தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள் | தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட், 2017 - 2018 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் முக்கிய கோட்பாடுகளை அதிகம் எதிர்க்கபோவதில்லை என்பதை சூசகமாக காட்டுகிறது.

 தமிழக பட்ஜெட், 2017 - 2018, முக்கிய அம்சங்கள்

'வரியில்லாத பட்ஜெட்' என்பதற்கு காரணமாக, நிதியமைச்சர் ஜெயக்குமார், தன் நீண்ட உரை யில், 'மத்திய அரசின், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் வரப்போகிறது' என, குறிப்பிட்டிருப்பது, அதன் அடையாளமாகும்.

வீட்டுவசதி நிதியம் உருவாக்க திட்டம்


* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வாயிலாக, 3,707 கோடி ரூபாய் செலவில், 22 ஆயிரத்து, 178 வீடுகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, 808 கோடி ரூபாயில், 3,300 வீடுகள் புதிதாக கட்டப்படும்
* குறைந்த வருவாய் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், தங்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப வீட்டு வசதியை பெற, உள் கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் வாயிலாக, வீட்டுவசதி நிதியம் உருவாக்கப்படும். தனியார் முதலீட்டு டன் புதுமையான நிதி திரட்டும் முயற்சிக்கு, தேசிய வீட்டுவசதி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு


அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு, மானியம் வழங்க, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்க, சென்னையைச் சுற்றியுள்ள பிற நகரங்களில், தேவையின் அடிப்படையில் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. அவை, கட்டுமான நிறுவனங்களுக்கு, வாடகைக்கு விடப்படும். தொழிலாளர் நலத் துறைக்காக, 1,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3.50 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பட்டா


பட்ஜெட்டில், வருவாய் துறைக்கான அறிவிப்புகள்:
* 10 புதிய வட்டாட்சியர்; ஐந்து புதிய கோட்டாட்சியர் அலுவலகங்கள், குடியிருப்பு களுடன், 42.16 கோடி ரூபாயில் கட்டப்படும்
* ஏழை மக்களுக்கு, 3.50 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
* முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கருஞ்சிவப்பு அட்டை வைத்துள்ளோர் இறந்தால், 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, 251 கோடி ரூபாய் உட்பட, வருவாய் துறை பணிகளுக்காக, 5,695 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாக்கி ரூ.6,000 கோடி


தமிழகத்திற்கு தர வேண்டிய தொகையில், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இது குறித்து, நிதித் துறை வட்டாரம் கூறியதாவது:

உயர் கல்வி மாணவர் உதவித்தொகை திட்டத் தில், 1,927 கோடி ரூபாயை, மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. மேலும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 1,266 கோடி; அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1,476 கோடி நிலுவை உள்ளது.

இலவச கல்வி திட்டம், 300 கோடி; இயற்கை பேரிடர் நிவாரணம், 133 கோடி; வெள்ள மேலாண்மை, 342 கோடி; குடும்பநலத் திட்டம், 65 கோடி ரூபாய் உட்பட, மொத்தம், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள் ளது. அந்த தொகை கிடைக்கும் போது, தமிழகத்தின் நிதிச்சுமை சற்று குறையும். இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.

உணவு மானியத்திற்கு ரூ.5,500 கோடி


பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 20௧6 நவ., முதல், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலாகி உள்ளது. ரேஷனில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், மானிய விலையில், துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவது தொடரும். வரும் நிதியாண்டில், உணவு மானியத்திற்கு, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சந்தையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, விலை கட்டுப்பாட்டு நிதியத்திற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியமானது, சந்தையில் விலை உயரும் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக, குறைந்த விலைக்கு விற்கும். இதனால், வெளிச்சந்தையில் விலை கட்டுப்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

10,500 போலீசார் தேர்வு


'தமிழக காவல் துறைக்கு, 10 ஆயிரத்து, 500 சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்படுவர்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டு உள்ளது.அதன் விபரம்:
* இந்தாண்டு, 49 காவல் நிலையங்களுக்கு, 30 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடம் கட்டப்படும்
* போலீசாருக்கு, 450 கோடி ரூபாயில், கூடுதலாக, 3,000 வீடுகள், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலமாக கட்டப்படும்
* சிறப்பு காவல் இளைஞர் படைக்கு, 2014ல், 10 ஆயிரத்து, 99 பேர் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சிக்கு பின், 8,500 பேர் இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தாண்டு புதிதாக, 10 ஆயிரத்து, 500 பேர், சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்படுவர்
* காவல் துறையை நவீனமயமாக்க, 47.91 கோடி ரூபாய் உட்பட, காவல் துறையின் பல
திட்டங்களுக்கு, 6,483 கோடி ரூபாய்


ஒதுக்கப் பட்டுள்ளது.

* பட்ஜெட்டில் தீயணைப்பு துறைக்கு, 253 கோடி ரூபாய்; சிறைத்துறைக்கு, 282 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பயிர் கடன் ரூ.7,000 கோடி தர இலக்கு


'கூட்டுறவு வங்கிகள் மூலம், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு, புதிதாக பயிர் கடன் வழங்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில், அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விபரம்:
* சிறு, குறு விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய, குறுகிய கால பயிர் கடன்களும்; நடுத்தர மற்றும் நீண்ட கால விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2016 மார்ச் வரை, 4,893 கோடி ரூபாய் கடன்; 387 கோடி ரூபாய் வட்டி என, மொத்தம், 5,280 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையை, ஐந்து கட்டங்களாக திரும்ப செலுத்துவதால் ஏற்படும் கூடுதல் வட்டி தொகை, 760 கோடி ரூபாயையும் சேர்த்து, மொத்தம், 6,04௧ கோடி ரூபாய், நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது. இதனால், 12 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
* வரும் நிதியாண்டில், கூட்டுறவு வங்கிகள் மூலம், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு, புதிதாக பயிர் கடன்கள் வழங்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத்துக்கு ரூ.2,600 கோடி


மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டங்களை செயல்படுத்த,தமிழக பட்ஜெட்டில், 2,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில், நகராட்சி நிர்வாகத் துறை தொடர்பான அறிவிப்புகள்:
* மத்திய அரசு நிதியுதவியுடன், தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில் செயல்
படுத்தப்படும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, 1,200 கோடி ரூபாய்; 27 நகரங்களில் செயல்படுத்தப்படும், அம்ரூத் திட்டத்துக்கு, 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் துக்கு, 386 கோடி ரூபாய்; சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்துக்கு, 400 கோடி ரூபாய்; உலக வங்கி உதவியுடன் ஏழு நகர்ப்புற உள்ளாட்சிகளில் மேற்கொள்ளப்படும், தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு, 563 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது
* நகராட்சி நிர்வாகத் துறை திட்டப் பணிகளுக்கு, 13 ஆயிரத்து, 996 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தசை சிதைவு நோயாளிகளுக்கு வாகனம்


பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள்:

* தொழுநோயில் இருந்து மீண்ட பின்னும், கடும் பாதிப்புக்கு உள்ளானோருக்கு, உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாய் வழங்கப்படும்
* மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரமாக உயர்த்தப் படும். இதற்காக, 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* அரசு ஊழியர்களாக உள்ள மாற்றத்திறனாளி களுக்கு வழங்கப்படும், 1,000 ரூபாய் மாத பயணப் படி, செவித்திறன் குறைபாடுடைய அரசு பணியாளர் களுக்கும் விரிவுபடுத்தப்படும்
* பார்வை திறன் குறைபாடுள்ள, 10 ஆயிரம் பேருக்கு, 3.16 கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும்
* தசைச்சிதைவு, பக்கவாதத்தால் கை, கால் பாதிக் கப்பட்ட, 1,000 பேருக்கு, 6.50 கோடி ரூபாய் செல வில், மோட்டார் பொருத்திய, நகரும் வண்டிகள் வழங்கப்படும்.

அகதிகள் முகாம்


* அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் களுக்கு வழங்கப்படும் சலுகைகள், திட்டங்களும் நீட்டிக்கப்படும். அவர்களின் நலனுக்காக, 116 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் நறுமண பால் ஆலை


* ஏழை பெண்களுக்கு, 12 ஆயிரம் கறவை பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு, 6 லட்சம் ஆடுகளும், 182 கோடி ரூபாயில் வழங்கப்படும்
* கோழிப் பண்ணை வளர்ச்சி திட்டம், தீவன உற்பத்தித் திட்டம் ஆகியவை, தலா, 25 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* காங்கேயம், பர்கூர், உம்பளாசேரி ஆகிய, நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க, கூடுதல் தொகை ஒதுக்கப்படும். புலிகுளம் மற்றும் இதர உள்ளூர் இனங்களும் பாதுகாக்கப்படும்
* மதுரையில் தினமும், 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு திறன் உடைய, பல்வேறு வகையான நறுமண பால் தயாரிக்க, 40 கோடி ரூபாயில் ஆலை அமைக்கப்படும்
* கல்லுாரிகள், பல்கலைகளில், 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.

ஊரக வளர்ச்சிக்கு ரூ.16,665 கோடி


பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சித் துறைக்கான அறிவிப்புகள்:

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு, 470 கோடி ரூபாய். பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்திற்கு, 758 கோடி ரூபாய் உட்பட, ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களுக்கு, பட்ஜெட்டில், 16 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு ஸ்கூட்டர் தர ரூ.200 கோடி


முதியோர், கணவனை இழந்த பெண்கள், ஆதரவற் றோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கு, மாத உதவித்தொகையாக, வங்கிகள் மூலம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதற்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம்:
* சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக, 3,790 கோடி ரூபாய்
* பெண் குழந்தைகள் பாதுகாப்புதிட்டம், தொட்டில்
குழந்தை திட்டங்களுக்காக, 140 கோடி ரூபாய்
* அனைத்து திருமண உதவி திட்டங்களுக்காக, 723 கோடி ரூபாய்

Advertisement

* ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மிகாமல், 50 சதவீத மானியம் வழங்க, 200 கோடி ரூபாய் * சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு முறையே, 1,687 கோடி ரூபாய் மற்றும் 1,779 கோடி ரூபாய் உட்பட, சமூகநலத் துறைக்காக, 4,781 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் சேவை* அரசு போக்குவரத்து கழகத்திற்கான டீசல் மானியத்துக்காக, 800 கோடி ரூபாய்; மாணவர்கள், மூத்த குடிமக்கள் பயணச் சலுகை மானியத்திற்காக, 564 கோடி ரூபாய்; பங்கு மூலதன உதவியாக, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு, பட்ஜெட்டில், 2,192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடத்தில், விரைவில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும்
* மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளாக, 107.5 கி.மீ., நீளமுள்ள, மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு ரூ.174 கோடி


உள்ளாட்சி தேர்தல் செலவுக்காக, 174 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

*மத்திய அரசின், 14வது நிதிக்குழு பரிந்துரைப்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுவான அடிப்படை நிதியுதவியாக, 2,780 கோடி ரூபாயும், பொதுவான செயல்பாட்டு நிதியுதவியாக, 560 கோடி ரூபாயும் கிடைக்கும்
* ஐந்தாவது மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி களுக்கு, 2017 - 18ல், 5,159 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 4,054 கோடி ரூபாயும் கிடைக்கும்
* மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான செலவுகளுக்காக, பட்ஜெட்டில், 174 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு என்னென்ன?


* மாநிலத்தில் உள்ள, 115 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும்; 107 கி.மீ., துார மாவட்ட முக்கிய சாலைகளும், 160 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தப்படும்
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1,000 கி.மீ., சாலைகளை அகலப்படுத்தவும்; 3,000 கி.மீ., சாலைகளை மேம்படுத்தவும், 200 பாலங்கள், சிறுபாலங்கள் கட்டவும், 3,100 கோடி ரூபாய் செலவிடப்படும்
* மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கும் திட்டம், விருதுநகர் கோட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும்
* தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 1,508 கோடி ரூபாய் தரப்பட்டு உள்ளது.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 141 கி.மீ., முக்கிய இணைப்பு சாலைகளை, நான்கு வழி அல்லது ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்த, 744 கோடி ரூபாய் தேவை. முதற்கட்டமாக, 232 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்
* சென்னை சுற்று வட்டச்சாலையில் முதற்கட்டமாக, எண்ணுார் துறைமுகம் முதல், தச்சூர் வரையிலான சாலைக்கு நில எடுப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்காக, 951 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு உள்ளது
* நபார்டு வங்கி கடனுதவியுடன், பாலங்கள் கட்ட, 200 கோடி ரூபாய் என, பட்ஜெட்டில், நெடுஞ்சாலை துறைக்கு, 10 ஆயிரத்து, 67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்


* கடலரிப்பை தடுக்க, புதிய தொழில்நுட்பம்
* தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மீனவர்களுக்கு, 85 கோடி ரூபாயில், 5,000 வீடுகள் கட்டப்படும்
* தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ், மீனவ பெண்களுக்கு வழங்கப்படும் நிவாரணம், 2,700 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கு, 357 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது
* விற்பனை வரியின்றி, விசைப்படகுகளுக்கு வழங்கப்படும், 15 ஆயிரம் லிட்டர் டீசல், 18 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு வழங்கப்படும் டீசல், 3,600 லிட்டரில் இருந்து, 4,000 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல, நாட்டு படகுகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய், 3,000 லிட்டரில் இருந்து, 3,400 லிட்டராக அதிகரிக்கப்படும். இதனால், அரசுக்கு, 28 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்
* ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூரில், 171 கோடி ரூபாயில், உட்கட்டமைப்பு வசதிகளுடன், புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் * கடலரிப்பை தடுக்க, தேசிய கடல்சார் தொழில் நுட்ப மையம், மணல் நிரப்பிய புவிசார் செயற்கை குழாய்களை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. அதிக கடலரிப்புள்ள பகுதிகளில், இந்த தொழில்நுட்ப முறை கையாளப்படும். இதற்கு, 20 கோடி ரூபாய் உட்பட, மீன்வளத் துறைக்கு, பட்ஜெட்டில், 768 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழர் கலாசார அருங்காட்சியகம்


தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு, 6 கோடி ரூபாய் உட்பட, தமிழ் வளர்ச்சித் துறைக்கு, பட்ஜெட் டில், மொத்தம், 48 கோடி ரூபாய் ஒதுக்க பட்டுள் ளது.மதுரையில் உள்ள, உலகத் தமிழ் சங்க வளாகத்தில், 'தமிழர் கலாசார பாரம்பரிய அருங் காட்சியகம் அமைக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
17-மார்-201713:44:43 IST Report Abuse

Visu Iyerகுற்றவாளி அரசின் பட்ஜெட்டா குற்றவாளியின் அறுசா மக்களுக்கு தேவை.. தமிழகமே வெட்கத்தில் தலை குனிந்து நிற்கிறது.. கடனுக்கான அல்லா.. கவுரவத்திற்காக

Rate this:
christ - chennai,இந்தியா
17-மார்-201713:01:34 IST Report Abuse

christகுற்றவாளியின் படத்தை போட்ட பெட்டியை இந்த அடிமை தூக்கிகிட்டு போய் குற்றவாளியின் சமாதியில் சென்று ஆருடம் கேட்க்கிறது. இந்த பட்ஜெட் விளங்குமா ?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201712:07:40 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎன்னடி மீனாட்சி... சொன்னது என்னாச்சி... நேற்று சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு....

Rate this:
vasanth - Jurong west,சிங்கப்பூர்
17-மார்-201711:57:08 IST Report Abuse

vasanthFinance Minister Jayakumar is a good person and he is from fisherman community. first time fisherman community getting opportunity to publish the budget. All fisherman community are happy Now TAMILNADU people are intelligent. Really the BUDGET is good. I have gone through the entire budget. It covers for all people welfare.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
17-மார்-201711:48:48 IST Report Abuse

Balaji பட்ஜெட் விபரங்களை சசிகலா பார்த்தாரா? சமாதியில் பட்ஜெட்?

Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
17-மார்-201709:19:25 IST Report Abuse

Cheranஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதல்வர் நீடுழி வாழ்க.

Rate this:
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
17-மார்-201708:22:04 IST Report Abuse

V .வெங்கடேஷ் இனி பட்ஜெட் பற்றிய செய்திகளை மானியம், இலவசம், கடன், திட்டங்கள் என்று தனி தனி தலைப்புகளில் TABULAR முறையில் வெளியிடலாமே...படிப்பதற்கு எளிமையாக இருக்கும்... ஒவ்வொரு வகையிலும் எப்படி பணம் செலவாகிறது அதில் எத்தனை தண்டம் என்பதும் சுலபாக தெரிந்துகொள்ளலாம்..

Rate this:
abu lukmaan - trichy,இந்தியா
17-மார்-201707:44:24 IST Report Abuse

abu  lukmaanஜெயா அவர்கள் இறந்து நாம் தொடர்பு கொள்ளும் எல்லைக்கு அப்பால் சென்று விட்டார்கள் .இன்னும் அவரிடம் தொடர்பு கொள்கிறோம் என கூறி அவருடைய சமாதியில் கேட்பது அறிவுக்கு ஒத்து வரவில்லை .

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
17-மார்-201705:58:35 IST Report Abuse

சந்தோசு கோபுதிரு. பன்னீர் செல்வம் அவர்களே... திரு. ஜெயக்குமார் அவர்களே.... போன 2016 ஜூன் பட்ஜெட்ல எண்ணற்ற போலி திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.... அந்த திட்டங்கள் என்னாச்சு? தயவுசெய்து ஒரு சில சாம்பிள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்......... 1) போக்குவரத்துக்கு ரூ.1,295 கோடி நிதி ஒதுக்கீடு - நிஜமாவா? அப்படி ஒன்னும் தெரியலையே.. எனக்கு தெரிந்து அதிமுக அடிமைகள் 400 / 500 கார்களை எடுத்துக்கிட்டு அங்கேயும் இங்கேயும் கூவத்தூருக்கும் சமாதிக்கும்னு போய்கிட்டு வந்துகிட்டு இருக்குதுங்க. அந்த போக்குவரத்தையா சொன்னீங்க?......... 2 ) நலத்திட்டங்கள், மானியங்களுக்காக ரூ. 68,210 கோடி ஒதுக்கீடு - அதுல இட்லி, தோசைக்கு மட்டும் என்ன ஒரு 4000 கோடி செலவாயிருக்குமா? ம்.. ம்ம்.. ஆயிருக்கும். ஆயிருக்கும்.. ஜப்பான், ஜெர்மனி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தானே சுட்டீங்க. ஆயிருக்கும்.......... 3) 2000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு - 200 பெரிய சைஸ் டப்பாக்களை உங்கொம்மா துவக்கி வச்சதா கேள்விப்பட்டோம் சரி.. மீதி? யோவ் எங்க தான்யா ஒளிச்சு வச்சிருப்பீங்க அவ்ளோ பஸ்களையும்? வயித்தெரிச்சலா இருக்கியா........... 4) காவல்துறைக்கு ரூ,6,100 கோடி நிதி ஒதுக்கீடு - அப்புறம் எதுக்குய்யா இன்னமும் 5க்கும் 10க்கும் இன்னமும் அல்லாடிக்கிட்டிருக்கானுங்க?.......... 5) மாநில தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு - தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் ஏறக்குறைய கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்குனு நியூஸ் வந்தப்பவே புரிஞ்சிடுச்சி நீங்க நிதி ஒதுக்கின லட்சணம்.......... 6) ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் - எங்கே செவ்வாய் கிரகத்திலேயா? ஏன்யா அவ்ளோ தூரம் போனீங்க?.......... 7) சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கக் கூடிய அமைப்புடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் - சக்தியை எடுக்கிறதுக்கு சூரியனுக்கே போயிட்டீங்களோ?........... 8) ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் - கொன்னுட்டீங்க போங்க........... 9) சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் - சாலைன்னா எது.. இந்த கருப்பா கல்லு கல்லா இருக்குமே.. மேம்பாலம்னா இந்த வளைஞ்சி வளைஞ்சி ஏறி இறங்கி கட்டப்பட்டிருக்கும் அதையா சொன்னீங்க? ஓ............ 10) 1000 கிலோ மீட்டர் சாலைகள் விரிவுபடுத்தப்படும், 3000 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும் - பாத்தீங்களா எல்லாத்தையும் உங்க வூட்டுக்குள்ளயே போட்டுக்குனீங்களே. எங்களுக்கும் கொஞ்சம் செஞ்சிருக்கலாம்ல?............ 11) தொலைநோக்கு திட்டம் 2023 - எது இந்த 2013, 15 லட்சம் கோடி, ஏழைங்களே இல்லாத தமிழகம், தனிநபர் வருமானம் 6 மடங்கு ஆகும் அது தானே.. கண்டுபிடிச்சிட்டேன் பாத்தீங்களா? ஆனா அந்த 2023ன்றது இந்த கி.பி.2023 தானே?

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
17-மார்-201705:58:03 IST Report Abuse

சந்தோசு கோபுஎல்லாமே திருட்டு கணக்கு.. சென்ற வருட பிப்ரவரி இடைக்கால பட்ஜெட் மற்றும் ஜூன் மாச பொது பட்ஜெட் இதிலெல்லாம் அறிவிச்ச திட்டங்கள் என்னாச்சு..? தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்.. தொடர்ந்து கடன் அளவு அதிகரித்திருக்கிறது... ஆனா இந்த நிதி நிலை சீர்கேட்டிற்கும் 'பொய் புனிதர்' 0. பன்னீர் செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன்னா.. அவரு ஒரு 'டம்மி பீசு'. ஒரு 'ஒப்புக்கு சப்பாணியா' தான் நிதி அமைச்சரா இருந்தாரு

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement