அஜந்தினியின் அழகு ஒவியங்கள்...| Dinamalar

அஜந்தினியின் அழகு ஒவியங்கள்...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


அஜந்தினியின் அழகு ஒவியங்கள்...

முகநுாலில் எழுதுபவர்கள்,ஒவியம் வரைபவர்கள்,புகைப்படம் பதிவிடுபவர்கள் என்று பலரகத்தினர் உண்டு.இந்த கலைஞர்களின் கலைகளை படைப்புகளை பார்த்து ரசித்து பாராட்டும் ரகத்தினர் அதில் தனிவகை.

அத்தகைய ரசிகமணி வகையைச் சேர்ந்த நண்பர் கரூர் சம்பத், ஒருவரின் முகநுால் ஒவியத்தை பாராட்டி என் பார்வைக்கு கொண்டுவந்தார்.

நானும் அந்த படங்களை பார்த்தேன் அருமையாக இருந்தது

அவர் பெயர் அஜந்தினி

சென்னை ஆதம்பாக்கத்தில் இருப்பவர்.

இயற்கை,இசை,புகைப்படம் மற்றும் ஒவியங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.

தனது பள்ளிக்காலத்தில் ஒவியம் வரைய ஆரம்பித்தார், பலரது பாராட்டு காரணமாக பென்சில் ஷேடிங்,வாட்டர் கலர் என்று ஒவியத்தின் சகல பரிணாமத்திலும் இவரது கவனம் சென்றது.

பிறகு திருமணம் குடும்பம் குழந்தைகள் வளர்ப்பு என்று கவனம் வேறு திசையில் திரும்பியது.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு இப்போது கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைக்கவே மீண்டும் ஒவியத்தை கையிலெடுத்தார்.

இவர் வரைந்த ஒவியங்களுக்கு இவர்களது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர்கள்.கணவரும்,மகனும் மகளும் பார்த்து பெரிதும் பாராட்டி அடுத்து என்ன? என்று ஆர்வமாய் கேட்பர், இவர்களைப் போலவே இவரது ஒவியங்களை பாராட்டி தொடர்ந்து ஒவியம் வரைவதில் ஊக்கப்படுத்துபவர்கள் மகேஷ் மற்றும் சம்பத் ஆகியோர்.

அஜந்தினியின் ஸ்பெஷாலிட்டி தான் பார்க்கும் புகைப்படத்தினை ஆழமாக மனதில் வாங்கிக்கொண்டு அதை கறுப்பு வெள்ளை அல்லது வண்ணத்தில் மெருகூட்டி வெளிப்படுத்துவதுதான்.

இவர் தன் ஒவியங்களுக்கு சினிமா பாடல்களில் இடம் பெறும் தரமான இலக்கியத்தரம் வாய்ந்த வரிகளை பயன்படுத்துவதும்,யாருடைய புகைப்படம் என்பதை நன்றியுடன் குறிப்பிடுவதும் இன்னும் கூடுதல் சிறப்பு.

அந்த வரிகளோடு இவரது ஒவியங்களை பார்க்கும் போது அந்த ஒவியங்கள் ஏற்ப்படுத்தும் மகிழ்ச்சியே தனிதான்.அந்த மகிழ்ச்சியை நீங்களும் அனுபவிக்க அவரது முகநுால் பாருங்கள் முகவரி: https://www.facebook.com/ajanthne.jayebal ஒவியங்கள் குறித்த உங்களது விமர்சனத்திற்கு:ajanthnejayebal@yahoo.com

---எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.com

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Ramanathan - Chennai,இந்தியா
01-மே-201708:39:35 IST Report Abuse
Balakrishnan Ramanathan s://www.facebook.com/ajanthne.jayebal?fref=nf அவரது முகநூல் முகவரி என்று நினைக்கிறேன். அன்னாரது படைப்புகள் அற்புதம் - குறிப்பாக யானை, நாய், . . . போன்றன. பார்த்து ரசியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Narayanasami Thirumeni - Mannargudi,இந்தியா
01-மே-201708:21:00 IST Report Abuse
Narayanasami Thirumeni அருமையான படைப்பு. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
25-ஏப்-201716:16:57 IST Report Abuse
நரி லேசாக தெரியும் முகத்தை பின்பக்கமாக இருந்து உற்று நோக்கினால் கண்ணாடி அணிந்த ஒரு முதியவரின் முகம் போலிருக்கிறது ஆனால் உடம்பு பருவ மங்கையின் உடல்வாகு ... இது அழகு ஓவியம் அல்ல ..ஆபாச ஓவியம் ...அவருடைய திறமையை பாராட்டுகிறேன் ...அழகு ஓவியம் என்ற தலைப்பிற்கு ஏற்ற ஓவியம் இது அல்ல ..அதுவும் அஜந்தினியின் அழகு ஓவியம் என்று பெயரோடு போட்டு இருக்கிறீர்கள் ..... தலைப்பை மாற்றுங்கள் இல்லையென்றால் ஓவியத்தை மாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
06-ஏப்-201712:45:57 IST Report Abuse
Syed Syed அற்புதமான ஓவியங்கள். பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
17-மார்-201716:41:49 IST Report Abuse
Sampathkumar Sampath என்னை பொறுத்தவரை திறமைகள் எங்கிருந்தாலும் பாராட்டப்படவேண்டும். ஊக்குவிக்கப்படவேண்டும். நாம் செய்யும் நற்காரியங்கள் நம் மனித குலத்திற்கு நன்மை பயக்குமேயானால் அதன் மூலம் என் ஆன்மாவிற்கு ஏற்படும் திருப்தி உணர்ந்து நான் மகிழ்கிறேன் என்பதே உண்மை. மேலும் திரு. முருகராஜ் எனும் ஒரு நல்ல மனிதர் இருக்கும்வரை இவர் போன்ற கலைஞர்களும், அனைவருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. நான் இதில் ஒரு சிறு துரும்பே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.