தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி' | தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி':அன்னிய செலாவணி மோசடி வழக்கு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி':
அன்னிய செலாவணி மோசடி வழக்கு

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினகரன், கோர்ட், கிடுக்கிப்பிடி, அன்னிய செலாவணி மோசடி, வழக்கு

வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்துவதற்கான கருவிகளை

வாடகைக்கு எடுக்கவும், இந்த பணத்தை பயன்படுத்தினர். இதில், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, சசிகலா மற்றும் தினகரன் மீது, அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது.

இந்த வழக்குகள், 1996 முதல், 2002 வரை தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து, இருவரையும், எழும்பூர் நீதிமன்றம்விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் இருந்து, சசிகலா மற்றும் தினகரனை, எழும்பூர் நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி, இருவருக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து, பிப்., 1 முதல், இந்த வழக்குகள், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. நேற்று இந்த வழக்குகள், மாஜிஸ்திரேட் மலர்மதி முன் விசாரணைக்கு வந்தன; அப்போது, தினகரன் ஆஜரானார். அவரது வழக்கறிஞர்கள்,'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, உத்தரவு பெற உள்ளோம். அதற்குள், இந்த வழக்குகளில், உத்தரவு பிறப்பிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்' என, வாதிட்டனர்.

Advertisement

இதையடுத்து, மாஜிஸ்திரேட் மலர்மதி பிறப்பித்த உத்தரவு:
அன்னிய செலாவணி வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும் என, சென்னை உயர் நீதி மன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள தாக கூறுகிறீர்கள். அந்த மேல் முறையீட்டு மனுவில், இந்த வழக்கை, கீழ் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என, உத்தரவு பெற வேண்டும்.

அப்படி உத்தரவு பெற்று, அதன் நகலை சமர்ப்பித்தால் மட்டுமே, இந்த நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நிறுத்தப்படும். இல்லை யெனில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணை தொடரும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-மார்-201718:37:35 IST Report Abuse

VenkiRK நகர் மக்கள் இவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு கட்சிக்கு ஓட்டு போடவேண்டும்

Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
18-மார்-201717:26:20 IST Report Abuse

Sambasivam Chinnakkannuதவறு செய்த இதுபோன்ற அரசியல்வாதிகள் ,பிரபலங்கள் , அதிகாரிகளின் ,,வழக்குகளை அதிகபட்சம் இரண்டு வருடங்களுக்குள் முடித்து தண்டனை வழங்கினால் தான் ,,மக்களும் நம்பிக்கை பெறுவார்கள் ,,தவறு செய்யவும் மற்றவர்கள் பயப்படுவார்கள் ,,,நடக்குமா ,,??????

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
18-மார்-201717:14:40 IST Report Abuse

Tamilselvanதிருட்டு பயலை முட்டிக்கு முட்டி தட்டி உடனே உள்ளே தள்ள வேண்டும். கிடுக்குப்பிடி எல்லாம் இந்த மாபியா கும்பலிடம் ஒன்றும் நடக்காது. ஊழல், கொள்ளை அடாவடித்தனம் இவற்றை மட்டும் மூலதனமாக கொண்டு பல லட்சம் கோடி கொள்ளை அடித்த மாபியா கும்பலில் உள்ள ஒருவர் கூட வெளியில் இருக்க அருகதை அற்றவர்கள். மாபியா கும்பலில் உள்ள அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறப்பு நீதி மன்றம் வைத்து விரைவில் இந்த கொள்ளைக்கார, கொலைகாரக் கும்பலுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மார்-201715:17:52 IST Report Abuse

Endrum Indianஉச்சி முதல் உள்ளங்கால் வரை கொடிய விஷம் என்னும் ஊழல் நிரம்பிய ஒரே குடும்பம் இந்த மன்னார் குடி மாபியா. இவர்களை மொசாம்பிக், நைஜீரிய போன்ற தேசங்களுக்கு நாடு கடத்தலாம்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-மார்-201713:54:51 IST Report Abuse

Balajiசதிகாரி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்களே...... நேர்மையாக விசாரித்து இவரை உள்ளே தள்ளி கலி திங்க வைக்க வேண்டும்...... இதற்கெல்லாம் பயந்து தான் எப்படியாவது அரசை கைப்பற்றி விட முயற்சிக்கிறது மன்னார் குடி மாபியா.........

Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
18-மார்-201710:45:48 IST Report Abuse

C.Jeyabalanதினகரன் ஒரு மாபெரும் கொள்ளைக்காரன். அவனிடம் குவிந்து கிடப்பது கொள்ளையடித்த பணங்கள்/சொத்துக்கள். நீதிபதிகளை விலைக்கு வாங்க முயற்சிப்பான். ஆர்.கே. நகரில் படு தோல்வியடைய வேண்டும்.

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
18-மார்-201712:24:03 IST Report Abuse

kavithakannanதினகரனுக்கு ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய்விடுவார்? அதிமுகவிற்கு சட்டத்தை வளைப்பது ஒன்றும் சொல்லி தெரியவேண்டாம் தலைமை முதல் தொண்டன்வரை பின்னி பெடல் எடுத்துவிடுவான். நீதிமன்றம் யாரை மிரட்டுகிறது. ஜுஜுபி கோர்ட் அம்மாவை நேருக்குநேர் சந்திக்கமுடியாத நீதிமன்றங்கள். சின்னம்மாவை சீண்டி சிறையில் தள்ளி வன்மத்தை காட்டி உள்ளது. அதை தவிடு பொடியாக்கி சின்னம்மா மீண்டு வர தான் அம்மா சமாதியில் சபதம் எடுத்து சிறை சென்றுள்ளார். சினம்கொண்ட சிறுத்தையின் அப்பழுக்கை நீக்க வீறுகொண்டு எழுந்துள்ள தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று கேஸை தவிடு பொடியாக்கி இந்த காவி அரசை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார். அதற்கு அம்மா மேல் பாசமும் அடிமையும் கொண்டுள்ள தமிழர்கள் ஒன்று கூடி தினகரன் தேர்தலில் வெற்றி பேரவைத்து அம்மாவின் ஆன்மாவை ஆட்சி செய்யவைக்க வேண்டும். இது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். தமிழர்கள் வாழ்க்கை இப்போ தினகரன் கையில் மட்டுமே உள்ளது அவர் வந்தால் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்படும்....

Rate this:
Joseph - COLOMBO,இலங்கை
22-மார்-201714:21:07 IST Report Abuse

Josephகவிதைக்கண்ணன் அவர்களே பகல் கனவு காணாதீர்கள்.தினகரன் தோல்வி உறுதி...

Rate this:
Joseph - COLOMBO,இலங்கை
22-மார்-201714:24:00 IST Report Abuse

Josephசசிகலா கும்பலை ஒழித்து கட்ட வேண்டும்'...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-மார்-201710:08:21 IST Report Abuse

Srinivasan Kannaiyaமாஜிஸ்திரேட் மலர்மதி அவர்களை சசி ஆதரவாளர்கள் பயம் காட்டவில்லையே... எதற்கும் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம்...

Rate this:
Madurai Alagusundaram - Doha,கத்தார்
18-மார்-201709:28:14 IST Report Abuse

Madurai Alagusundaramஎன்ன நிதிமன்றங்களோ? அபராதமும் தண்டனையும் கொடுத்தாச்சு, முதல பிடிச்சு உள்ள போடா வேண்டியதுதானே, அப்புறம் மேல்முறையீடு செய்யட்டும்.

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
18-மார்-201705:58:39 IST Report Abuse

Samy Chinnathambiஅமவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கே? எங்கயோ உதைக்குதே...........

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201705:42:52 IST Report Abuse

Kasimani Baskaranஉயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திரும்பவும் மனுவா? மனு மேல் மனு கொடுக்கும் முறையை நீதிமன்றம் அனுமதிப்பது அமலாக்கத்துறையை கேவலப்படுத்துவது போல... சில கோடிகளுக்கு எஸ்டேட் வாங்கினார்கள் என்பதே முரணான விஷயம்... அது ஒன்று போதும் இவர்களின் யோக்கியதையை நிரூபிக்க...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement