இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக...| Dinamalar

இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக...

Updated : மார் 16, 2017 | Added : மார் 16, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக...


கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந்தேதி மணிப்பூரில் உள்ள மலோம் என்ற சிறிய நகரத்தின் மோசமான காலை வேளை.
28 வயது பெண் கவிஞர் ஒருவர் அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.
தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வியும் கேட்காமல் சுட்டுக் கொல்லும் சிறப்பு அதிகாரத்தை(The Armed Forces (Special Powers) Act, or AFSPA) அந்த மாநிலத்தின் ராணுவம் பெற்றிருந்ததே இதற்கு காரணம்.

இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் ஏன் எதற்கு என்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம். கொதித்து எழுந்த அந்தக் பெண் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். உணவு மட்டுமின்றி நீரும் அருந்துவது இல்லை என்ற முடிவொடு கூடிய இவரது உண்ணாவிரதத்தை முறியடிக்க மூன்றாவது நாளே தற்கொலைக்கு முயன்றார் என்று சொல்லி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.மூக்கு குழாய் வழியாக திரவு உணவை போலீஸ் செலுத்தியது.
இப்படி ஒருநாள் இரு நாள் இல்லை 16 ஆண்டுகளாக மூக்கு குழாயின் உதவியுடன் திரவஉணவு மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

உலகிலேயே மிக நீண்ட நாள் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் இவருடையதாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று சர்வதேச சமூக ஆர்வலர்களாலும் வர்ணிக்கப்பட்டார்.
''நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்... திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... எங்கும் அன்பை தரவும் பெறவும் விரும்புகிறேன்... எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் இன்றளவும் நிலவும் அந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார்.

முடிவும் கிடைக்காவில்லை விடிவும் பிறக்கவில்லை.சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ... வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட 143 ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை வேருடன் கொளுத்திவிட்டனர்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. 'அந்த 90 பேருக்கு நன்றி' என்கிற பதிவில் தெரிவது வேதனை, தெரிப்பது விரக்தியே. இனியும் எனக்கு அரசியல் தேவைதானா? என்றெல்லாம் மனம் வெதும்பியுள்ளார்.
இது இரோம் ஷர்மிளாவிற்கு வேண்டுமானாலும் புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களுக்கு இது பழைய விஷயமே.

1980-களில் தமிழகத்தில் இளைஞர்களின் சிந்தனைகளில் புதியமாற்றத்தை ஏற்படுத்தி உன்னால் முடியும் தம்பி என்று சொன்னவர்தான் எம்.எஸ்.உதயமூர்த்தி. தமது புத்தகங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நம்பி மக்கள் சக்தி இயக்கம் என்ற கட்சியையும் தொடங்கி,கட்சி சார்பில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 1289 மட்டும்தான்.
அமான் மணி என்பவர் மனைவியை கொலை செய்த வழக்கில் இப்போதும் சிறையில் இருப்பவர், சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.இப்படி... குற்றப்பின்னணியுள்ள பலர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்

ஆனால் பாவம் அத்தகைய தகுதி இல்லாத இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்வை ஆரம்பத்திலேயே மரணஅடி கொடுத்து மக்கள் முடித்து வைத்துள்ளனர்.
எங்களுக்கு வைஜெயந்தி மாலாக்களும்,ஜெயப்பிரதாக்களும்,குத்து ரம்யாக்களும்,ஹேமமாலினிக்களுமே குற்றப்பின்னனி உள்ளவர்களுமே போதும் என்று முடிவு செய்துவிட்ட மக்களிடம் நீங்கள் 90 ஒட்டு வாங்கியதே அதிகம்தான்.

போதும் இந்த உப்பு புளி மிளகாய் பொல்லாப்பு மிகுந்த அரசியல் வாழ்க்கை என்று ஊரைவிட்டே வெளியேறி கேரளா மாநிலம் அட்டப்பாடியில் உள்ள ஒரு பத்திரிகையாளரின் எளிய இல்லத்தில், விரக்தியின் விளிம்பில் இருந்தபடி நீண்ட ஒய்வில் இருக்கும் உங்களுக்கு நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ஸாரி மிஸ் இரோம் ஷர்மிளா.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Immanuel Jayaprakash - madurai,இந்தியா
14-ஏப்-201707:55:01 IST Report Abuse
Immanuel Jayaprakash இரோம் ஷர்மிளா தேர்தலில் வேண்டுமானால் தோற்று இருக்கலாம். ஆனால் லட்ச கணக்கான உலக மக்களின் மனக்களில் குடியேறி விட்டார்.. இந்திய தேர்தலை எது ஆளுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
12-ஏப்-201702:57:02 IST Report Abuse
சாமி எல்லாம் சரி ஓட்டுக்கு பனம் கொடுக்கலையே நாங்கள் பிடல்காஸ்ட்ரேவே நின்னாலும் பனம் கொடுத்தல் தானே ஓட்டு போடுவோம்
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
08-ஏப்-201721:33:55 IST Report Abuse
மணிமேகலை  தினமும் வாட்ஸாப்பிலும் பேஸ் போக்கிலும் செய்தியை படிக்கும் இளைஞர்கள் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி கேட்க விரும்புவதில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை