கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன | கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன

பண விவகாரம் காரணமாகவே, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன

ஜெ., மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கினார். அதற்கு துணையாக இருந்த, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், திடீரென புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். இது, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றி, தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப்

போவதாக அறிவித்தார். அதன்பின் பன்னீர்செல்வத்தை, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தனித்து இயங்கப் போவதாக வும், தீபா தெரிவித்தார்.பேரவை துவங்குவதற்காக, உழைத்தவர்களுக்கு, பதவி தரவில்லைஎன, குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார்.

அவர், தன் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்ததால், அவரை ஆதரித்தவர்கள், பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். இந்தசூழலில், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பேரவையில் இருந்து விலகுவதாகவும், தனிக்கட்சி துவங்கப் போவதாகவும், நேற்று முன்தினம் அறிவித்தார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு, பண விவகாரம் தான் காரணம்.

பேரவையில் பதவி பெறுவதற்காக, சிலர் மாதவனி டம் பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்க, தீபா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மாதவன் பின்னணியில், தினகரன் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை,

Advertisement

மாதவன் மறுத்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாரோ இயக்குகிறாங்க: ''என் கணவர் தனி கட்சி துவக்குவேன் என அறிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை யாரோ சிலர் இயக்குகின்றனர்,'' என, தீபா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:

பேரவை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடுவேன் என அறிவித்ததால், வதந்திகளை பரப்பி வருகின்றனர். பேரவையை கலைத்து விட்டதாக, வதந்திகளை பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால், சசிகலா குடும்பம் உள்ளது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. பேரவையில், அ.தி.மு.க., தொண்டர்கள் இணைந்து விடுவர் என்ற அச்சத்தில், இவ்வாறு செயல்படுகின்றனர்.

அரசியலை விட்டு நான் ஓட வேண்டும் என்பதற்காக, பல்வேறு வடிவங்களில் தொல்லைகளை தருகின்றனர். ஆர்.கே.நகரில், எந்த சின்னம் கொடுத்தாலும், அதில் போட்டி யிடுவேன். கணவன் - மனைவி என்ற உறவில், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை. இவ்வாறு தீபா தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
19-மார்-201722:43:59 IST Report Abuse

adalarasanநாம ஆடுவதும் பாடுவதும், காசுக்கு" அலிபாபா & 40 திருடர்கள், சினிமா பாட்டு ஞாபகம் வருதே

Rate this:
vidhuran - dubai,இந்தியா
19-மார்-201722:11:30 IST Report Abuse

vidhuranஅதெல்லாம் இருக்காது கட்சி ஆரம்பிக்கிறேன் னு சொல்லி பயமுறுத்தியாவது இந்த தீபாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் எண்ணம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்தம்மாவுக்கு என் இந்த கஷ்டம்.இருக்கிற பணத்தையெல்லாம் தேர்தலில் அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் எண்ணமா?

Rate this:
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
19-மார்-201719:25:20 IST Report Abuse

Karuppu Samyரெண்டும் விரட்டப்படவேண்டிய கும்பல்...

Rate this:
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
19-மார்-201718:18:20 IST Report Abuse

Vijay D.Ratnamஐயே இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அத்து உட்டுடுக்கா.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
19-மார்-201717:47:53 IST Report Abuse

Balajiஒழுங்காக இந்த தேர்தலில் OPS அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு அரசியலை கற்றுக்கொண்டு பிறகு ஜெ போல வருவதற்கு முயற்சிக்கலாம்...... ஜெ வின் உறவினர் என்பதனால் ஜெ போன்ற ஆளுமை வந்துவிடும் என்று அர்த்தமில்லை....... முதலில் அரசியலில் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது........

Rate this:
நரி - Chennai,இந்தியா
19-மார்-201721:55:15 IST Report Abuse

நரிபன்னீருக்கு எப்படி எல்லாம் ஆதரவு திரட்ட வேண்டியது இருக்கு ...உங்களுக்கு கேவலமாக தெரியவில்லையா...

Rate this:
MALAI ARASAN - TUTICORIN,இந்தியா
19-மார்-201715:52:13 IST Report Abuse

MALAI ARASANநிர்வாகிகளுடன், அம்மா சமாதியில் தீவிர ஆலோசனை செய்யங்கள் . TNPSC குரூப் 4 எக்ஸாம் எழுதுங்கள் . ஏதாவுது கிளார்க் வேலைக்கு முயற்சி செயயவும். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுங்கள். குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள் .

Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
19-மார்-201715:45:31 IST Report Abuse

Vaduvooraan முதல்ல குடும்ப சண்டையை தீர்த்து வைத்து விட்டு அப்புறம் இடைத் தேர்தல் பத்தி பேசலாமே மேடம்?

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
19-மார்-201714:29:27 IST Report Abuse

A. Sivakumar.//அவரை யாரோ சிலர் இயக்குகின்றனர்// ஆக மொத்தம், ஒரு மெகா சீரியலை இந்த தம்பதியினர் நமக்கு நடித்துக் காட்டுகிறார்கள்

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
19-மார்-201714:27:27 IST Report Abuse

A. Sivakumar.அத்தையை வேலைக்காரி வகையறா கடத்திப் போய் அரசியல் செஞ்ச மாதிரி, மருமகளை டிரைவர் வகையறா கடத்திப் போய் அரசியல் செய்யற மாதிரிதான் ஆகப் போகுது. அதிமுக நலன், தமிழக நலன், வெங்காய நலன் என்றெல்லாம் சொல்லிக்கிட்டு, கணவரும் மனைவியுமாக சேர்ந்து ரொம்ப சாமர்த்தியமாகக் கல்லாக் கட்டறாங்களோன்னு ஒரு சின்ன ஐயப்பாடு.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
19-மார்-201712:35:06 IST Report Abuse

Paranthamanஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது.தினகரன் ஒரு அக்டோபஸ். ஆமை அந்த ஆள் கால் வைக்கும் இடம் நாசம்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement