தமிழகத்துக்கு அமித் ஷா குறி | தமிழகத்துக்கு அமித் ஷா குறி Dinamalar
பதிவு செய்த நாள் :
காங்கிரஸ் இல்லாத மாநிலங்கள்
தமிழகத்துக்கு அமித் ஷா குறி

எல்லா மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சியை செயலிழக்க செய்யும் வகையில், அதிரடி அரசியல் திட்டத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வகுத்துள்ளார்.

 காங்கிரஸ் இல்லாத மாநிலங்கள் தமிழகத்துக்கு அமித் ஷா குறி

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவில், எந்த மாநிலத்திலும், காங்கிரஸ்,

ஆட்சியில் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க, அமித் ஷா, பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான, ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, கேரளா மற்றும் அசாமில், காங்., 2016ல் ஆட்சியை இழந்தது. சில மாநிலங்களில் மட்டும், அக்கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த, பா.ஜ., திட்டமிடுகிறது. அதற்காக, பா.ஜ.,வுக்கு பலம் இல்லாத மாநிலங்களில், கட்சியை பலப்படுத்த, அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், 100 தொகுதிகளை கூடுதலாக வெல்ல, அவர் வியூகம் வகுத்துள்ளார்.

Advertisement

அதற்கேற்ப, அந்தந்த மாநிலங்களில், தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளார். இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murasu - madurai,இந்தியா
19-மார்-201722:19:57 IST Report Abuse

murasuகாவி காலிகள் நாட்டை குட்டிசுவராக்கும் கருங்காலிகள் .

Rate this:
Mayavi - blr,இந்தியா
19-மார்-201721:46:00 IST Report Abuse

Mayaviசீக்கிரம் வாங்க சாமி, எப்படியாவது இந்த திராவிட கட்சி மற்றும் லெட்டர் பேட் காட்சிகளை ஒழிச்சு ஒரு நல்ல ஆட்சி ஏற்பட நீங்க தான் சாமி அருள் புரியனும்.

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
19-மார்-201719:17:29 IST Report Abuse

Solvathellam Unmaiகாவிகள் இல்லாத ஆட்சிக்கே எங்கள் ஆதரவு....

Rate this:
Gopal.V. - bangalore,இந்தியா
19-மார்-201718:55:42 IST Report Abuse

Gopal.V.நன்றி உங்களின் உதவிக்கு...

Rate this:
Gopal.V. - bangalore,இந்தியா
19-மார்-201718:54:35 IST Report Abuse

Gopal.V.Ennathaan thalaikeezhaaga nindraalum thamizhagaththil Bharathiya Janatha Paarty varave mudiyaathu.. Kaaranam Thaanaagavum theriyaathu.. Sonnaalum puriyaathu enbaargale athupolaththaan..

Rate this:
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
19-மார்-201718:09:36 IST Report Abuse

Sukumar Talpadyபா ஜ க ஒன்றும் தமிழ் நாட்டிற்கு புதியதல்ல . அதன் முன்னோடியான ஜனசங் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை நகராட்சிக்கு நடந்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெற்றது . அதன் துணையோடு தான் மதுரை முத்து அவர்கள் மதுரை மேயர் (தி மு க ) ஆனார் . அப்பொழுது ஜனசங்கத்தின் உதவியை நாட அவர்களுக்கு தயக்கம் இருக்க வில்லை . மான , ரோஷமும் இருக்க வில்லை . வாஜ்பாய் தலைமையில் அமைச்சர்களாக தி மு கட்சியினர் இருந்த பொழுது அக்கட்சிக்கு தன்மானம் இருக்க வில்லை . திராவிட பரம்பரையில் வந்த தலைவர்களுக்கு அது ஒரு பெரிய தவறாக தென்படவில்லை . பார்ப்பன எதிர்ப்பு , கடவுள் எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி , மக்களை ஏமாற்றினார்கள் . ஆனால் தன் தலைவருக்கு ஆபத்து வந்த பொழுது ஒரு தி மு க அமைச்சர் கடவுளை வேண்டி கொண்டு தீ மிதித்தார் . எல்லாம் ஆன பிறகு அதன் தலைவர் அதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லை என்றார் . இன்னொரு திராவிட கட்சியோ ஒரு பார்ப்பன பெண்மணியை தலைவியாக வைத்து கொண்டு இத்தனை வருடங்கள் ஆட்டம் போட்டது . இன்னும் எத்தனை காலங்களுக்கு திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்களோ ?

Rate this:
Thamizhan - Tamizhnadu,இந்தியா
19-மார்-201717:55:28 IST Report Abuse

Thamizhanதமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன ,இனிமேல் இங்கே வளர்வது ஏனைய மாநில கட்சிகளாகவே இருக்கும் குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் ,நாம் தமிழர் சீமான் இந்த மூவரும் தான் இனி தமிழக அரசியலை நிர்ணயிப்பார்கள் .திமுக,அதிமுக கணக்கு முடிக்கப்பட வேண்டும் ,அதோடு சேர்த்து காங்கிரஸ் மற்றும் இதர தேசிய கட்சிகளை தமிழகத்திலிருந்து ஒழித்து கட்டவேண்டும் .இது காலத்தின் கட்டாயம் .

Rate this:
MALAI ARASAN - TUTICORIN,இந்தியா
19-மார்-201716:18:03 IST Report Abuse

MALAI ARASANதமிழ் நாட்டில் , பிஜேபி க்கு ஒரு சான்சு கொடுத்து பார்க்கலாம் .

Rate this:
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-மார்-201717:08:32 IST Report Abuse

வெற்றி வேந்தன் நிச்சயமாக , ஆனால் தமிழிசை அவர்களை வேறு பதவிக்கு மாற்றி ஆளுமை உள்ள தலைவரை உருவாக்க வேண்டும். அதற்கு முன் இலவசத்தில் ஊறிப்போய் உள்ள தமிழர்களை, தனி மனித துதி பாடும் மன நிலையை மாற்ற வேண்டும். கடினம் தான் ஆனால் முயன்றால் முடியும்....

Rate this:
Kabilan Moorthi - Coimbatore,இந்தியா
19-மார்-201723:29:12 IST Report Abuse

Kabilan Moorthiநீங்கள் சொல்வது சரி. வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்திர்கு எதிரான திட்டங்களை கைவிட வாய்ப்பு உள்ளது....

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
19-மார்-201714:56:22 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranதமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமையும் -அமித்ஷா தமிழகத்தில் மாபெரும் தலைவி , மனித வடிவில் நடமாடிய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 'நீங்கள் அகற்றிவிட்டீர்கள் ' அது போதாதென்று 'அவர் 'புகழுக்கும் ' பங்கம் செய்தீர்கள். . 'சிறு துரும்புக்கும் ' அஞ்சும் பன்னீர்செல்வம் என்ற பொம்மையை 'கீ 'கொடுத்து ஆட வைத்தாயிற்று அதிமுக என்ற மாபெரும்சக்தியை அழிக்க உங்கள் 'சக்தியை ' தீயசக்தியின் துணை கொண்டு ' இரட்டை இலை சின்னத்தை'முடக்கி ' நீங்கள் தமிழகத்தை 'மறைமுகமாக ஆள முயற்சி செய்கிறீர்கள். இருக்கும் ஊடகங்களையெல்லாம் , திரை பிரபலங்களை எல்லாம் உங்கள் வசம் செய்து ' எதெற்கும் பணம் பெற்று கையெழுத்திட்டு உங்களிடம் மண்டி யிட்டு பிழைப்பு நடத்தும் ஸ்டாலின்- பன்னீர் செல்வம் போன்றோரை 'பொம்மை 'முதல்வர் ஆக்கி தமிழக அரசை பின்புற ஆட்சி நடத்த நினைக்கும் உங்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . தமிழக நலனுக்கெதிராக செயல் படும் உங்களை தமிழக மக்கள் ' வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்' என்று நினைத்தால் அது உங்களுக்கு 'வேதனையாகத்தான் முடியும் '

Rate this:
sekar - Chennai,இந்தியா
19-மார்-201715:16:46 IST Report Abuse

sekarகொடுமைடா, ஊழல் டாஸ்மாக் கிழவிக்கு இவ்வளவு ஒப்பாரி வேஸ்ட்டு...

Rate this:
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-மார்-201717:15:15 IST Report Abuse

வெற்றி வேந்தன் Rajamani Ksheeravarneswaran //// அடிமை தானத்தில் ஊறிப்போய் உள்ளவரின் கூக்குரல். ஆனால் சில நல்ல விஷயங்கள், மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது....

Rate this:
19-மார்-201718:27:13 IST Report Abuse

Prakashஏன்டா ஜெயலலிதா தெய்வம்னா, தெய்வத்த என்னனு சொல்வீங்க????...

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
19-மார்-201722:29:20 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஏழைகளுக்கு நன்மை செய்பவர், மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை தடுத்தாட்கொள்பவர் ,எப்போதும் மக்களின் நன்மைகளை பற்றி சிந்திப்பவர் ,மக்களின் விரோதிகளை ஒழிப்பவர் -இவர்களைத்தான் தெய்வம் என்று 'ஹிந்து''மதம் மட்டுமல்ல அனைத்து மதங்களும் சொல்கின்றன. தானாக வந்த காவிரி மேலாண்மை வாரியத்தை 'தடுத்து ' நிறுத்தியவரும் . கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை சிக்கலில் ஆக்கியவர்களும், அதை மீட்டு என்ன பயன்? என்று கேட்பவரும் , ஒரு சிறிய தீவு நம் மீனவர்களை சுட்டுக்கொள்வதும், காயப்படுத்துவதும், துன்புறுத்தி அவர்களின் படகுகளை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து அவர்களை வறுமையில் வாடசெய்வதும் தீயசக்தியின் /தீய சக்திகளின் வேலை .அதை 'தடுத்து 'அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது 'பராசக்தியின் 'வேலை. காவிரி நதி நீர் ஒப்பந்தந்தை காலாவதியாக விட்டுவிட்டு ,அதற்கென போட்ட வழக்கை 'சர்க்காரியா கமிஷன் 'விசாரணைக்கு பயந்து திரும்ப பெற்று கர்நாடகாவில் பல அணைகளை கட்டவைத்து 'காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தது தீயசக்தியின் வேலை .அந்த விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளை ,மத்திய அரசிடம் பலமுறை இறைஞ்சி கேட்டும், பெறமுடியாத நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அதை மீட்டெடுத்து ,உச்சநீதிமன்றம் உத்தரவின் மூலம் நமது உரிமையை நிலை நாட்டியது பராசக்தியின் வேலை. மீத்தேன் ,ஹைட்ரொ-கார்பன் ,கெயில் எரிவாயு பைப்புகளை விளை நிலத்தில் பதிப்பது போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டு வரவேற்பு கொடுப்பது தீயசக்தியின் வேலை .அந்த மக்கள் விரோத ,விளை நிலங்களை பாழாக்கும் திட்டங்களை நிறுத்தி விவசாயமக்களை மட்டுமின்றி ,சுற்றுப்புற சூழலை காப்பாற்றியது 'பராசக்தியின் 'வேலை. இப்படி தமிழக நலனுக்கெதிராக செயல் படும் தீயசக்தியின் சதிவேலைகளை முறியடித்து, தமிழக மக்களுக்கு ,குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு பல மக்கள் நல திட்டங்களை அளித்தவரை ' தெய்வம் என்று கூறாது வேறு எப்படி அழைப்பது ? , 'தன் மக்கள் ' தன் குடும்பம் ' என்று தமிழக மக்களுக்கு பல துரோகங்களை செய்து மெகா ஊழல் மூலம் பல லச்சம் கோடி சொத்து சேர்த்து ,' தன் குடும்ப உறுப்பினர்கள் மூலம் 'அடாவடி, அச்சுறுத்தல் ,அராஜகம் ,நில அபகரிப்பு ''எதிர்த்தவர்களை 'பரலோகம்' அனுப்புவது , தன் ஊழலுக்கு துணை நின்ற 'அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் ' சாதிக் பாட்சா ' சர்க்காரியா கமிஷனில் அப்ரூவர் காண்ட்ராக்டர் 'சத்தியநாராயணா 'போன்றோர் கதை முடித்து , கொலை கொள்ளை ,என்று 'அங்கம்மாள் காலனி' சம்பவம் போல் தமிழகம் முழுவதும் திமுக குடும்ப உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் மற்றும் அடியாட்கள் நடத்திய அராஜக திமுக வின் தீயசக்தி' ஆட்சியை அகற்றி 'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றிய ' அம்மாவை ' தெய்வம்' என்றால் அது மிகையாகாது .அம்மா உணவகத்தை, நம்ம கேன்டீன் ' என்று 'இப்போது கர்நாடக அரசு தனது பட்ஜெட் உரையில் சேர்த்தது , தற்பொழுது தமிழகம் வந்த தென் ஆப்பிரிக்கா குழு அம்மா உணவகத்தை பாராட்டியுள்ளது அரியானா மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி நாயாப்சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழு . தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுகிறது .இந்த திட்டத்தை அரியானா மாநிலத்தில் செயல்படுத்த உள்ளோம் 'என்று கூறியுள்ளார். இந்திய முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த திட்டத்தை வரவேற்று , பின்பற்றி வருகின்றனர். .நாம் எப்படிப்பட்ட தலைவரை இழந்திருக்கோம் ?ஏன் , எதற்காக இழந்திருக்கிறோம் ? என்று தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த மாநிலங்களில் காலூன்றி 'அந்த திட்டங்கள் எந்த வகையிலும் அந்த மக்களுக்கு பயன்படாது போயினும் , மத்திய அரசிற்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து ,மாநில அரசிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து ' நமது இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பெரும்பணம் சேர்க்கும் 'கார்பொரேட் மாபியா கும்பலிடமிருந்து தமிழகத்தை மீட்டவர் அம்மா . 2 ஜி , நிலக்கரி ஊழல் மட்டுமின்றி இது போன்று ,இதை விட அதிக அளவில் இந்த கார்பொரேட் கமபனிகளுடன் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து 'படிப்பறிவற்ற, ஏழை விவசாய நிலங்களை பாழடித்து ' பெருமளவில் சொத்து சேர்த்தவர்கள் திமுக குடும்பம் ,மற்றும் மத்திய காங்கிரஸ் -பிஜேபி அரசு.பல மாநிலங்களில் இவர்கள் இதை கடைப்பிடித்து வந்தாலும், தமிழகத்தின் காவல் தெய்வமாய் ,அரணாய் நின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற 'தீயசக்தி ' ஊழலின் ஊற்றுக்கண் கருணா போட்ட வழக்குகளை நீதிமன்றத்தை சந்தித்து வென்றவர் அம்மா ..தனது குரு என அத்வானியை 'இன்று இருக்குமிடம் தெரியாமல் ஒதுக்கி வைத்த ' சர்வாதிகாரி 'மோடி இந்த மாபியா கும்பலின் துணையுடன் பெங்களூரு சிறையில் அம்மாவை அடைத்து தமிழக மக்களின் 'காவல் தெய்வத்திற்கு பல சோதனைகள் .வேதனைகள் கொடுத்த்தனர். தமிழக நலனுக்காக போராடிய அவரது கோரிக்கைகள் நிறை வேறாது தடுத்து , தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை தர மறுத்து , செயல்பட்ட பிரதமர். மோடி யை அம்மாவின் உற்ற நண்பர் என்று பிஜேபியினர் சொல்வது வேடிக்கை. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க 'உறுதுணையாக' இருப்பதாக கூறி 5 முறை எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி ,மத்திய கேபினட் அமைச்சர்களை அப்பல்லோவில் அமர்த்தி, தினமும் அம்மாவின் உடல்நிலை பற்றி விசாரித்து வந்த பிரதமர், ' அம்மாவின் மரணத்தில் மர்மம் ' என்று எதிர்க்கட்சிகள் ,மற்றும் அவரது ஆசியுடன் அதிமுகவை பிளக்க துணை நிற்கும் பன்னீர்செல்வம் (அம்மா அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது 'முதல்வர் பொறுப்பு வகித்த அனைத்து துறைகளும் இவர் கைவசம் ) மற்றும் கமல ஹாசனின் மனைவி ? கவுதமி இரண்டுமுறை விசாரணை வேண்டும் 'என்று கடிதம் எழுதியும் மவுனம் காக்கும் காரணம் என்ன ? நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் அவர் கைவசம் உள்ள உளவுத்துறை 'நாட்டின் பெரும் தலைவர் தமிழகத்தின் முதல்வர் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருந்தால் வாளாவிருப்பது ஏன் ? சசிகலா அம்மாவை கொன்றார் ? என்று பன்னேர்செல்வம் கூறுவது உண்மையெனில் அதற்குரிய ஆதாரங்களை மக்களிடம், மீடியவிடம் கொடுக்க தயங்குவது ஏன் ? மார்ச் 20 (ஞாயிறு ) அன்று அம்மாவின் சிகிச்சை குறித்த வழக்கு விசாரணைக்கு இதுவரை மத்திய அரசு பதில் அளிக்க தயங்குவது எதனால் ? சசிகலாவிற்கு அப்பல்லோ மருத்துவமனை ,அஞ்சும் பணியுமென்றால் ,இந்திய பிரதமருக்கு அது பணியாதா ? அஞ்சாதா ? நான் மேற்கூறிய கார்பொரேட் மாபியா கும்பலுக்கு அப்பல்லோ பணியாதா ? அஞ்சாதா ? மேற்படி மாபியா கும்பல் அம்மாவை 'விண்ணுலகத்திற்கு 'அனுப்பியது பற்றாது என்று கருதி ,தன் சொந்தப்பணத்தில் அவர் வாங்கிய சொத்துக்களை , யாரிடமும் , எந்த திட்டத்திலோ லஞ்சம் பெற்றதாக ஆதாரம் இல்லாத நிலையில், 'கலைஞர் டி.வி.க்கு 214 கோடி வந்தது போல் , சன் நெட்ஒர்க்கிற்கு 743 கோடி வந்தது போல் எந்த வித ஆதாரமும் இன்றி 'எடுத்த எடுப்பில் ' தள்ளுபடி செய்யப்படவேண்டிய வழக்கு 'என்று மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ சொன்னது போல் அரசுத்தரப்பில் எந்த ஆதாரமும் இல்லாத வழக்கில் 'அம்மாவின் 'புகழில் காழ்ப்புணர்வு கொண்டு மத்திய அரசு அவரின் புகழை அழிக்க வேண்டி உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த்துள்ளது என்பது மக்கள் அறிந்த ஓன்று . . இந்த வழக்கில் 'கர்நாடகாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை . ராஜாமணிக்கு குப்புசாமி 10 லச்சம் தரவேண்டும் .குப்புசாமிக்கு எதிராக ராஜாமணிதான் வழக்கு பதிவு செய்யமுடியும். ராமசாமி என்பவர் 'குப்புசாமி என்பவர் ராஜாமணிக்கு 10 லச்சம் தரவேண்டும் என்று வழக்கு தொடர முடியுமா ? இது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம் . தெரியும், ஆயினும் அவர்களும் 'இந்த மாபியா கும்பலிடம் பணிந்து செல்லும் நிலையில் இருப்பதால் அம்மாவிற்கு எதிராகவும் 'எந்த அரசு பதவியில் இல்லாத சசிகலாவிற்கு எதிராகவும் தீர்ப்பு கூறும் நிர்பந்தத்தில் இருக்கின்றனர். ஏதோ இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் ஒழியும் என்று யாராவது நம்பினால் . 2 ஜி ஊழல் வழக்கு, ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு , நிலக்கரி ஊழல் வழக்கு , ஏன் கனிம வளத்தை கொள்ளையடித்து அதிலும் பங்கு பெற்ற கர்நாடக பிஜேபி எட்டியூரப்பா , மற்றும் ரூ. 500 கோடியில் தனது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திய (அப்போது பணமதிப்பிழப்பு காரணமாக மக்கள் வங்கிகள் ,ATM வாயிலில் காத்திருந்த வேளையில் (இன்னும் அந்த வழக்குகளில் ஜாமினில் இருக்கும் ) ஜனார்த்தன ரெட்டி மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . அம்மா செய்த ஒரே தவறு மற்ற மாநில முதல்வர்கள் போன்று, மத்திய அரசு ,இந்த கார்பொரேட் மாபியா கும்பலுடன் இணக்கமாக செயல்பட்டு ,நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டு , மக்கள் எக்கேடு கேட்டால் என்ன ? என்றிருந்திருந்தால் இன்று கருணா குடும்பம் போன்று எந்தவித வழக்குகள் இல்லாமல் , தன வாழ்வை தொடர்ந்திருக்கலாம் . இப்போது சொல்கிறேன் 'ஆர் .கே.நகரில் .பிஜேபிக்கு விழும் ஓவ்வொரு வாக்கும் தமிழன் தனக்கு தானே கொடுக்கும் சவுக்கடிக்கு ஒப்பாகும். மாறாக நமது மாநிலத்திற்குரிய நிதியை கொடுக்க மறுத்து, தானாக உச்சநீதிமன்றம் அமைக்க இருந்த காவிரி மேலாண்மை வாரியம் அமையாது தடுத்து நின்று காவிரி டெல்டா விவசாய நிலங்களை பாழாக்கும் திட்டங்களை தொடர்ந்து செய்யும் மத்திய அரசிற்கு சவுக்கடி கொடுக்கும் முறையில் , இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற /நிற்கும் திமுக -காங்கிரஸ் -பிஜேபி , ஆலமரம் போன்று செழித்து நிற்கும் , அம்மா இன்னும் நூற்றாண்டு ஆட்சி செய்யும்' என்று சூளுரைத்த அதிமுகவை 'அழிக்க நினைப்பவர்களை ' முறியடித்து 'திமுக +காங்கிரஸ்+ பிஜேபி கூட்டணிக்கு சாவு மணி அடிக்கவேண்டும். அவன்தான் உண்மையான தமிழன்...

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
19-மார்-201714:14:25 IST Report Abuse

A. Sivakumar.ஆளும் இடங்களில் நல்லாட்சி கொடுங்க, ஊழல் பேர்வழிகள் உங்க கட்சியில் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்குங்க, எல்லா மதங்களையும் சமமாக பாவியுங்க, மனிதாபிமானம் அற்ற நடைமுறைகள் எந்த மதத்தில் இருந்தாலும், அதை சட்டபூர்வமாக நீக்குங்க, இவற்றை செய்தாலே போதும், காங்கிரஸ் இத்தாலி போய் செட்டில் ஆக மக்களே போர்டிங் பாஸ் கொடுத்திடுவாங்க. கூடவே, சாமி மாதிரி ஆட்களின் வாயைக் கொஞ்சம் கட்டிப் போடுங்க.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement