தகவல் துகள்கள்| Dinamalar

தகவல் துகள்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தகவல் துகள்கள்

தேனீக்கள் நகர்ப்புறத்தில் விளைந்த பூக்களை விட, கிராமத்து விவசாய நிலங்களில் பூக்கும் பூக்களில் உள்ள தேனையே அதிகம் விரும்புகின்றன என்று, 'ஜர்னல் ஆப் அர்பன் எகாலஜி' இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. நகரங்களை விட, கிராமப் பகுதிகளில் பலவகை தாவரங்கள் பூப்பதுதான் இதற்குக் காரணம்.

இருளில் ஒளிரும் திறன் கொண்ட புதிய தவளை இனத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைசிபோஸ் பங்டாடஸ் எனப்படும் தென் அமெரிக்க மரத் தவளை பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டது. இருளில் இதன் உடலில் புற ஊதா கதிர்கள் பட்டால், நீலம் மற்றும் பச்சை கலந்த நிறத்தில் ஒளிர்கிறது. இந்த கண்டுபிடிப்பு, 'நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புற்று நோயை கண்டறிய புதிய வகை ரத்தப் பரிசோதனையை, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சோதனை மூலம் புற்று நோய் இருப்பதை உறுதி செய்ய முடிவதுடன், உடலின் எந்தப் பாகத்தில் கட்டி உருவாகியுள்ளது என்பதையும் துல்லியமாக கண்டறிய முடியும் என, 'நேச்சர் ஜெனடிக்ஸ்' இதழ் தெரிவிக்கிறது.

பூச்சிகளை உண்டு வாழும் சிலந்திகள், ஆண்டுதோறும் 40 கோடி முதல், 80 கோடி டன் எடையுள்ள பூச்சிகளை கொன்று தின்கின்றன என்று, 'தி சயின்ஸ் ஆப் நேச்சர்' ஆய்விதழ் தெரிவித்துள்ளது. உலகெங்கும், 45 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன. இவற்றின் மொத்த எடையே, 2.5 கோடி டன் தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன், 'டிவி' பலகைக் கணினி போன்றவற்றை தினமும், 3 மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரிட்டனிலுள்ள, 9 மற்றும் 10 வயது சிறுவர், சிறுமியர், 4,500 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் கண்டறியப்பட்டது.

புறாக்களின் எச்சத்தில் இருக்கும், 'கிரிப்டோகோக்கஸ்' எனப்படும் பூஞ்சையால் உலகெங்கும் ஆண்டுதோறும், 6 லட்சம் பேர் இறப்பதாக விஞ்ஞானிகள்
மதிப்பிட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் ரத்தத்தில் கலந்து, மூளைக்குச் சென்று இந்த பூஞ்சைகள் தாக்குவதாக விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். அமெரிக்க அறிவியல் மற்றும் சுகாதார கவுன்சிலின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்