ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு | ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன்
ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் களமிறக்கப்பட்டு உள்ளார்.

ஆர்.கே.நகர் வேட்பாளர், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இரு அணியினரும், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகரில் களம் இறங்குகின்றனர்.

அத்துடன், ஜெ., அண்ணன் மகள் தீபா, தனியாக களம் இறங்குகிறார். தி.மு.க., - தே.மு.தி.க., ,

ஆகிய கட்சிகளும் வேட் பாளர்களை அறிவித் துள்ளன. இந்நிலையில், ஆர்.கே.நகரில், நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க., தொண்டர்களும், பொதுமக்களும் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை அறியும் களமாக, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

எனவே, சசிகலா குடும்பத்திற்கு எதிரான மன நிலையில் உள்ள, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் யார் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.

சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலரும், சசிகலா அக்கா மகனுமான தினகரன் போட்டியிடுகிறார். பன்னீர்செல்வம் அணி சார்பில், கட்சி அவை தலைவரும், முன்னாள் அமைச்சரு மான மதுசூதனன் போட்டியிடுவார் என, நேற்று அறிவிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று மாலை, 4:15 மணிக்கு, ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடந்தது. அதில், ஒருமனதாக மதுசூதனன் வேட்பாளராக

Advertisement

தேர்வுசெய்யப்பட்டதாக, பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மதுசூதனன், ஆர்.கே.நகர் தொகுதியில் வசிப்ப வர். 1991ல், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று, ஜெ., அமைச்சரவையில், கைத்தறித் துறை அமைச்சராக பணியாற்றி னார். இந்த தொகுதியில், இருமுறை ஜெ., போட்டியிட்ட போது, மாற்று வேட்பாளராக, மனு தாக்கல் செய்தார்.

மதுசூதனன் கூறியதாவது:


நான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்.கே.நகர் தொகுதியில் வசித்து வருகிறேன்; உள்ளூர் காரன். எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன்; மக்கள் ஆதரவை பெற்றுள்ளேன்;

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். தினகரனை, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிப் பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மார்-201718:27:43 IST Report Abuse

Malick Rajaஆர் கே நகரில் வெள்ளாமல் வெள்ளத்தில் செல்லப்போவதில் முதலாவது தீபா ..இரண்டாவது தேமுதிக மூன்றாவது கம்யூனிஸ்ட் நான்காவது பிஜேபி ஆறாவது ஓ பி எஸ் அணி ஏழாவது சசிகலா அணி . பூஜைக்கேற்ற பூவிது என்று வந்தேன் ஆனா பூஜ்யம் வாங்க வந்தேன் .. என்ற பாட்டுடன் கங்கை அமரன் என்றும் நடக்கலாமா ?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17-மார்-201718:37:56 IST Report Abuse

mindum vasanthamChase away Singapore Sadayan Andhra gulti,go for panner

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
17-மார்-201716:53:01 IST Report Abuse

kc.ravindranRK நகர் தேர்வு மக்கள் தரும் தீர்ப்பாகவே அமையும். பன்னீர்செல்வம் அணி வெற்றி பெற்றால் AIADMK இவர்கள் தான் என்பதை உறுதிசெய்யும் படியும் இடைப்பாடி அணி வெற்றிபெற்றால் எவ்வளவு ஊழல் செய்தாலும் எங்களை எவ்வளவு மட்டம் தட்டினாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் என்று சொல்லும் ஒரு வோட்டு கூட்டம் வெற்றிபெற்றதாக ஆகும். அண்ணே வரும்போது ... .. ஞாபகமா.... அண்ணே மறந்துடாதீங்கண்ணே

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-மார்-201714:00:44 IST Report Abuse

N.Kaliraj ஆர்கே நகர் 5000 ......என கேள்விபட்டேன்...

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
17-மார்-201723:44:59 IST Report Abuse

kavithakannanஅண்ணா ஒரு வோட்டுக்கு 10000 ரூவா அவர்கள் கரைட்டா 1 லட்சம் வாக்காளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஐடி கொடுத்து ஒரு சில வியாபாரிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி அதிகமானால் மீண்டும் 50ஆயிரம் பேருக்கு கொட்டுக்கவும் தயார். ஆகா மொத்தம் 100 முதல் 150 கோடி தயார்நிலையில் உள்ளது. இது போனாலும் இதைவிட அல்ல ஆட்சி கையில் உள்ளது 4 வருஷம் வேறு உள்ளது. எப்படியும் 2 லட்சம் கோடி வருமானம் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் சசியும் தினகரனும் இருக்கிறார்கள். 200 ரூவாய்க்கு ஒட்டு போட்ட தமிழன் 10 ஆயிர ரூவாய்க்க ஒட்டு போடமாட்டான்???? தமிழன் சூடு சொரணையை வித்து பல வருடம் ஆகிவிட்டது....

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
17-மார்-201713:03:23 IST Report Abuse

R.SANKARA RAMANதிமுக ஒரு பைசா செலவிட வேண்டாம். அவர்களின் இமாலய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Rate this:
thiru - Chennai,இந்தியா
17-மார்-201714:37:16 IST Report Abuse

thiruஆமாம், செலவிட்டால் பயனில்லை... தி மு காவிற்கு டெபாசிட் தொகையாவது மிஞ்சட்டும்........

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-மார்-201707:49:58 IST Report Abuse

Anandan// தி மு காவிற்கு டெபாசிட் தொகையாவது மிஞ்சட்டும் // இப்படி சொல்லி சசியின் திருட்டு கும்பலை வளர்த்ததுதான் மிச்சம்....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201712:17:07 IST Report Abuse

Srinivasan Kannaiyaமதுசூதனன் அவர்களுக்கு தேர்தலின் பொழுது யாருக்கும் தங்கள் பெயரில் பாதியை வழங்கி விடாதீர்கள்..

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-மார்-201713:57:55 IST Report Abuse

N.Kaliraj முன் பாதியா.....பின்பாதியா.........

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
17-மார்-201712:04:06 IST Report Abuse

ganapati sbஜெயாவிற்கு மாற்று வேட்பாளராக அப்போதே RK நகரில் மனு தாக்கல் செய்த மதுசூதனுக்கு அதிமுக ஜெயா விசுவாசிகளும், ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கு மாற்றம் விரும்புவோர் பாஜகவிற்கும் வாக்களிக்கலாம். வேறு கட்சிகள் நபர்கள் வெல்வதால் தமிழகத்திற்கு நன்மை ஒன்றுமில்லை.

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-மார்-201707:51:38 IST Report Abuse

Anandanபிஜேபியினால் என்ன நன்மை? எண்ணூரில் வழி வழங்கியது நினைவில் இல்லையா? அதில் பெரும்பாலும் மாணவர்கள் தொண்டு எண்ணம் கொண்டவர்கள்தான் கழிவை அள்ளினர்....

Rate this:
skandh - chennai,இந்தியா
17-மார்-201711:02:18 IST Report Abuse

skandhவெல்பவர் டி டி வி தினகரனும். அ தி மு காவும்தான்.

Rate this:
vasanth - Jurong west,சிங்கப்பூர்
17-மார்-201711:47:58 IST Report Abuse

vasanthDinakaran will definitely win. Dinakaran was introduced in to politics by AMMA only. Amma only asked Dinakaran to come from singapore and introduce in to politics.what changes MADHUSUDHANAN made when he was minister from R.K.Nagar nothing nothing....

Rate this:
Stalin - Chennai,இந்தியா
17-மார்-201714:00:15 IST Report Abuse

Stalinநைஸ் காமெடி பாஸ் கண்டிப்பாக RK நகர் மக்கள் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டார்கள் அம்மா அவனை சிங்கப்பூர் ல இருந்து வரசொன்னாங்களாம் தந்தி கொடுத்தார்களா ஈமெயில் பண்ணினாங்களா அடிமைகளே கூறுங்கள்...

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-மார்-201707:52:25 IST Report Abuse

Anandanதினகரன் வெல்வாரா? நல்ல காமடி....

Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
17-மார்-201711:00:26 IST Report Abuse

Kadaparai Maniமுக்கிய தலைவர்கள் இடையே பகையை மூட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டது .பன்னீரை ஓவராக புகழ்வது அல்லது மட்டம் தட்டுவது ஒரு சிறு உதாரணம்.

Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
17-மார்-201709:45:54 IST Report Abuse

Kadaparai Maniபன்னீரை ஓவராக புகழ்வது அல்லது மட்டம் தட்டுவது ஒரு சிறு உதாரணம்.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement