தேர்தல் செலவு ரூ.5,500 கோடி; உ.பி.,யில் கட்சிகள் தாராளம் | தேர்தல் செலவு ரூ.5,500 கோடி; உ.பி.,யில் கட்சிகள் தாராளம் Dinamalar
பதிவு செய்த நாள் :
தேர்தல் செலவு ரூ.5,500 கோடி
உ.பி.,யில் கட்சிகள் தாராளம்

புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒட்டுமொத்த மாக, 5,500 கோடி ரூபாய் செலவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 தேர்தல் செலவு, ரூ.5,500 கோடி, உ.பி., கட்சிகள், தாராளம்

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான, உ.பி.,யில், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பா.ஜ., 312இடங்களில் வெற்றி பெற்றது; கூட்டணி கட்சிகள், 12 இடங்களை பிடித்தன. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான,

சமாஜ்வாதி, 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; அதன் கூட்டணி கட்சியான, காங்., ஏழு இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ், 19
இடங்களை பிடித்தது.

இந்நிலையில், இந்த தேர்த லில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக செய்துள்ள செலவு பற்றி, சி.எம்.எஸ்., என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து, தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:


சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், இது வரை இல்லாத அளவு, அரசியல் கட்சிகள் பெரும் தொகையை செலவு செய்துள்ளன. ஒரு வேட்பாளர், 25 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது; ஆனால், கோடிக்கணக் கான ரூபாயை செலவு செய்துள்ளனர்.

Advertisement


பிரசாரம், பொதுக்கூட்டம், வாகன பேரணி, விளம் பரங்கள் என, பலவிதங்களில் செலவு செய்துள்ளனர். இதில், டிஜிட்டல் வேன், 'டிவி' சேனல்களில் விளம்பரங்கள்என, நவீன முறை பிரசாரத்திற்கு, 900 கோடி ரூபாய் வரை செலவிட்டு உள்ளனர்.

பணம் கொடுத்து ஓட்டு பெறுவதற்காக, வாக்காளர் களுக்கு கொடுக்கப்பட்ட தொகை, 1,000 கோடி ரூபாய்; மொத்த வாக்காளர்களில், 55 சதவீதம் பேர், நேரடியாக அல்லது மற்றவர்கள் மூலமாகவோ, ஓட்டுக்காக பணம் வாங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக, ரூ.5,500 கோடி அளவிற்கு, இத் தேர்தலில் செலவு செய்யப்பட்டு உள்ளது; ஆனால், உ.பி.,யில் அரசியல் கட்சிகள் செலவு கணக்கு காட்டியுள்ள தொகை, வெறும், 200 கோடி ரூபாய் மட்டுமே.

உ.பி.,யில் ஒரு வேட்பாளருக்கு தலா, 750 ரூபாய் என்ற அளவில், அரசியல் கட்சிகள் செலவு செய்துள்ளன; இந்த தொகை, இந்தியா விலேயே மிக அதிகம். இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
18-மார்-201715:32:58 IST Report Abuse

Sukumaran Sankaran Nairஇம்மாதிரியான கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது தான் உண்மை என்ற தீப்பொறி முன் வந்து இந்த பித்தலாட்ட ,சேற்று மண்ணில் ஊறிய மட்டைகளை அடையாளங் காண முடியும் பழையதான தேர்தல் அமைப்பு சட்டங்கள் இக்காலத்து நடைமுறைக்கு முற்றும் உதவாது என்பது தெள்ளத்தெரிகிறது. கருத்தொற்றுமை நம்மிடையே தோன்றுமானால், நல்ல தலைவர்களைக கொண்ட அரசாங்கம் அமைய மக்கள் சக்தியே அதற்கு வழிவகுக்கும்.நாம் தான் அந்த மக்கள், நாம் தான் அந்த அரசாங்கம். அமைந்ததுடன்,அதற்கு விசுவாசமாகவும் நடந்து கொள்ளவேண்டும்.

Rate this:
venkarachalamganesan - coimbatore,இந்தியா
18-மார்-201711:37:59 IST Report Abuse

venkarachalamganesanஅதெப்பிடித்தேங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு பணம் வருமானவரி காட்டாமல் கிடைக்கிறது

Rate this:
Thamizhan - Pondy,இந்தியா
18-மார்-201710:37:35 IST Report Abuse

Thamizhanஇந்த வேலை செய்யறதுக்கு கடினமா ஒழைக்குறோம் , வேகமா செயல்படுறோம் , அதிரடி புயல் , செயல் புயல்.... அது , இதுன்னு பீடிகை வேற . இதுக்கு பேரு வெற்றி இல்ல, இது வெட்கம்கெட்டத்தனம் .

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-மார்-201709:59:40 IST Report Abuse

Srinivasan Kannaiyaசட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்த பின்னும் தேர்தல் கமிசன் சும்மா இருப்பது ஏன்... தேர்தல் கமிஷன் விசுவாசத்திற்கு வாலை ஆட்டினாள் எப்பிடி... ?

Rate this:
Thamizhan - Pondy,இந்தியா
18-மார்-201709:59:35 IST Report Abuse

Thamizhanஉத்தமர்கள் உ .பி யில் எப்படி வென்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டதே . இது நிச்சயம் நேர்மையாக வந்த பணமாக இருக்க முடியாது . ஊழலை ஒழித்து விட்டோம் , கருப்பு பணத்தை கிழித்து விட்டோம் என்று வாய் கிழிய பேசியவர்கள் எங்கே ? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேர்தல் கமிஷன் ஏன் இதனை தடுக்கவில்லை ?

Rate this:
jay - toronto,கனடா
18-மார்-201713:09:45 IST Report Abuse

jayஉமது பெயரை போடாமல் ,, பொய் பெயரை போட்டு நீதி நேர்மை என்று பேச்சு ,,...

Rate this:
Guru - R K Nagar,இந்தியா
18-மார்-201709:42:16 IST Report Abuse

Guruஓ இப்படித்தான் ஜெயிச்சானா

Rate this:
Thamizhan - Pondy,இந்தியா
18-மார்-201707:58:50 IST Report Abuse

Thamizhanபூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது ......வாழ்க பண நாயகம்.எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவாகி விட்டது.இதில் எந்த கட்சி எவ்வளவு செலவு செய்தது என்ற விவரமும் வெளியிட்டிருந்தால் ரொம்ப தெளிவாக இருந்திருக்கும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201707:45:45 IST Report Abuse

Kasimani Baskaranஇப்படி பலர் புதிதாக முளைத்து கணக்கு என்று ஏதாவது ஒன்றை எழுதி வெளியிட்டு வருகிறார்கள்... காசு வாங்கியவர்களையும் காசு கொடுத்தவர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்...

Rate this:
Thamizhan - Pondy,இந்தியா
18-மார்-201712:11:58 IST Report Abuse

Thamizhanநீதி , தேர்தல் கமிஷன் எல்லாம் உத்தமர்கள் கையில இல்ல இருக்குது ?...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-மார்-201706:49:12 IST Report Abuse

தங்கை ராஜாவெற்றி பெற்றவர்கள் தான் சொல்ல வேண்டும், இது கள்ள பணமா கருப்பு பணமா என்று. மதிப்பிழப்பு செய்யப்படட பின் பணமெல்லாம் இப்படி தண்ணீராக ஓடியது எப்படியென்பது மோசடிக்கே வெளிச்சம்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement