.ஜ., வுடன், காங்., நடத்தும்போராட்டம், கொள்கை அடிப்படையிலானது.

மாறாக, மணிப்பூர், கோவா வில், பா.ஜ., தற்போது செய்து கொண்டிருப்பதுவே, அதன் கொள்கையாக உள்ளது. அதை எதிர்த்தே, காங்., போராடி வருகிறது. கோவா, மணிப்பூரில் ஆட்சியை பிடிக்க, எவ்வளவு பணத்தை, பா.ஜ.,வீசியெறிந்தது என்பது,

Advertisement

தற்போதைய கேள்வி யாக உள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

மாற்றம் அவசியம் :


சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரசுக்கு பெரிய தோல்வி ஏற்பட்டது என கூற முடியாது. இருந்தாலும், கட்சியில், அமைப்பு ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியா கவும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
15-மார்-201721:15:56 IST Report Abuse

Swaminathan Chandramouliதேர்தலில் தோற்று விடுவோம் என்று அன்னை சோனியாவுக்கு ஆஸ்தான ஜோதிடர் முதலிலேயே சொல்லிவிட்டார் அதனால் அன்னை சிகிச்சைக்காக அமெரிக்காபோகிறேன் என்று புளுகிவிட்டு அவங்க ஆத்தா வீட்டுக்கு அது தான் இத்தாலிக்கு ஓடிவிட்டார் .ராகுகாலமும் கொலம்பியாவுக்கு ஓடிவிட்டார் . தேர்தலில் படு தோல்வி அடைந்த அகிலேஷ் யாதவ் ஜன்னி கண்டு படுத்த படுக்கையாக இருக்கிறார் ,உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று அரற்றி கொண்டு இருக்கிறார் .ஆனால் ராகுகாலமோ காங்கிரஸ் தோல்வி ஒரு சின்ன விஷயம் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று வீராப்பு பேசுகிறார்

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
15-மார்-201720:28:28 IST Report Abuse

mindum vasanthamமணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரெஸ்ஸை காட்டிலும் வோட்டு சதவிகிதம் அதிகம் பி ஜெ பி வாங்கியுள்ளது , மற்றும் மணிப்பூரில் நாகா partyum பி ஜெ பியும் தோழமை கட்சிகள் தேர்தலுக்கு பின்பு சேர்த்துக் கொள்ளலாம் என்பதே அவர்கள் எண்ணம் , இருவரும் காங்கிரெஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்தார்கள் மற்றும் கோவாவில் கணிசமான இடம் பிடித்த மூன்றாம் அணி சிவசேனா , gomtak தலைமையிலான பார்ட்டி என்று பாரதீய ஜனதாவுடன் ஓத கருத்துள்ள கட்சி ,சரத் பவருடன் சேர்ந்தால் மட்டுமே சந்தர்ப்பவாதம்

Rate this:
Vijay Kumar - Bamako,மாலி
15-மார்-201718:34:04 IST Report Abuse

Vijay Kumarநாங்கள் காங்கிரசை மதித்தோம் இந்திரா ஆண்டபோது , ராஜிவ் மரணத்தின்போது , இப்போ அப்படியா வெறும் ஊழலும் , அமுல் பேபி போன்ற தலைவர்களை கொண்டுள்ளது மாரு முனையில் வல்லமை பெற்ற மோடி , நாடுதானே முக்கியம்

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
15-மார்-201717:44:08 IST Report Abuse

NancyRahul applied for leave agiain and awaiting for approval from his mummy, he is ready for next Election plan for 2022 , the whole India is expecting he should be promoted to leader for Congress

Rate this:
15-மார்-201716:33:29 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்நீங்கள் இருக்கும் வரை பிஜேபிக்கு வளர்ச்சி தான். சீக்கிரம் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடித்து விடுங்கள். இல்லையேல் அதவும் கை நழுவி போய் விடும். அந்த பதவியில் அமர்ந்து பிஜேபிக்கு உதவி செய்யுங்கள்.

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
15-மார்-201717:40:18 IST Report Abuse

Basic Instinctகாங்கிரெஸ்ஸை விட பாஜக ஆட்சி தான் பொற்கால ஆட்சி அதன் பதில் தான் உ.பி வெற்றி. இனி மும்மாரி பொழிய போகிறது. ஏழை நடுத்தர மக்கள் சுபீட்ஷமாக வாழ போகிறார்கள். இந்தியா வல்லரசு ஆவதற்கான அறிகுறி தான். மற்ற கட்சிகள் இதுவரை என்ன திட்டங்கள் கொண்டுவந்தன? ஆதார் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்துவதே ஒரு சாதனை தானே. இதை விட என்ன வேண்டும். ATMல் அவர்களுடைய பணம் நான்கு முறைக்கு மேல் 100 ருபாய் எடுத்தால் அவர்களுக்கு இருபது ருபாய் வட்டி... இப்படி சொல்லிக்கொன்டே போகலாம்....

Rate this:
Dynamo - Den Haag,நெதர்லாந்து
15-மார்-201715:16:14 IST Report Abuse

Dynamoகாங்கிரஸ் கட்சியை மம்தா ஜி இடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளவும், மோடிஜியை எதிர்க்க அவர்தான் சரியான நபர்...

Rate this:
Krishnan - chennai,இந்தியா
15-மார்-201716:46:23 IST Report Abuse

Krishnanநல்ல தமாஷ் மோடியை எதிர்க்க மம்தாவா எல்லாம் நேரம் தான்...

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
15-மார்-201717:50:08 IST Report Abuse

Nakkal Nadhamuniடயனமோக்கு, அந்தம்மா பைத்தியம் புடிச்சு துணிய கிழிச்சின்னு கொல்கத்தா தெருவுல ஓடுவதை பார்க்க ஆசை போல......

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
15-மார்-201714:48:31 IST Report Abuse

Nakkal Nadhamuniமுள்ள முள்ளாலதான் எடுக்கணும்... என்னாவது செய்து மோடியை வரவிடாம பண்ணுவதற்காகத்தானே கேவலமான அகிலேசோட கூட்டணி வெசீங்க.. இனிமே எங்க போனாலும் செருப்படிதான்..

Rate this:
சச்சுக்குள்ளா - துலுக்கப்பட்டி,இந்தியா
15-மார்-201714:00:42 IST Report Abuse

  சச்சுக்குள்ளா  ஹலோ அடுத்த எலெக்ஸ்ன் எப்போ சார் வரும் ஆமா நீங்க யாரு?

Rate this:
Radha Ramesh - Manama,பஹ்ரைன்
15-மார்-201713:50:24 IST Report Abuse

Radha Rameshஉத்தரகண்ட் மாநிலத்தில் சிபுசோரனை முதலமைச்சர் aakiya அயோகிய சிகாமணி பப்பு .நீயும் உன் கட்சியும் பேச லாயக்கா.?உங்களால் ஆனதை பார்.உங்களுக்கு வந்தாதான் ரத்தமா .போடா.

Rate this:
selvam - Chennai,இந்தியா
15-மார்-201721:57:39 IST Report Abuse

selvamஇது போன்று தரம் குறைந்த வார்த்தை பிரயோகம் அனுமதிப்பது .....

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
15-மார்-201713:38:25 IST Report Abuse

Ravichandranராகுல் ஜீ நான் பலமுறை சொல்லிவிட்ட கருத்து. மாநில முதல்வரும் நாட்டின் பிரதமரும் மக்கள் நேரடியாக தேர்ந்துதெடுத்தல் இந்த பிரச்சனை எப்போதும் வராது. நீங்களும் குரல் கொடுங்கோ ராகுல்ஜீ. வெற்றி பெரும் கட்சி முதல்வருக்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்கன் சிஸ்டம் இஸ் குட் யா.

Rate this:
Shriram - Chennai,இந்தியா
15-மார்-201716:05:30 IST Report Abuse

Shriramயோவ் குழந்தையா அவர் .. ஜி கி ன்னுகிட்டு...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement