என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசு ஆதரவு | என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசு ஆதரவு| Dinamalar

என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசு ஆதரவு

Added : மார் 16, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என்.எஸ்.ஜி., இந்தியா, டிரம்ப் அரசு ஆதரவு

வாஷிங்டன்: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


என்.எஸ்.ஜி.,:

என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் உறுப்பினராக, விண்ணப்பித்துள்ள இந்தியா, அதற்காக, நீண்டகாலமாக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் முயற்சிக்கு, என்.எஸ்.ஜி., உறுப்பு நாடுகளில் ஒன்றான, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டை போட்டு வருகிறது.


ஆதரவு:

‛அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம்' என்ற அறிவிப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஆட்சியில், இந்தியாவுடனான நட்புறவில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா இணைவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தியாவின் இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்க, இந்தியாவுடன் இணைந்து பிற உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட அமெரிக்காவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக விரைவில் இணையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
16-மார்-201716:04:28 IST Report Abuse
Balaji அமெரிக்கா தற்போது இந்தியாவுக்கு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மற்றொரு கண்ணில் வெண்ணெயையும் வைத்துக்கொண்டு இருக்கிறது.........
Rate this:
Share this comment
Cancel
Venkat - Coimbatore,இந்தியா
16-மார்-201715:01:10 IST Report Abuse
Venkat இதுக்கு மட்டும் ஒப்பந்தம் என்னா உன் நாடு நல்ல இருக்கணும் எங்க நாடு நாசமா போகணும்.
Rate this:
Share this comment
Cancel
jenz - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201714:04:10 IST Report Abuse
jenz நல்லது நடந்தா சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X