ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல் | ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை :
லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார்.

ஜெ., மரண சர்ச்சை சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள்

முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறினர்.

மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது; இது குறித்து,சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:இது, மிகவும் முக்கியமான பிரச்னை என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்த விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அறிக்கை வந்தபின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
18-மார்-201722:22:38 IST Report Abuse

Paranthamanவாஜ்பாயை கவிழ்த்தவர் ஜெ என்ற முறையில் பாஜகவினருக்கு அவர் இறப்பில் அவ்வளவு அக்கறை இல்லை. தமிழக திராவிட கட்சிகள் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் இந்தியை மூன்றாவது மொழியாக ஏற்காத வரை மீனவர்களுக்கும் கச்ச தீவுக்கும் ஜெயா மர்ம மரண விசாரணைக்கும் மாநில வளர்ச்சிக்கு கேட்ட நிதியை தருவதற்கும் சம்மதிக்க மாட்டார்கள்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
17-மார்-201720:37:13 IST Report Abuse

Paranthamanஜெயாவை போயஸ்காரடனில் அழிக்க காயை நகர்த்திய அறிவாளி நடராஜன் அப்படியே சசிகலாவையும் உள்ளே தள்ள காயையும் சேர்த்து நகர்த்தி இப்போது திரு திரு வென முழிக்கிறார்.அப்பல்லோவில் அடிக்கடி போய் படுத்துக்கொண்டு ஜெயாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகளை அவிழாமல் அழிக்கிறார்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-மார்-201716:43:15 IST Report Abuse

Endrum Indianயார் கண்டெய்னர் கொடுப்பார்களோ அவர்கள் பேச்சை தான் நாங்கள் கேட்போம். இப்ப என்ன சொல்வீங்க???

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-மார்-201715:57:18 IST Report Abuse

Nallavan Nallavanமத்திய பாஜக கண்டுகொள்ளாது ..... காரணம் அவர்களுக்கு இதன் ரகசியம் அடி ஆழம் வரை ஜெ மரணத்துக்கு முன்பே (ஆம், நீங்கள் ஊகிப்பது சரியே) தெரியும் .....

Rate this:
Balaji - Khaithan,குவைத்
15-மார்-201715:01:14 IST Report Abuse

Balajiதற்போது அதிமுக தலைமையாக இருக்கும் குற்றவாளியை எப்படி இவர்களே காட்டிக்கொடுப்பார்கள்....... முறையாக ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அதிகாரிகளைக்கொண்டு விசாரணை நடைபெற்றால் தான் உண்மைகள் வெளியில் வர வாய்ப்பு உள்ளது........ மத்திய அரசுக்கு இந்த மரணத்தில் சம்மந்தமிருக்குமேயானால் அதற்கும் சாத்தியமில்லை......... மீண்டுமொரு சர்க்காரியா கமிஷன் போல இருக்கும் இடம் தெரியாமல் போகும் விசாரணை அறிக்கை.........

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
15-மார்-201712:05:07 IST Report Abuse

Sampath Kumarபாவம் மம்மி இவர்களுக்கு இடையில் மாட்டி செத்தும் உயிர் வாழ்கிறார்

Rate this:
christ - chennai,இந்தியா
15-மார்-201710:45:52 IST Report Abuse

christகொலைக்கும்பலுக்கு ஆதரவான பினாமி அரசிடமே ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்த விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நல்ல காமடி, திருடனிடமே திருடனை குறித்து விசாரித்தால் உண்மை வருமா ?

Rate this:
Jayadev - CHENNAI,இந்தியா
15-மார்-201710:25:52 IST Report Abuse

Jayadevலோக் சபாவில் பன்னீர் ஆதரவாளர்கள் என செய்தி வெளியிட வேண்டும் , மொத்தமாக அ தி மு க MP க்கள் என செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன்

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
15-மார்-201710:23:46 IST Report Abuse

kuppuswamykesavanயப்பா, நாளைய இந்தியா, புதிய இந்தியா, புதிய விடியல், புதிய வளர்ச்சி, புதிய சமுதாயம் , ஆனா அதே சுரண்டல்கள் மீண்டும் மீண்டும் நடக்குது. ஒரு அரசு சேர்த்து வைத்த கஜானா பணத்தை, அடுத்து வரும் அரசு ஆட்டையை போடுதல் நடக்குது. எல்லா கட்சிகளும், எல்லா மக்களும் செலக்டீவ் நியாய தர்மங்கள் பேசுது. அவரவர் வாழ்கை அவரவர் கையில். நடந்த ஒரு விசயத்தில், குறை கூறுவதாக இருந்தால், முதலில் ஒருவர் தன்னைத்தானே குறைபட்டுக்கத்தான் வேண்டும். அதாங்க, " தீதும் நன்றும் பிறர் தர வாரா ".

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201708:57:42 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆரண கஞ்சி பழைய கஞ்சி ஆகி விட போகிறது... எதுவாக இருந்தாலும் மக்கள் மறக்கும் முன்பாக இருந்தால் நல்லதாக இருக்கும்

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement