தீபா கணவர் மாதவன் காமெடி பேட்டி | தீபா கணவர் மாதவன் காமெடி பேட்டி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தீபா கணவர் மாதவன் காமெடி பேட்டி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்று தனியாக பேரவைத் துவங்கி இருக்க, அவரது கணவர் மாதவன், திடீரென, கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

 தீபா கணவர், மாதவன், காமெடி, பேட்டி

இன்று மாலை, சென்னை, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து வணங்கிய பின், அவர், விரைவில் தனிக்கட்சி துவங்கப்

போவதாக அறிவித்திருப்பது, அரசியலில் காமெடியாகப் பார்க்கப்படுகிறது.

அவர் அளித்த பேட்டி:


தீபாவும் நானும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம். அங்கேயேதான் வாழ்வோம். அவர், தீபா பேரவை என்ற தனி அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தீபா பேரவையில், சில தீய சக்திகள் புகுந்து, பேரவையை வழி நடத்துகின்றனர். அதை தீபாவிடம் தெரிவித் தேன். அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், தீபா வீட்டில் திரண்ட ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், தனி இயக்கம் தொடங்க வலியுறுத்தினர். அதனால், விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போகிறேன். இந்த கட்சிக்கும், தீபாவின்

Advertisement

பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது வேறு; இது வேறு.

தீபா பேரவையில் இருக்கும் தீய சக்திகள் குறித்து நேரம் வரும்போது அறிவிப்பேன். எனக்குத் தொடர்ந்து தீய சக்திகளிடம் இருந்து, மிரட்டல் கால்கள் வருகின்றன. அதைப் பற்றியெல்லாம் நான் பயப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.

எனது கட்சி சார்பில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சி தொண்டர்களுடன் விவாதித்து முடிவெடுப் பேன். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங் கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டும், ஒரு பக்கம் மனைவி பேரவையும்; இன்னொரு பக்கம் கணவர் தனிக் கட்சி நடத்தப் போவதாகவும் அறிவித்திருப்பது, அரசியல் காமெடியாகவே பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ஜெயாமாலன்,டெக்ஸாஸ்.இந்த கொசு தாங்கல ஆபீசர் சார் கொசு மருந்து அடிங்க ஆபீசர் சார்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-மார்-201718:38:14 IST Report Abuse

Balajiஜெ வின் உறவினர் என்ற அடையாளத்துடனும் அவர் என்னுடைய உறவினர் என்று கூறிக்கொண்டும் ஆதாயம் தேடவே முயற்சிக்கிறார்கள்........ இவர்களுக்கு கொள்கை என்று இது வரை எதுவும் கிடையாது.......... எப்படியாவது சினிமாவில் வருவது போல ஒரே பாடலில் ஆட்சியை பிடித்துவிடுவதும் போலவும் செல்வந்தராவது போலவும் நினைத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்.........

Rate this:
manoj -  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201718:18:43 IST Report Abuse

manojபைத்தியம் பிடுச்சு போச்சா......அவனவன் நினைச்சா கட்சி ஆரம்பிக்க போறோம்ன்னு சொல்லுறீங்க ........ கேன பசங்களா....போய் வேலை பார் அப்பு...........

Rate this:
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-மார்-201717:45:49 IST Report Abuse

SundarTime Pass comedy for short time.

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-மார்-201717:23:16 IST Report Abuse

CHANDRA GUPTHANபாவாடை பார்டிகளின் சொம்பு இவர் - அவர்கள் மதம் மாறிய மக்களிடம் சுருட்டிய 10 % பணம் கணக்கில் இல்லாத அளவு குவிந்துள்ளது . திருட்டு கணக்கும் காட்ட முடியாது இவரை கொம்பு சீவி விடுகிறார்கள் . - தீபா பேரவையில் இருக்கும் தீய சக்திகள் குறித்து நேரம் வரும்போது அறிவிப்பேன். எனக்குத் தொடர்ந்து தீய சக்திகளிடம் இருந்து, மிரட்டல் கால்கள் வருகின்றன. அதைப் பற்றியெல்லாம் நான் பயப்படவும் இல்லை கவலைப்படவும் இல்லை. (திருக்குவளை தீய சக்தியோ )

Rate this:
sudharshana - chennai,இந்தியா
18-மார்-201716:43:13 IST Report Abuse

sudharshanaஒன்னும் இல்ல தமிழ் நாட்டு அரசியலை அவவ்ளவு கேவலமா ஆக்கிட்டாங்க சசிகலாவும் அவங்க உறவுகளும்.. ஏதோ ஒரு கட்சி ஒரு எதிர் கட்சின்னு நியமமாக போய்க்கொண்டிருந்த தமிழ்நாட்டு அரசியலை சாக்கடையாக மாற்றிய புண்ணியம் பூரா பூரா சசிகலாவை சேரும்.. இப்போ என்னடானா ஆளாளுக்கு சொல்றதை பாத்தா தமிழ் மக்களை அறிவை , பண ஆசையை, பண தேவையை, சிந்திக்கும் திறனை எவ்வளவு கேவலமா ஒவ்வொருதத்தரும் எடை போடறாங்க ன்னு தெளிவா தெஇர்யறது. மக்களே .. இல்லை இல்லை நாங்க பணத்துக்கு அலையலை , சரியாய் கவனிச்சு ஒட்டு போடுவோம் னு நிரூபிக்கணும் செய்வீர்களா... செய்வீர்களா...

Rate this:
Rathinamoorthy - Palani,இந்தியா
18-மார்-201716:41:16 IST Report Abuse

Rathinamoorthyஏன்டா மங்குனிகளா எம்ஜிஆர் வாரிசே எடுபடாத போது, உங்களுக்கு எப்படிடா இந்த எண்ணம் வந்தது.

Rate this:
karthi - MADURAI,இந்தியா
18-மார்-201716:24:04 IST Report Abuse

karthiஉங்க வீட்ல சின்ன குழந்தை யாராச்சும் இருந்தால் அவர்களையும் ஒரு பேரவை தொடங்க சொல்லலாமே?

Rate this:
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
18-மார்-201715:53:16 IST Report Abuse

மூ. மோகன்தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகிவிட முடியாது மிஸ்டர் மாதவன் உங்களுக்கு புரிஞ்சா சரி

Rate this:
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
18-மார்-201715:29:47 IST Report Abuse

Chandrasekaran Balasubramaniamஇவ்வளவு நாட்களாக இவனுகள் எங்கே இருந்தனர்( தினகரன் உட்பட ). ஆர்.கே. நகர் மக்களுக்கும் இவனுகளுக்கும் என்ன தொடர்பு இருந்துள்ளதா?

Rate this:
மேலும் 106 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement