கோவாவில் காங்கிரசுக்கு அடி ஏன்?| Dinamalar

கோவாவில் காங்கிரசுக்கு அடி ஏன்?

Added : மார் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கோவாவில் காங்கிரசுக்கு அடி ஏன்?

கோவாவில், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், பா.ஜ., ஆட்சி அமைத்து விட்டது. காங்கிரஸ் முயன்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்; ஆனால், ஏன் முடியவில்லை? 'பணம் கொடுத்து, எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., வாங்கி விட்டது என ராகுல் கூறினாலும், உண்மை அதுவல்ல' என, காங்கிரஸ் கட்சியினரே கூறுகின்றனர்: அப்படி என்ன தான் நடந்தது?தேர்தல் முடிவு, 11ல், வந்தவுடன் கோவாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் மற்றும் வெற்றி பெற்ற, 17 எம்.எல்.ஏ.,க்களும் கூடியிருந்தனர்.
இவர்களில் மூன்று பேருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை. மற்ற எம்.எல்.ஏ.,க்களுடன் இந்த மூன்று பேரும் மறைமுகமாக பேரம் பேசியுள்ளனர்; இதில் உடன்பாடு ஏற்படவில்லை. 'நமக்குத்தானே அதிக, எம்.எல்.ஏ.,க்கள்
உள்ளனர். கவர்னர், நம்மைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். முதலில் வெற்றியைக் கொண்டாடுவோம்' என, மேலிடத் தலைவர் சொல்ல, அனைவருக்கும் விலை உயர்ந்த, 'ப்ளூ லேபில் ஸ்காட்ச்' வரவழைக்கப்பட்டது. இரவு முழுக்க குடி தான். குத்தாட்டமும் களை கட்டியது; விளைவு,- ப்ளூ லேபில் ஸ்காட்ச் போதை, குத்தாட்டம் என காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை.இவர்கள் குடித்து கும்மாளம் போட்ட அதே நேரத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கோவாவிற்கு அமித் ஷாவால் அவசரமாக அனுப்பப்பட்டார்.இரவு முழுக்க இஞ்ஜி டீ குடித்தபடியே, மற்ற சிறு கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் பேசி, பா.ஜ.,விற்கு ஆதரவைப் பெற்றார் கட்கரி.விடியற்காலை, 5:00 மணிக்கு, அமித் ஷாவிற்கு போன் செய்த கட்கரி, 'மனோகர் பரீக்கரை முதல்வர் ஆக்கினால் மற்ற கட்சிகள் ஆதரவு தரத் தயார்' என்றார்.
'பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்' என, சொல்லிவிட்டு பிரதமரிடம் பேசினார் அமித் ஷா. காலை, 8:00 மணிக்கு கட்கரிக்கு போன் செய்து, 'பிரதமர் சம்மதித்து விட்டார்' என, சொல்ல, 9:00 மணிக்கு, கவர்னரிடம் ஆதரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டன. இதை வைத்து, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைத்து விட்டார் கவர்னர்.
போதை தெளிந்து, 12:00 மணிக்கு எழுந்த காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., ஆட்சி அமைக்க போகிறது என,'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து, அதிர்ந்து போய் விட்டனர். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல், சிலர், மறுபடியும் ப்ளூ லேபிலை திறக்க ஆரம்பித்து விட்டனர். காங்கிரசுக்கு அடி விழ, ப்ளூ லேபில் ஒரு காரணம் என்றாலும், மேலிட பார்வையாளர் திக்விஜய் சிங் மற்றொரு காரணம் என்கின்றனர்.
தமிழகம் மீது மோடி கவனம்
ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்த துவங்கியுள்ளார் மோடி. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு பெரும் உதவி செய்தார். இதைத் தொடர்ந்து தமிழக பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
'தமிழகம் தொடர்பாக எந்த பிரச்னை என்றாலும் நீங்கள் நேரடியாக சென்று தீர்த்து வையுங்கள்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிறப்பு உத்தரவு பிறபித்துள்ளார், பிரதமர். இதனால் தான் ராமேஸ்வரம் மீனவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நேரடியாக களம் இறங்கி, சுமுகமாக தீர்த்து வைத்தார் நிர்மலா.
டில்லியில், தமிழக மாணவர் தற்கொலை விவகாரத்திலும், உடனுக்குடன் போலீஸ் வழக்கு பதிவு செய்ய வைத்த விஷயத்தையும் நிர்மலா தான் கையாண்டார். திறமையானவர், கடினமான வேலைகளையும் சுலபமாக முடித்து வைப்பவர் இவர் என்பதால், மோடி இவரிடம் தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.'இதற்கு காரணம், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பா.ஜ., வேட்பாளர்களுக்கே ஆதரவு தரவேண்டும் என்பது தான்' என்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - tamilnadu,இந்தியா
19-மார்-201710:30:45 IST Report Abuse
raja LKG UKG புஸ்தகத்தில் ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் ,கர்வத்தால்சோம்பேறித்தனத்தால் முயல் தோற்றது ஆமை ஜெயித்தது தற்போது பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை