'ஆதார்' அட்டை திட்டம்; பிரதமர் மோடிக்கு பாராட்டு | 'ஆதார்' அட்டை திட்டம்; பிரதமர் மோடிக்கு பாராட்டு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஆதார்' அட்டை திட்டம்
பிரதமர் மோடிக்கு பாராட்டு

புதுடில்லி, : பொதுமக்களுக்கு, நாடு முழுவதும் செல்லத்தக்க அடையாள சான்றாக, 'ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, உலக வங்கி பாராட்டி உள்ளது.

 'ஆதார்' அட்டை, திட்டம், பிரதமர் மோடிக்கு பாராட்டு

ஆதார் அட்டை திட்டம், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டாலும், மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு

பதவியேற்ற பின்தான், ஆதார் அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த ஆதார் அட்டையை, அடையாள சான்றாக பயன்படுத்தி, நாட்டின் எந்தப் பகுதியிலும், வங்கிக் கணக்கு துவங்குதல்,அரசு மானியம், விவசாயி களுக்கான மானியம், கல்வி உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியம் என, அரசு சலுகை களை பெறலாம்.ஆதார் அட்டை திட்டத்திற்காக, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து, உலக வங்கி யின் தலைமை பொருளா தார நிபுணர் பால் ரோமர் கூறியதாவது: பணப் பரிவர்த்தனை போன்ற அனைத்துபரிவர்த்தனை களுக்கும், இந்த ஆதார் அடையாள சான்று அடிப்படையானது.

உலகம் முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்பட் டால், பொருளாதார நிலை வளர்ச்சியடையும்.

Advertisement

உலகம் முழுவதும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில், 150 கோடி பேர், தங்கள் அடையாளத் தை நிரூபிக்க முடியவில்லை. இது போன்ற சேவைகளுக்கு, ஆதார் அடையாள அட்டை தேவை.
இந்த திட்டத்தை, இந்தியாவில் தீவிர மாக செயல்படுத்திய, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
19-மார்-201703:58:39 IST Report Abuse

Palanivelu Kandasamyயாரோ பெத்த பிள்ளை

Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
18-மார்-201721:53:26 IST Report Abuse

ராம.ராசு தற்போதைய ஆளும் கட்சிக்கு, பிரதமருக்கு கிடைத்த இந்த பாராட்டுக்கு, முந்தைய ஆளும் கட்சிக்கு... அரசுக்கு நன்று சொல்ல வேண்டும். இத்தனைய பெரிய திட்டத்தை... முந்தைய ஆளும் கட்சி கொண்டு வந்தபோது, இப்போதைய ஆளும் கட்சி, எம்மாதிரியான எதிர்ப்பைக் காட்டியது நாடறிந்தது. தேர்தல் நடக்கும் வரை நாடாளுமன்றத்தையே முடக்கியது. ஆதார் அட்டைத் திட்டத்தால் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும்... மக்களின் விபரங்களை வெளிநாட்டிற்கு கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லி, மிகப் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டியது. ஆனால் அது இப்போது அப்படியே தலைகீழாகிப் போனது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் மதிய உணவு உண்பதற்குக் கூட ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மையில், எத்தனைக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், முந்தைய அரசை இப்போதைய அரசு பாராட்ட வேண்டும்.

Rate this:
Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா
22-மார்-201718:29:06 IST Report Abuse

Kamalakannan Paramasivamஉண்மை...

Rate this:
sundaram - chennai,இந்தியா
17-மார்-201721:00:39 IST Report Abuse

sundaramOn 17-3-2017 we board rockfort express train at Pennadam Railway station regret to inform that there is no safety for rail passenger at night the station master room locked nobody in railway station. We 20 people board the train at pennadam @1am. Most of the passengers ladies and senior citizens. The train footsteps and the platform height is less. We are lucky to board the train by the help of duty TTE/RPF. I request the railways for the safety of passengers at night. I am submitting my PNR NO4428700730for ur reference. Sundaram

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-மார்-201710:28:32 IST Report Abuse

ganapati sbyou can register your suggestion in mygov website as well in railways website or at suresh prabu twitter or fb ....

Rate this:
Sudarsanr - Muscat,ஓமன்
17-மார்-201719:18:49 IST Report Abuse

Sudarsanrஇந்த பாராட்டு அதை செயல்முறைக்கு கொண்டு வந்ததற்கு.

Rate this:
sadaiyandi kumar - BANGALORE,இந்தியா
17-மார்-201717:22:32 IST Report Abuse

sadaiyandi kumarஆதார் கார்டுக்கு உலக வங்கி மோடிக்கு பாரட்டுனா ரூபா நோட்டு வாபசுக்கு யாருக்கு பாராட்டுவாங்க ?அடுத்த பிரதமருக்கா ?

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
17-மார்-201716:20:30 IST Report Abuse

ganapati sb110 கோடி பேருக்கு ஆதார் அட்டையை விரைவாக வழங்கி சாதனை செய்திருக்கிறது ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அமைச்சகம் மீதி உள்ளோருக்கு ஓராண்டுக்குள் கொடுத்துவிடும் இலக்கும் வைத்துள்ளார்கள் . இதை கொண்டே கட்டணம் இல்லாமல் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்யலாம் என்பது சிறப்பு .

Rate this:
17-மார்-201715:51:31 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்எல்லா திட்டங்களையும் கொண்டுவந்து பிறகு அதை முழுவதுமாக செயல்படுத்தாமல் விட்டுவிடுவது தான் காங்கிரஸ் மற்றும் திமுக வின் கொள்கை. திமுக கூட கட்டாய ஹெல்மெட் என்று சொல்லி அனைவரையும் வாங்கவைத்து விட்டு பிறகு பின்வாங்கி கொண்டது, அதே போல காங்கிரஸ் இந்த திட்டத்தை கொண்டு வந்து முழுமூச்சில் செயல்படுத்தாமல் பெயரளவுக்கு வைத்திருந்தார்கள் ஏனென்றால் இங்கே சிலர் கேள்வி கேட்கிறார்கள் அதனால் என்ன பயன் எதற்கு ஆதார் எடுக்கவேண்டும் என்று (இதே ஒரு தனியார் பள்ளியில் பிள்ளையை சேர்க்க எவ்வளவு பணமும் கொடுப்பார்கள் , இரவு பகலாக வரிசையில் காத்திருப்பார்கள், எத்தனை படிவத்தை கேட்டாலும் கொடுப்பார்கள்) ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்று வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்கு அடையாள அட்டை, மானியங்கள் முதற்கொண்டு இன்று வாகன பதிவிற்கும் ஆதார் என்று செயல்படுத்தியது மோடி தானே. முதலில் அவர்கள் இதை எதிர்த்ததற்கு காரணம் இந்த தகவல்கள் திருட பட வாய்ப்பு இருந்ததால். அதை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-மார்-201714:10:08 IST Report Abuse

Karuthukirukkanஅட கொடுமையே ஆதார் , மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் , எரிவாயு மானியம் வங்கியில் செலுத்துவது , ஜிஎஸ்டி , அந்நிய முதலீட்டுக்கு பல துறைகளில் அனுமதி இது எல்லாம் மன்மோகன் சிங் பாடுபட்ட விஷயங்கள் அறிமுகப்படுத்திய விஷயங்கள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குசாதனை செய்த பிஜேபி காரர்கள் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் , இவற்றை தங்கள் திட்டம் என்று தம்பட்டம் அடிப்பதை விட ஏதாவது கேவலமான விஷயம் உண்டா ???

Rate this:
Kittu - ,
17-மார்-201714:53:54 IST Report Abuse

Kittuwonderful...

Rate this:
diamondu - Toronto,கனடா
17-மார்-201723:34:00 IST Report Abuse

diamonduநீங்கள் கிறுக்கன் அல்ல "A " யோக்கியன் :-) காங்கிரஸ் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு அர்த்தம் பணம் மற்றும் ஊழல் செய்யத்தான்... அதையும் மீறி .... ஆதார் கொண்டுவரப்பட்டதே .... பங்களாதேஷ் நாட்டினருக்காக... அதை மோடி அரசு ... முழுமையான பாரதத்திட்டமாக மாற்றி இந்தியாவினருக்கு மட்டும் ... என்று ஆக்கிவிட்டது.... வெளிநாட்டு கைக்கூலிகளான ... ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் படிப்பாளிகள் .... நாட்டை கூறு போட ... வெளிநாட்டுக்காரிக்கு உதவினர்... அதையெல்லாம் ... பிஜேபி அரசு... முழு இந்தியத்திட்டமாக ஆகிவிட்டது... super...

Rate this:
Stalin - Chennai,இந்தியா
17-மார்-201713:57:18 IST Report Abuse

Stalinஉலக வங்கி ஒரு விசயத்துக்கு பாராட்டு தெரிவிக்கிறது என்றால் அந்த விஷயம் அந்த நாட்டின் ஏழைகளுக்கு எதிரானது என்ற பொருளை நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம் இதற்கு பல ஆப்பிரிக்கா நாடுகள் உதாரணம்

Rate this:
Senthilkumar - Chennai,இந்தியா
17-மார்-201717:44:06 IST Report Abuse

Senthilkumarசரியாக சொன்னீர்கள்... ஆனால் பல பேருக்கு இது புரியாது ......

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மார்-201712:53:33 IST Report Abuse

ஜெயந்தன்அண்டப்புளுகு... ஆகாச புளுகு... என்றால் என்ன என்று இப்போதுதான் தெரிந்தது...... எதை கேட்டாலும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது என்று சொன்ன இந்த புளுகர்கள் இதை மட்டும் வெட்கம் இல்லாமல் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவனுங்க காங்கிரஸ் ஆட்சியில் எதை எல்லாம் எதிர்த்தார்களோ அதை எல்லாம் தான் 3 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள் ... வெட்கம் கெட்டவர்கள்..

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-மார்-201714:09:45 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்பாவம் ஐயா நீங்கள் .. அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் .. ஆனால் செயல் படுத்திய விதம் தான் வித்தியாசம்.. அதற்கு மக்கள் மத்தியில் அவசியத்தை உணர்த்த எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் தான் இதன் வெற்றிக்கு காரணம்.. கடும்வழி முறைகளை கொண்டு வந்தால் மக்களுக்கு மனதில் அதிருப்தி வந்து விடுமோ .. அதனால் வாக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே காங்கிரஸ் பல நல்ல திட்டங்களை பெயரளவுக்கு நடை முறை படுத்துவது போல நாடகம் ஆடிக்கொண்டிருந்தது... இப்போது திட்டங்கள் வேகமாக நடை முறை படுத்த பட்டால் அதைநான் கொண்டு வந்தேன் நான் கொண்டு வந்தேன் என்று கொக்கரிப்பது.... நாட்டிற்கு நல்லது என்று உணர்ந்தால் அதைச்செயல் படுத்துவதில் மோடிமட்டும் அல்ல .இதற்கு முன்பு வாஜ்பாயி , மொரார்ஜி தேசாய் போன்ற காங்கிரஸ் அல்லாத எல்லா அரசுகளும் விருப்பு வெறுப்பு காட்ட வில்லை .. தேச நலனை பின்னுக்கு தள்ளி தனது கட்சி கொண்டு வந்த திட்டம் எதிர்க்கட்சி கொண்டு வந்த திட்டம் என்றெல்லாம் பேசி மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்ட பின்பும்புத்தி வரவில்லை...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement