இரட்டை இலை எங்களுக்குத்தான்: ஓ.பி.எஸ்., நம்பிக்கை | இரட்டை இலை எங்களுக்குத்தான்: ஓ.பி.எஸ்., நம்பிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இரட்டை இலை எங்களுக்குத்தான்:
ஓ.பி.எஸ்., நம்பிக்கை

பெரியகுளம்:“அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி நடக்கும் எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் நிச்சயம் கிடைக்கும். ஆர்.கே.நகரில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி,” என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 இரட்டை இலை, எங்களுக்கு, ஓ.பி.எஸ்., நம்பிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் கூறியதாவது:


பொதுச்செயலாளரான ஜெ.,க்கு பிறகு, கட்சி யின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளா ளராகிய நான் உட்பட தலைமை நிர்வாகி களுக்கு மட்டுமே அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கை யில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழு,

லோக்சபா எம்.பி.,க்கள் தவிர கட்சியினர்தான் தேர்வு முறையில் ஒருவரை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். குடும்ப ஆட்சி நடக்கக் கூடாது என்பதில் ஜெ., உறுதியாக இருந்தார். தற்போது ஒரு குடும்பத்தினர் கட்சி, ஆட்சிநடத்துகின்றனர். இது ஜெ.,கொள்கைக்கு விரோதமானது.

இந்திய தேர்தல் கமிஷனிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளோம். மார்ச் 22ல் அ.தி.மு.க., விதிமுறைகளை அதனிடம் எடுத்து சொல்வோம். அ.தி.மு.க., எங்கள் கட்சி. எனவே இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் நாங்கள் பெறுவோம். புதிய கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

ஜெ., 2011ல் தினகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து வெளியேற்றி னார். ஜெ., உயிரோடு இருந்தவரை தினகரன் கட்சிக்கு வரவில்லை. பொதுவாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் கள் மீண்டும் கட்சி யில் இணைந்தால், 5 ஆண்டுகள் எந்த பதவிக்கும், தேர்தலிலும் போட்டியிடக் கூடாது.

ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடு வது கட்சிக்கு

Advertisement

விரோதமான செயல். அத்தொகுதியில் ஜெ., கொள்கை, கோட்பாடு, நியாயத்தை முன்னி றுத்தி தேர்தல் வியூகம்அமைத்து, மக்களை சந்தித்து வெற்றி பெறுவது உறுதி. எம்.எல்.ஏ.,க் கள் மக்களை எவ்வாறு சந்தித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையி னர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. நீர் உற்பத்தி செய்யும் மாநிலம், நீர் பெறும் மாநிலத்திற்கு தண்ணீர் மறுக்கும் பட்சத்தில், ஜெ., உச்சநீதி மன்றத்தை அணுகி நீர் கிடைப்பதற்கு வழி வகுப்பார். தற்போது அந்த நிலை பின்பற்றப் படவில்லை, என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
19-மார்-201721:20:38 IST Report Abuse

மு. தணிகாசலம் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.

Rate this:
Rajaguruprasath - Atlanta,யூ.எஸ்.ஏ
19-மார்-201720:23:41 IST Report Abuse

Rajaguruprasathஊழல் பேர்வழிகள் வேண்டாம். புதிய சமுதாயம் மலர்ந்து விட்டது. இரட்டை இலை காணாமல் போய் விடும். இதுவே சத்தியம்.

Rate this:
19-மார்-201717:54:27 IST Report Abuse

karunanitjisekar reddy ambal. ram Mohan reddy ambal bro

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
19-மார்-201717:19:37 IST Report Abuse

மு. தணிகாசலம் பன்னீர், கவனமாகவும் சரியான நேரத்தில் மிகச்சரியாகவும் காய் நகர்த்தி வருகிறார். காரணம்: அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பன்னீர் அணியில் இருக்கிறார்கள்.

Rate this:
கண்ணன் - tirnelveli,இந்தியா
19-மார்-201714:35:07 IST Report Abuse

கண்ணன் பன்னீர் தான் டாப்பு

Rate this:
கண்ணன் - tirnelveli,இந்தியா
19-மார்-201714:32:39 IST Report Abuse

கண்ணன் பன்னீர் தான் டாப்பு, மத்ததெல்லாம் டூப்பு

Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
19-மார்-201713:58:39 IST Report Abuse

GUNAVENDHANதமிழகத்தில் எக்காலத்திலும் பிஜேபி காலூன்றமுடியாத நிலைமை தான் இன்றளவும் உள்ளது, இதை தெளிவாக புரிந்தும் கூட பிஜேபியின் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கூட, தங்கள் சொல்பேச்சை தட்டாமல் கேட்டு நடக்கக்கூடிய ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டால் போதும் என்று கருதுகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது .

Rate this:
Jayadev - CHENNAI,இந்தியா
19-மார்-201713:11:12 IST Report Abuse

Jayadevகாட்டுப்பாக்கம் போனா தேக்கு மார இலைகள் பெரிது பெரிதாக கிடைக்கும்

Rate this:
skandh - chennai,இந்தியா
19-மார்-201712:16:10 IST Report Abuse

skandhஎப்படி எப்படி இரட்டை இலை இவருக்கு கிடைக்க என்ன லாஜிக் இருக்கிறது? கட்டாயமாக இரட்டை இலை மெஜாரிட்டி எம் பிக்கள், எம் எல் ஏக்கள் இருக்கும் அதிமுக வுக்காவுக்கு தான் இரட்டை இலை

Rate this:
Balaji - Khaithan,குவைத்
19-மார்-201712:01:38 IST Report Abuse

Balajiமக்களிடம் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மைதான்...... இருந்தாலும் ஜெ மரணத்தை மட்டும் வைத்தே இதுவரை அரசியல் செய்துகொண்டு இருக்கும் இவரை மக்கள் எவ்வாறு ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை...... மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முதலில் முக்கியத்துவமளித்து அரசியல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்...... அப்போது தான் மக்களுக்கு இவரின் மீது நம்பிக்கை ஏற்படும்....... ஆனால் தற்போதைய இடைத்தேர்தலில் இவருக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்....... சதிகாரி அணியில் இருப்பவர்களுக்கு இது விரைவில் புரியவரும்.........

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement