ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்...வாய்ப்பு? | ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்...வாய்ப்பு?: சசி, பன்னீர் அணிகள் ஆவணங்கள் குவிப்பால் ஆணையம் தவிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாய்ப்பு?
ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை
முடக்கப்படும்...சசி, பன்னீர் அணிகள்
ஆவணங்கள் குவிப்பால் ஆணையம் தவிப்பு

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என, ஓ.பி.எஸ்., மற்றும் சசி கோஷ்டியினர், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். இருதரப்பிலும், ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், முடிவு எடுக்க முடியாமல், ஆணையம் தவிக்கிறது. இதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப் படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

சசி, பன்னீர் அணிகள், ஆவணங்கள் குவிப்பால், ஆணையம் தவிப்பு

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா, ஓ.பி.எஸ்., தலைமையில், இரு அணிகளாக, அ.தி.மு.க., பிரிந்தது. இரு அணியினருமே, கட்சிக்கு உரிமை கொண்டாடி, டில்லியில் உள்ள, தலைமை தேர்தல் ஆணையத்தில் முறை யிட்டு உள்ளனர். இருதரப்பினருமே, இது சம்பந்தமாக, கட்டு கட்டாக ஆவணங்களை, ஆணையத்தில், தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர்.

'எம்.எல்.ஏ.,க்கள் அவர்கள் பக்கம் இருந்தாலும், கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பது, எங்கள் ஆட்கள் தான்' என, ஓ.பி.எஸ்., அணி தெரிவித்துள்ளது.
இதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பதவிகளில் இருப்பவர்கள் கையெழுத்திட்ட அபிடவிட் களை, ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆஜராக உத்தரவு: ஓ.பி.எஸ்., தரப்பில்

தரப்பட்டுள்ள ஆவணங் களுக்கு, சசி தரப்பில் பதில் தருவதோடு, அதற்குரிய ஆவணங்களையும், அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இருதரப்பு ஆவணங் களையும் பரிசீலித்து, ஆணையம் முடிவெடுக்க வேண்டும். இதற்காக, வரும், 22ல், இருதரப்பை யும், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படிஉத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், வரும், 23ம் தேதி, மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதற்குள், இரட்டை இலை சின்னம் யாருக்கு என, ஆணையம் முடிவெடுத்தாக வேண்டும். எனவே, 22ம் தேதி ஒரு நாள் விசாரணையில், சின்னம் யாருக்கு என்ற முடிவை, ஆணையம் எடுத்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை, ஆணையம் இறுதி முடிவு எடுக்காவிட்டால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, ஆணைய அதிகாரிகள் சிலர் கூறியதாவது:


சமாஜ்வாதி சின்னம் தொடர்பாக, அப்பா முலாயம் சிங் - மகன் அகிலேஷ் இடையே பிரச்னை ஏற்பட்ட போது, அகிலேஷ் நிறைய ஆதாரங்களைச் சமர்ப்பித் தார். ஆனால், முலாயம் எதையும் கொடுக்க வில்லை.எனவே, நாங்கள் உடனடியாக முடிவெடுத்து, சைக்கிள் சின்னத்தைஅகிலேஷுக்கு ஒதுக்கி உத்தரவிட்டோம். ஆனால், அ.தி.மு.க., விவகாரத்தில், இரண்டு பக்கமும் ஆவணங்கள் தந்துள்ளதால், உடனடியாக முடிவெடுப்பது கடினம்.

எனவே, இறுதி முடிவெடுக்கும் வரை, சின்னத்தை தற்காலிகமாக முடக்குவது தான் ஒரே வழி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ., தலையீடு: அ.தி.மு.க., விவகாரத்தில்,

Advertisement

பா.ஜ., தலைமை அதிக கவனம் செலுத்துகிறது. ஓ.பி.எஸ்., மீது, ஏற்கனவே மோடிக்கு பரிவு அதிகம். அதனால், சசி அணிக்கு இரட்டை இலை கிடைக்கக் கூடாது என்பதில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சசி தரப்பிற்கு, தேர்தல் ஆணையத்தில், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி வாதாட உள்ளார். காங்., ஆட்சியில், இவர் அரசு வழக்கறிஞராக பணியாற்றினாலும், மோடி, அமித் ஷா மற்றும் அருண் ஜெட்லிக்கு மிகவும் நெருக்கமானவர்.

அமித் ஷா சொல்லியே, சசி தரப்புக்கு மோகன் ஆஜராவதாக கூறப்படுகிறது. இதில் ஏதாவது, 'உள் குத்து' இருக்கிறதா எனவும் சிலர் சந்தேகப்படுகின்றனர். முலாயம் சிங் -- அகிலேஷ் தேர்தல் சின்னம் விவகாரத்தில், ஆணையத்தில், முலாயமிற்கு ஆஜராகிய வரும் இதே மோகன் தான். கடைசியில், முலாயம் சிங்கிற்கு எதிராக தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
19-மார்-201721:38:01 IST Report Abuse

மு. தணிகாசலம் பொதுச்செயலாளர் இல்லாமல் ஆகிவிடும்போது, அ.தி.மு.க. கட்சியை வழிநடத்துவது அக்கட்சியின் அவைத்தலைவரும் பொருளாளருமே என கட்சி விதிகளில் தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. இதை மட்டும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டால், இருதரப்பு விளக்கங்களையும் படித்து பார்க்காமலேயே, கண்ணை மூடிக்கொண்டு பன்றீர் அணியை அங்கீகரித்து ஆவன செய்யலாமே? ஏன் கூடாது?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-மார்-201719:43:30 IST Report Abuse

Rajendra Bupathiஐயா இரட்டை இலையே யாருக்கும் வேண்டாம்? அத எடுத்து ஆட்டுக்கு போட்டுடுங்க? வேற கழுத? இல்ல குதிரை ?இது மாதிரி ஏதாவது குடுங்கைய்யா ஒங்களூக்கு புண்ணீயாமா போவட்டும்?

Rate this:
Gopal.V. - bangalore,இந்தியா
19-மார்-201718:58:22 IST Report Abuse

Gopal.V.irattai ilai sinnaththai mudakki, thanithaniya veru oru sinnaththai odhukkinaalthaan makkal yaar pakkam irukkiraargal endru theriya varum...

Rate this:
19-மார்-201717:10:43 IST Report Abuse

AzhagurajSenthilKumarஇங்கு பார்க்க வேண்டியது அதிமுக சட்ட விதிகளே ஆகும். தேர்தல் ஆணையம் அந்த சட்ட விதிகளை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும்..அப்படி பார்க்கையில் அதிமுக சட்ட விதிகள் சசிக்கு எதிராகவே இருக்கிறது....

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
19-மார்-201712:36:44 IST Report Abuse

வந்தியதேவன்தப்பு இவங்க மேலே இல்லையா...? இவங்கள ஆட்சில உட்கார்றதுக்கு ஓட்டுப்போட்டவங்கள.. ..................................லே அடிச்சா சரியாகிடும்... ஆனா.. ஒண்ணு... ஆர்.கே.நகர் வாக்காளர்கள்... “அட்ரா... அட்ரா... அடிச்சுகிட்டே இருடா”ங்கற மாதிரி... ஆர்.கே.நகர்ல மட்டும் “மழை... மழை... பணமழை...”தான்... “வாழ்க... ஜனநாயகம்”... “வாழ்க... பணப்பிச்சை எடுக்கும் வாக்காளர்கள்”.....

Rate this:
spr - chennai,இந்தியா
19-மார்-201712:04:13 IST Report Abuse

sprஇரட்டை இலை சின்னத்தை வைத்துத்தான் அஇஅதிமுக ஆட்சி நடத்த வாய்ப்பு பெற்றது இப்பொழுது தாற்காலிகமாக அதனை முடக்கினாலும், ஆளும்கட்சிக்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை என்றாகிறதே முடக்கப்பட்ட சின்னத்தால் பெற்ற வெற்றி எப்படி வெற்றியாகும். மாநகராட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இது வெறும் கிடைத்த தேர்தல்தானே இதற்கு ஒரே வழி இந்தப் பிரச்சினை தீரும் வரை தேர்தலை ஒத்திவைப்பதே

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
19-மார்-201711:20:28 IST Report Abuse

Panneerselvam Chinnasamyரெண்டு பேர் ரெட்டை இலைக்கு வாதிடுகிறார்கள்... ரெண்டு பேரும் ஒரே குடும்பம் (அ தி மு க ) எனவே குடும்ப சொத்தை ரெண்டு பேருக்கும் பிரித்து வலது பக்க இலையை பன்னீருக்கும் இடது பக்க இலையை சசிக்கும் கொடுத்து விட்டால் ரெண்டு பேரும் சந்தோச படுவார்கள்.சந்தோசத்துடன் RK நகரில் இலையை எடுத்து கொண்டு ஓட்டு பிச்சை எடுக்கலாம்....மிகவும் ராசியானது...பாவம்... அவர்களுக்கு சரியா பிரித்து கொடுத்து தேர்தல் கமிசன் நீதியை நிலை நாட்டட்டும்...

Rate this:
Jayadev - CHENNAI,இந்தியா
19-மார்-201710:57:25 IST Report Abuse

Jayadevமுடக்கும் சாதிய கூறுகள் இல்லை அசெம்பிளியில் மெஜாரிட்டி உள்ளதால் சசி அணிக்கு அனுமதி வழங்கி , ஆட்சேபனை இருந்தால் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து முடிவு தெரிடந்த்து கொள்ளலாம் என சொல்லிவிடும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201709:00:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை... என்றால் பிரச்சினை தீர்ந்தது...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-மார்-201707:29:25 IST Report Abuse

தங்கை ராஜாஇங்கேயும் குதிரை பேரம். இது ஜனநாயக நாடு என்பதை எதிர்ப்போரின் கையில் அதிகாரம் இருப்பதால் கண்டெயினருக்கு தகுந்த படியே சின்னம் பெற்று தரப்படும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement