கன்டெய்னர்களில் கட்டு கட்டாக கள்ள நோட்டு? | கன்டெய்னர்களில் கட்டு கட்டாக கள்ள நோட்டு?: சென்னை துறைமுகத்தில் திடீர் பரபரப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கன்டெய்னர்களில் கட்டு கட்டாக கள்ள நோட்டு?:
சென்னை துறைமுகத்தில் திடீர் பரபரப்பு

வெளிநாட்டில் இருந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், சென்னை துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 கன்டெய்னர், கட்டு கட்டாக கள்ள நோட்டு,

இதையடுத்து, துறைமுகத்தில் இருந்து, எந்த சரக்கு கன்டெய்னர்களையும் வெளியேற்றக் கூடாது என, அதிரடி தடை உத்தரவு போடப் பட்டது. தீவிர விசாரணையும், தேடுதல் பணியும் நடப்பதால், 1,000க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் முடங்கியுள்ளன.

அதிரடி சோதனை


கடல் மார்க்கமாக, கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளும், பயங்கர ஆயுதங்களும் கடத்தப் பட்டுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, நாட்டின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு துறைமுகங் களில், டி.ஆர்.ஐ., என்ற, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை யில் இருந்து,அதிரடி சோதனையை துவங்கினர். சென்னை துறைமுக சுங்க அதிகாரிகளுக்கு, 'இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னர்களை வெளியே அனுப்பக் கூடாது' என, அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடை விதிப்பு


அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய் னர்கள், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், நேற்று முன் தினம் மாலை முதல், 'ஜீரோ கேட்' எனப்படும்,

லாரிகள் நுழையும் பிரதான வாயிலும் மூடப் பட்டது. இதனால், நெரிசல் அதிகரித்ததோடு, வர்த்தகமும் பாதித்தது. எனினும், ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கன்டெய்னர்கள், தீவிர ஆய்வுக்கு பின், கப்பலில் ஏற்றப்பட்டன.

இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவு காரணமாக, கன்டெய்னர் பெட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மார்ச், 1 முதல் இறக்குமதி செய்யப்பட்ட, அனைத்து கன்டெய்னர் பெட்டிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. நேற்று மாலை, 3:00 மணி முதல், சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள, 32 சரக்கு பெட்டக நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர் பெட்டிகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டி.ஆர்.ஐ., அதிகாரிகளை கேட்ட போது, 'இது, மிகவும் ரகசியமான விஷயம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால், மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க முடியாது. நாடு முழுவதும் சோதனை நடந்து வருவது உண்மை தான்; அது, நாளையும் தொடரும்' என்றனர்.

ஆயுதங்கள் கடத்தலா?


இதற்கிடையில், பயங்கர ஆயுதங்கள் கடத்தப் பட்டுள்ளதால், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமைஅதிகாரிகள், துறைமுகத்தில் சோதனை நடத்துவதாக தகவல் வெளியானது. இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளை கேட்ட போது, அதை மறுத்தனர்.

ரூ.1,000 கோடி பாதிப்பு


துறைமுக வாயில் மூடப்பட்டதால், எண்ணுார் கடற்கரை சாலை, எர்ணாவூர், மணலி சாலை, ஜி.என்.டி., சாலை முழுக்க கன்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன. சென்னை துறைமுகத்தில்

Advertisement

இறக்குமதி நிறுத்தப்பட்டதால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, வர்த்தகர்கள் கூறினர்.

தேர்தல் பட்டுவாடா?


சென்னை துறைமுகம், இடைத்தேர்தல் நடை பெறும், ஆர்.கே.நகர் அருகே உள்ளது. இத் தொகுதியை சுற்றி, 10க்கும் மேற்பட்ட கன்டெய் னர் நிலையங்கள் உள்ளன. ஆர்.கே. நகர் இடை தேர்தலுக்கு பணப் பட்டுவாடா செய்யவே, அப்பணம் வந்திருப்பதாக, தொகுதி முழுவதும் வதந்தி பரவியது.

பாக்., சதியா?


இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை போன்று கள்ள நோட்டுகளை, பாக்., அச்சடித்து, நேபாளம், வங்கதேசம் வழியாக, நாட்டில் புழக்கத்தில்
விட்டு வருகிறது.

ஆனால், இந்திய அரசு துரித மாக செயல்பட்டு, பெரும்பாலான வழிகளை அடைத்துவிட்டது. எனவே, கன்டெய்னர் வழி யாக, கள்ள நோட்டுகளை அனுப்ப, அன்னிய சக்திகள் முயன்றிருக்கலாம் என, தெரிகிறது.

-- நமது நிருபர் குழு -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
20-மார்-201702:00:38 IST Report Abuse

POLLACHI  JEAYASELVAN   sanjose USAஆமா..... பழைய ரூபாய் நோட்டை ஒழித்தபோது.... இனி கள்ள நோட்டு அடிக்க முடியாது என்னு குறுந்தாடி மோடி ஒப்பாரி வைத்தாரே....? எல்லாமே பித்தலாட்டம்தானா....? நம் மாநிலத்திலும் ....மத்தியிலும் ...எமாற்றுப்பேர்வழிகள் ... பாவம்..இந்திய மக்கள் ....

Rate this:
Anandan - chennai,இந்தியா
21-மார்-201705:04:56 IST Report Abuse

Anandanநம்ம மக்கள் பொய்யை அசராமல் பேசுபவர்களை மட்டுமே நம்புவர்....

Rate this:
Janarthanan - Al Khor,கத்தார்
19-மார்-201719:14:44 IST Report Abuse

Janarthanan"""" இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை போன்று கள்ள நோட்டுகளை, பாக்., அச்சடித்து, நேபாளம், வங்கதேசம் வழியாக, நாட்டில் புழக்கத்தில் விட்டு வருகிறது.""" இது உண்மையா இருக்கும் என்றால் உன்னொரு " Demonetisaion" வருமா இந்த முறை 2500 note விட சொல்லுங்கப்பா

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
19-மார்-201712:53:50 IST Report Abuse

kuppuswamykesavanகூடுதலான சோதனை செய்யும் டீம்கள் அமைத்து விட்டால், மிக சீக்கிரமாக இந்த வேலை முடியுமே?.

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-மார்-201711:02:08 IST Report Abuse

ஜெயந்தன்இது நம்ப முடியவில்லை.. சென்னை துறைமுகத்தில் எல்லா ட்ரைலர்களும் வெள்ளிக்கிழமையிலிருந்து அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.. மூன்று நாட்களாக எதையும் கண்டு பிடிக்க வில்லை.. R .K நகர் தேர்தலில் தமிழக கட்சிகள் பணம் கொடுக்க போகிறார்கள் என்று கூவுவதற்குத்தான் பிஜேபி அரசு இப்படி செய்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழாமல் இல்லை...

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-மார்-201719:46:25 IST Report Abuse

Rajendra Bupathiஎல்லாத்துக்கு பி ஜேபி யா? அறிவு கொழுதுய்யா நீங்க?மிடாசைவிட்டு கொஞ்சம் வெளியே வந்து யோசனை பன்ணுங்க?...

Rate this:
Raja - Bangalore,இந்தியா
19-மார்-201710:38:25 IST Report Abuse

Rajaமத்திய நிதி அமைச்சரிடம் கேட்டால் அது எல்லாம் RBI பணம் என்பார். ஒரு வேளை இது வெளிநாட்டில் இருந்து மீட்டு வரப்படும் கருப்பு பணமாக இருக்குமோ. அப்படியென்றால் சீக்கிரமே நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பார்கள். எப்படியோ 5 வருடம் முடிவதற்குள் கொடுத்தால் சரி. மோடி கொடுப்பார் என்று நம்பி வாங்கிய கடனாவது அடைக்க உபயோகமாக இருக்கும்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
19-மார்-201712:14:08 IST Report Abuse

Anandanஅருமை....

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
19-மார்-201714:54:10 IST Report Abuse

N.Purushothamanராஜாக்கள் எல்லாம் மோடி உச்சரிப்பாளர்கள் ஆகி விட்டனர்.... ஆதரவாளர்களை விட விமர்சிப்பவர்கள் அதிகம் உச்சரிக்கிறார்கள்.... அதுவும் "அருமை" தான்..........

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-மார்-201719:48:14 IST Report Abuse

Rajendra Bupathiஐ?........ ஆசை?...... தோசை?.... வடை?..... அப்பளம்?.... ராஜா போதுமா? இன்னும் வேணுமா?...

Rate this:
Anandan - chennai,இந்தியா
21-மார்-201705:07:20 IST Report Abuse

Anandanபுருசோத்தமன் ராஜா ஒன்றும் இல்லாததை சொல்லவில்லையே கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் முறையான ஆவணம் இல்லாத பணம் இருந்த கண்டைனர் லாரிகள் பிடிபட்ட 3 நாட்கள் கழித்து மத்திய நிதித்துறை அமைச்சர் சொன்னதைத்தான் அவர் சொல்கிறார்....

Rate this:
chails ahamad - doha,கத்தார்
19-மார்-201710:22:30 IST Report Abuse

chails ahamadபரிசோதனை என்ற பெயரில் சந்தேகத்துக்கு உரிய கன்டெயினர்களை பாதுகாப்பு வளையத்தில் நிறுத்தி விட்டு , மற்ற கன்டெயினர்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் பரிசோதனை செய்து அவைகளுக்கு உரிய சுங்க தீர்வையை விதித்து விட்டு காலதாமதம் இல்லாமல் வெளியேற்ற வழி செய்ய வேண்டும் , அதனை செய்யாத பட்சத்தில் அந்த கன்டெயினர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காலங்கள் வரைக்கும் டெமரேஜ் என்ற கட்டணம் வசூலிப்பதையாவது தவிர்க்க வேண்டியது துறைமுக நிர்வாகத்தின் தார்மீக கடமையாக இருக்க வேண்டும் .

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மார்-201701:24:28 IST Report Abuse

மலரின் மகள்சிறப்பு புலனாய்வு மற்றும் ஆயுதப் படை அதிகாரிகளும், ஆர்பிஐ அதிகாரிகளும் உடனைடியாக சோதனைகளிலும் ஆய்விலும் இறங்க வேண்டும். அரசின் பல்வேறு அமைப்புகள் வெவ்வேறு கோணங்களில் ஆய வேண்டும். கிணறு தோண்ட பூதம் வெளிவந்தது போல நிறய ரகசியங்கள் வெளி வரலாம். நமது அதிகார பூர்வ வழிகளே கேட்வே போலத்தான் என்று பல வருடங்களாக பேச்சுக்கள் உண்டு. நாம் பாகிஸ்தான் என்று மட்டுமே அனைத்தையும் எண்ணி அவர்கள் மீது மட்டுமே பழியை போடாக் கூடாது. புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் திறமை இன்னும் பாகிஸ்தானிற்கு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனக்கு இமய மலையின் வடக்கே இருக்கும் பெரிய தேசத்தின் மீதும், உலகின் பெரியண்ணனின் மேலும் கூட எப்போதும் சந்தேகம் உண்டு. சாப்ட்வார் என்று ஒன்றை திறம் பட செய்கிறார்கள் பல வருடங்களாக. அது வெல்லாம் மேனாட்டு யுக்திகள். நாம் பொதுவாக அனைவரும் நன்றாக இருக்க வேணும் என்று நினைப்போம், ஆனால் அவர்களோ அவர்களின் வசதியை மட்டுமே paarpaargal. நாம் பல்வேறு கொண்டனைகளை அறிவியல் பூர்வமாக நமது தேசத்தை காக்க வேண்டும். பொது மக்கள் ஓ சி யில் கிடைக்கிறது என்று அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசை படுவதை நிறுத்த வேண்டும். பள்ளி கல்லூரியிலிருந்தே மாணவர்களுக்கு நல்ல போதனைகளை தர வேண்டும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement