2019 லோக்சபா தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.,வியூகம்! இளைஞர்கள், மாணவர்களை கவர திட்டம் | 2019 லோக்சபா தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.,வியூகம்! இளைஞர்கள், மாணவர்களை கவர திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
வியூகம்!
2019 லோக்சபா தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.,
இளைஞர்கள், மாணவர்களை கவர திட்டம்

புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 'வரும், 2019 லோக்சபா தேர்தலிலும், மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறும் வகையில், இளைஞர்களை கவர வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, பள்ளி மாணவர்களிடம் இருந்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

2019 தேர்தல்,பா.ஜ.,வியூகம்!இளைஞர்கள்,மாணவர்களை கவர திட்டம்

உ.பி., உட்பட, ஐந்து மாநில தேர்தல்களில், மத்தியில் ஆளும், பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், கட்சி யின் பார்லி., குழு கூட்டம், நேற்று நடந்தது. கட்சி தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:


* வரும், ஏப்., 14ல் துவங்கும், சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை, மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். நாடு முழுவதும், பஞ்சாயத்துகள், வார்டுகள் அளவில், பா.ஜ., சார்பில், ஒரு வாரத்துக்கு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்
* ஏப்., 6ல், கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு, நாடு முழுவதும், கட்சியினர், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், துாய்மை பணியில் ஈடுபட வேண்டும்
* ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, 'பீம்' என்ற, 'மொபைல் ஆப்'பை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்

* மத்திய அரசின், சிறந்த மக்கள் நல திட்டங் கள், சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை, மக்களிடையே எடுத்துச் செல்லும் துாதர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்

* செய்திகள், தகவல்கள் உள்ளிட்டவற்றுக்கு, தற்போதைய இளைஞர்கள் மொபைல் போன்க ளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால், இளைஞர்களை, இந்த மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் எளிதில் சென்றடையலாம்
* அடுத்த லோக்சபா தேர்தலில், முதன்முறையாக ஓட்டு போடப் போகும், தற்போது பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை, பா.ஜ., நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, கட்சியின் சாதனைகள் குறித்து விளக்க வேண்டும்
* ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், ஜாதி, மத பேதம், குடும்ப அரசியல், ஊழல் - லஞ்சத்துக்கு எதிராகவே, மக்கள் ஓட்டளித்து உள்ளனர். வளர்ச்சி திட்டங்களே, மக்களின் தற்போதைய தேவை. அதை உணர்ந்து, நாம் செயல்பட வேண்டும்இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அமைச்சரவையில் மாற்றம்?


கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமை யிலான, பா.ஜ., அரசு, தன் பலத்தை நிரூபித்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றி அமைக்கப்படுவது உறுதியாகி உள்ளது. கோவா முதல்வராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவ அமைச்சர் பொறுப்பை, பரீக்கர் ராஜினாமா செய்தார். தற்போது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த துறையை கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த, 2014ல், மோடி அரசு பதவியேற்ற போது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, நிதி மற்றும் ராணுவ துறைகளின் அமைச்சராக,ஜெட்லி பதவியேற்றார். அதிக வேலைப்பளு உள்ளதால், இந்த துறைகளுக்கு தனித்தனியாக அமைச்சரை நியமிக்கவே, கோவா முதல்வராக இருந்த பரீக்கர், ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஏப்., 12 வரை, கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், அதன் பின்பே, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதனிடையில், உ.பி.,முதல்வராகும் வாய்ப்பு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அதிகம் உள்ளதாகக் கூறப்படுவதால், அந்த துறைக்கும் புதியவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதனால், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

உ.பி., பாணியில் மேற்கு வங்கம்


உ.பி.,யில் மேற்கொள்ளப்பட்ட பிரசார உத்திகள் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த லோக்சபா தேர்தலை சந்திப்பது என, மேற்கு வங்க, பா.ஜ., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்க, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம், கோல்கட்டாவில் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அம்மாநில, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. மேற்கு வங்கத்திலும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசுக்கு எதிரான மனநிலையே உள்ளது.

அடுத்து நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த லோக்சபா தேர்தலில், உ.பி., பாணி பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். இதற்காக, உ.பி., - பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IBRAHIM - dammam,சவுதி அரேபியா
22-மார்-201719:36:25 IST Report Abuse

IBRAHIMஉ.பி தேர்தலில் முஸ்லிம்களின் மனமாற்றம் பா.ஜ.க விற்கு சிறந்த பலன்களை அளிக்கும்..,போலி மதச்சார்பின்மையை துரத்தியடிக்கும்.., பா.ஜ.க வில் சிலர் விபரீதமாக பேசுவது எதிர்க்கட்சிகள் கலங்கியகுட்டையில் மீன் பிடிக்கிறார்கள்.பா.ஜ.க அதற்க்கு இடம் கொடுக்க கூடாது.நீங்கள் நாட்டின் வளர்ச்சிமட்டும் சிந்தித்து..,மதத்திற்கு இடம் கொடாமல் ஆட்சி செயுங்கள் மோடிஜி அவர்களே..,உ.பி மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் உங்களுக்குதான் வாக்களிப்பார்கள்.

Rate this:
neelakandan - berlin,ஜெர்மனி
17-மார்-201712:33:52 IST Report Abuse

neelakandanராகுலை கிண்டல் செய்வதற்கு முன் பாரிக்கர் தன் கோவணம் அவிழ்ந்தது பற்றி கவலை பட வில்லை. ஊரே இவர்களை பார்த்து கேலி செய்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் மற்றவர்களை கேலி கிண்டல் செய்கிறார்கள்.

Rate this:
Krishnan - chennai,இந்தியா
17-மார்-201717:54:40 IST Report Abuse

Krishnanதிக்விஜய் சிங் ரொம்ப யோக்கியரா? Governer இடம் கிளைம் செய்ய துப்பு இல்லை இப்போது என்ன கூப்பாடு? பேசாமல் இருக்க வேண்டியதுதான்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201712:05:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaவிலை வாசியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றாலே நீங்கள் இமாலய வெற்றி காணலாம்...

Rate this:
suresh - covai,இந்தியா
17-மார்-201711:56:53 IST Report Abuse

sureshசரியாக சொன்னீர்கள் முரசு மதுரை அவர்களே..

Rate this:
Jayadev - CHENNAI,இந்தியா
17-மார்-201709:54:18 IST Report Abuse

Jayadev2019 இல் பிஜேபி பாராளுமன்றத்தில் தன்னுயுடைய பலத்தை தற்போதுக்குள்ளதை குறைக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது

Rate this:
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
17-மார்-201708:30:28 IST Report Abuse

V .வெங்கடேஷ் "அடுத்த லோக்சபா தேர்தலில், முதன்முறையாக ஓட்டு போடப் போகும், தற்போது பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை, பா.ஜ., நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, கட்சியின் சாதனைகள் குறித்து விளக்க வேண்டும்" - இதற்கு பதில் தினமலர் நடத்தவது போல மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளும், பல்வேறு அரசு/தனியாரின் scholarship பற்றியும் எடுத்து சொல்லி அவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டினால் தன்னாலே உங்களை ஆதரிப்பார்கள்..

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
17-மார்-201708:30:15 IST Report Abuse

தங்கை ராஜாஇவர்களிடம் விஷயம் எதுவுமில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரம் மட்டுமே மூலதனம். அதனை மையப்படுத்திய பிரச்சாரமும் பயமுறுத்தல் கலவரமும் எடுபடும் காலங்களில் வெற்றி வசப்படும். அது மட்டுமே போதுமா நீண்ட கால அரசாட்சிக்கு.

Rate this:
Krishnan - chennai,இந்தியா
17-மார்-201718:03:30 IST Report Abuse

Krishnanதங்கை ராஜா அவர்களே .... உங்கள் யோசனையை கேட்டால் காங்கிரஸ் இப்போது 44 , 2019 வெறும் 4 ஆக்கபூர்வமான அரசியல் செய்தல் நல்லது இல்லாவிட்டால் உங்கள் virupam...

Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
17-மார்-201707:30:17 IST Report Abuse

Vaduvooraan முரசு ரொம்பவே ஒலி எழுப்புதே? முதல்ல ஆர்,கே நகர்ல மருது தேறுவாரான்னு அத பத்தி யோசிங்க

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மார்-201705:28:59 IST Report Abuse

Kasimani Baskaranமெகா ஊழல் மன்னன் பசியை வெளியே வரமுடியாமல் உள்ளே போட்டு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்... அதை செய்தாலே மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்...

Rate this:
neelakandan - berlin,ஜெர்மனி
17-மார்-201712:32:21 IST Report Abuse

neelakandanகூட்டு களவாணிகள் அதை செய்ய மாட்டார்கள். மோடி மஸ்தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என்று சொல்லியே வாக்குகளை பெற முயல்வார்கள்....

Rate this:
17-மார்-201705:26:32 IST Report Abuse

muthukumarஅரசியல் ரீதியாக ராஜ தந்திரம் மிகவும் இன்றியமையாதது. வாழ்த்துக்கள்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement