அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒரு பாலம்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒரு பாலம்!

Added : மார் 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒரு பாலம்!

உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளை இணைக்கும் ஒரு அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும்... பெர்லினைச் சேர்ந்த, 'ரிசர்ச் கேட்' என்ற அமைப்பு இதைத்தான் செய்திருக்கிறது. ரிசர்ச்கேட்டில், விஞ்ஞானிகள் தங்கள் துறை, என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்கின்றனர், ஆய்வுக்கட்டுரைகள் எதையும் பதிப்பித்திருக்கின்றனரா என்பது போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்கின்றனர். இப்படி சேர கட்டணம் எதுவும் கிடையாது. இதுவரை இதன் இணைய தளத்தில், 1.20 கோடி விஞ்ஞானிகள் சேர்ந்திருக்கின்றனர். புதிதாக ஒருவர் இந்த தளத்தில் சேர்ந்ததும் அவர் விரும்பும் தலைப்புகளில், துறைகளில் இருக்கும் பிற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்களை உடனே பார்க்கலாம். மேலும், இருவேறு பகுதிகளில் இருந்தபடி அந்த தளத்தின் மூலம் மேற்கொள்ளும் உரையாடல்களையும் பார்க்கலாம். பல விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு முறை, புதிய உத்திகள் போன்றவற்றை வெளிப்படையாக இங்கு பகிர்ந்துகொள்கின்றனர். ஆராய்ச்சி சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியில் எதிர்கொண்டுள்ள சவால்களை இத்தள உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ள, மற்ற உறுப்பினர்கள்
அருமையான மாற்று யோசனைகளை அவர்களுக்கு நல்குகின்றனர். ஆராய்ச்சியின் வெற்றிகளை விட, தோற்றுப்போன ஆராய்ச்சிகளையும் இங்கே விஞ்ஞானிகள் பகிர்வது பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதாக இத்தளத்தின் உறுப்பினர்கள் சொல்கின்றனர். ஒரே அறிவியல் சவால் குறித்து, உலகெங்கும் உள்ள பலர் கூட்டாக ஆராய்ச்சி செய்ய இந்தத் தளம் பாலம் அமைத்துத் தருகிறது. உறுப்பினர்கள் பதிப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை ரிசர்ச்கேட் உடனுக்குடன் வெளியிடுகிறது. மாதம் குறைந்தது, 25 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் இத்தளத்தில் சேர்க்கப்படுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWDAM - TIRUPUR,இந்தியா
17-மார்-201710:49:54 IST Report Abuse
GOWDAM இனைய முகவரி தேவை நானும் சேரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை