உலகின் மிகப் பழைய தாவரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உலகின் மிகப் பழைய தாவரம்

Added : மார் 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உலகின் மிகப் பழைய தாவரம்

உலகின் மிகப் பழைய தொல் பொருளை, உத்தர பிரதேசத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செந்நிறப் பாசி வகையான அந்த தாவரம், 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய தாவரம், 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், இந்தியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் அதற்கும் பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், இது குறித்த ஆய்வை மேற்கொண்ட ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான ஸ்டெபான் பெங்ஸ்டன் அறிவித்துள்ளார். 'சித்ரகூட்டில், பாஸ்போரைட் கற்களுக்கு இடையே கிடைத்த இந்த தாவரத்தில் டி.என்.ஏ.,க்கள் இல்லை. ஆனால், அதன் பல அம்சங்கள் செந்நிறப் பாசி வகையுடன் ஒத்துப் போகிறது' என்கிறார் பெங்ஸ்டன்.இதுபோன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகள், பூமியில் சிக்கலான செல் அமைப்புகளைக் கொண்ட உயிரினங்கள் எப்போது உருவாயின என்ற புதிருக்கு விடைகளைத் தரக்கூடியவை. இதனால் தான், புதையுண்டு, காலப்போக்கில் கல்லாகும் தாவரங்கள், விலங்கினங்களை விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். உத்தர பிரதேசத்தில் புதையுண்டிருந்த செந்நிறப் பாசி, பூமியில் உயிர்கள் உருவான விதம் பற்றிய பார்வையை நிச்சயம் மாற்றியமைக்கக்கூடிய வகையில் இருப்பதாக தொல் உயிரியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை