வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; தினகரன் தரப்பு கடுப்பு | வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கடுப்பில் தினகரன் தரப்பினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; கடுப்பில் தினகரன் தரப்பினர்

Updated : மார் 17, 2017 | Added : மார் 17, 2017 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வறுத்தெடுக்கும், நெட்டிசன்கள், தினகரன், கடுப்பு

அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை கலாய்த்து, இணையதளங்களில், 'மீம்ஸ், கமென்ட்'கள் வலம் வருவதால், தினகரன் தரப்பு கோபத்தில் உள்ளது. இதை எப்படி தடுப்பது என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில், சசி கலா அணியில், டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில், மதுசூதனன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். ஜெ., மரணம் குறித்த சர்ச்சை, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்தது, பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது போன்ற காரணங்களால், பொதுமக்கள் மத்தியில், சசிகலா தரப்பினர் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில், 'சசிகலா அமர நினைத்த முதல்வர் பதவியில், பழனிசாமியை நீக்கிவிட்டு, டி.டி.வி.தினகரன் அமர ஆசைப்படுகிறார். இதனால் தான், அவர் வேட்பாளாராக போட்டியிடுகிறார்' என, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், தினகரனை கலாய்த்து, ஏராளமான மீம்ஸ் மற்றும் கமென்ட்கள் உலா வருகின்றன.

இதுகுறித்து சசிகலா தரப்பினர் கூறுகையில், 'இது குறித்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். ஆனால், அந்த புகாரை கலாய்த்தும், மீம்ஸ் அதிகம் வரும் என்பதால், அமைதி காத்து வருகிறோம். இதை சமாளிக்க, டி.டி.வி.தினகரனை பாராட்டும் வகையில், மீம்ஸ் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
17-மார்-201722:39:37 IST Report Abuse
K.Sugavanam புகைபோட்டு விரட்டி அடிங்க..
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
17-மார்-201718:33:01 IST Report Abuse
Arasan மீம்ஸ் ஏ கலாய்க்க தான் அதுவும் இவர்கள் பாராட்ட மீம்ஸ் தயாரிக்கப்போகிறார்களாம்..எப்புடி,, ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு பின் தனது கடின உழைப்பால் (அக அக அக அக அக) ஸ்ட்ரெயிட் ஆ,,,, து (து து து து..) பொ செ ஆனதையா??
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மார்-201717:59:54 IST Report Abuse
Endrum Indian ஆர்.கே.நகரில் 2 .62 லட்சம் ஓட்டு. அதில் 65 % பேர் தான் வோட்டு போடுவார்கள் அப்படியென்றால் 1 .703 லட்சம் எண்ணிக்கை அதில் 50 ,000 ஓட்டு வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார் என்று 1 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று ஜெயா டி வி யில் ஒரே கொசு தொல்லை தாங்க முடியவில்லை. 1 .703 லட்சம் ஓட்டில் மது சூதனனுக்கு 70 ,000 , தினகரனுக்கு 40 ,000 , தி.மு.க வீக் வேட்பாளர் 30 ,000 , தீபா - 28 ,000 , பா.ஜா.க. 2 ,300 கிடைக்கும் (சும்மா மனசிலே தோணிச்சு எழுதிப்புட்டேன்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X