கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Added : மார் 16, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கிரெடிட் கார்டு, சைஸ், ஈ.சி.ஜி., மிஷின்

மும்பை: வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.


அரை நிமிடத்திற்கு ஒருவர்:

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பால் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையி்ல் மரணமடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் ஈ.சி.ஜி., என்ற கருவி மூலம் இருதயத்தின் செயல்பாடுகளை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுகின்றனர். மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் அதை கண்டறிய கூடிய வசதி குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பதாக புள்ளி விவர கணக்கு ஒன்று கூறுகிறது.


டெலி ஈ.சி.ஜி.,

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிரெடிட் கார்டு அளவிலான ஈ.சி.ஜி., மிஷினை தயார் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிறிய அளவிலான மிஷின் மூலம் இதயத்தின் செயல்பாடுகளை பதிவு செய்து மருத்துவர்களுக்கு நாம் மொபைல் மூலம் அனுப்பவும் முடியும். இந்த டெலி ஈ.சி.ஜி., மூலம் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே தன் இருதய ஆரோக்கியம் குறித்த தகவ்ல்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.


பத்து மடங்கு குறைவு:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஈ.சி.ஜி., ரூ 4000 விலை மதிப்பு இருக்கும். மருத்துவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் ஈ.சி.ஜி. மிஷின் அளவில் பெரியதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் டெலி ஈ.சி.ஜி., போல் பத்து மடங்கு விலை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
16-மார்-201714:56:31 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam எல்லாம் சரி 4000 ரூபாய் மெஷின் டெஸ்ட் பண்ணி ரெஸல்ட் வாங்க 40000 /- சார்ஜ பண்னாம இருக்கோணும் அப்பத்தான் மக்களுக்கு பயன் படும். 200 ரூபாய் மொபைல் 20000 /- க்கு விக்கறங்க்க
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
16-மார்-201711:17:09 IST Report Abuse
M.Guna Sekaran விஞ்ஞானிகள் கிரெடிட் கார்டு அளவிலான ஈ.சி.ஜி., மிஷினை தயார் செய்து சாதனை படைத்து உள்ளது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி, விலையும் ஈ.சி.ஜி., ரூ 4000 விலை மதிப்பு தான், என்ன ஒன்னு மருத்துவர் பீஸ் 4 மடங்கு ஆகும் ,பரவில்லையா ?
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மார்-201713:39:06 IST Report Abuse
Pasupathi Subbianதற்பொழுது ஈ சி ஜி எடுக்க முன்னூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் உடம்பு முழுவதும் கசகச என்று ஜெல் தடவி விட்டு விடுகின்றனர். இனி இந்த கருவியை உபயோக படுத்தினால் செலவும் குறையம், நேரமும் மிச்சப்படும்....
Rate this:
Share this comment
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-மார்-201719:22:36 IST Report Abuse
M.Guna SekaranPasupathi Subbian - trichi,இந்தியா அவர்களே கிரெடிட் கார்டு அளவிலான ஈ.சி.ஜி., மிஷினை பயன் படுத்தி எடுக்கும் அந்த படத்தை பார்கா மருத்துவர் வேண்டாமா ? அப்போ ன்ன செய்யா ? சும்மாவே அவர்கள் சொல்லும் இடத்தில் எந்த செகுப்பும் டேஸ்டும் எடுக்க வில்லை என்றாலே நம் மீது அவர்கள் எப்படி கோவப்படுகிறாய்ர்கள் ,இல்லை என்றால் பீஸ் அதிகமாக தான் வாங்குகின்றனர் ? இது தான் உண்மை ..........
Rate this:
Share this comment
Cancel
samuel -  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201707:29:39 IST Report Abuse
samuel good job ...great applause for our scientists...pls continue great things for pride of our nation
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X